எண்ணங்கள்
என்றும் அழிவதில்லை
ஆம் எண்ணங்கள்
என்றும் அழிவதில்லை
அது எப்போதும்
உயிருடன்தான் இருக்கும்.
எங்கிருக்கும் என்றால்
ஆகாசத்தில் கிடக்கும்
எந்த பிறவியில் வேண்டுமானாலும்
அதை உணரக்கூடிய சக்தியைப்
பெற்றொமானால் அதை அறிந்துகொள்ளலாம்.
ஆனால் அதனால் நமக்கு
எந்த பயனும் இல்லை.
நம்முடைய
மனம் சாவதே இல்லை
திரைப்படத்தை காட்டும் கருவிகளாகிய
உடல்கள்தான் அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும்
புது புது அவதாரங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன
அது நாம் பல லட்சக்கணக்கான
எடுக்கும் பிறவிகளோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது
அது இந்த ஜீவனாகிய நாம் ஒவ்வொரு பிறவிகளில் அடைந்த அனுபவங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது
உறக்கத்திற்கு முன் திரும்ப திரும்ப ஒரே
படங்களை நமக்கு போட்டுக் காட்டுகிறது.
சில பாத்திரங்கள் மீண்டும்
மீண்டும் வருகின்றன.
அவைகளோடு தினம் தினம்
சண்டை போடுகிறோம்.இல்லை
கொஞ்சி மகிழ்கிறோம்
பதிலுக்கு அந்த பாத்திரமும்
சண்டை போடுகிறது.
ஆனால் அந்த பாத்திரம் நம்முடன்
உண்மையில் சண்டை போடுவது கிடையாது
.நாம்தான் அந்த பாத்திரத்துடன்
சண்டை போடுவதாக
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
நம்முடன் அந்த பாத்திரம் சண்டை போட்டுவிட்டு
அது அதன் வேலையை பார்க்க போய்விடுகிறது.
இதே காட்சிகளைத்தான் நாம் பல பிறவிகளாக
பார்த்துக்கொண்டு /செய்து கொண்டு வருகிறோம்.
திரைப்படம் பார்க்கின்ற ஒருவன்
திரையில் ஓடும் படத்தில் வரும்
கதாபாத்திரங்களுடன் சண்டை போடுவானா?
சுய நினைவு உள்ளவன்
அவ்வாறு செய்யமாட்டான்.
ஆனாலும் பல பேர் படத்தில்
வரும் காட்சிகளை கண்டு மகிழ்ச்சியினால் குதிக்கிறார்கள், விசிலடிக்கிறார்கள். சில அழுகிறார்கள்.
சில பாத்திரங்களின் மேல்
கோபம் கொள்கிறார்கள்.
எப்படி இந்த செய்கை நகைப்புக்குரியதோ,
அறியாமையின்பாற் பட்டதோ
அதுபோல்தான் நாம் ஒவ்வொரு நாளும்
உறக்கத்திற்கு செல்லும் முன்பு காணும் நெடிய கனவுகளும்
நன்றாக உறங்குவதற்கு முன்பு காணும் சிறிய கனவுகளும்.
ஆழ்ந்த உறக்கத்தில் எதுவுமே இல்லை.
விழித்தால் அனைத்தும் மீண்டும் வந்து விடுகின்றன
நம்மை முட்டாளாக்குவதற்க்கு.
இந்த மயக்கத்திலிருந்து
எப்போது விடுபடப்போகிறோம்?
திரைப்படத்தை திரையில்
காண ஒளி வேண்டும்
அது இல்லையேல் திரைப்படம்
திரையில் விழாது.
அதுபோல் மனதின் பின்னால் இருந்து
அது காட்டும் காட்சிகளை காணச் செய்யும்
ஆன்ம ஒளி ஒன்று நம் இதயத்தில் உள்ளது .
அதை எப்போது அறிந்து கொள்ளப் போகிறோம்?
இதற்க்கெல்லாம் மூல காரணமாக விளங்கும்
மனதை என்று அழிக்கப் போகிறோம்?
அதுவரைக்கும் பிறப்பும் மரணமும்
நம் மனதில் வந்து வந்து போய்க்கொண்டிருக்கும்.
மனதை அழித்து விட்டால்
எண்ணங்கள் அழிந்துவிடும்.
நம்மை வாட்டும் கடந்த கால
பதிவுகளும் ஒழிந்துவிடும்.
நிகழ் காலத்தில் இன்பமாக
மரணபயமின்றி
மகிழ்ச்சியாக வாழலாம்.
என்றும் அழிவதில்லை
ஆம் எண்ணங்கள்
என்றும் அழிவதில்லை
அது எப்போதும்
உயிருடன்தான் இருக்கும்.
எங்கிருக்கும் என்றால்
ஆகாசத்தில் கிடக்கும்
எந்த பிறவியில் வேண்டுமானாலும்
அதை உணரக்கூடிய சக்தியைப்
பெற்றொமானால் அதை அறிந்துகொள்ளலாம்.
ஆனால் அதனால் நமக்கு
எந்த பயனும் இல்லை.
நம்முடைய
மனம் சாவதே இல்லை
திரைப்படத்தை காட்டும் கருவிகளாகிய
உடல்கள்தான் அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும்
புது புது அவதாரங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன
அது நாம் பல லட்சக்கணக்கான
எடுக்கும் பிறவிகளோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது
அது இந்த ஜீவனாகிய நாம் ஒவ்வொரு பிறவிகளில் அடைந்த அனுபவங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது
உறக்கத்திற்கு முன் திரும்ப திரும்ப ஒரே
படங்களை நமக்கு போட்டுக் காட்டுகிறது.
சில பாத்திரங்கள் மீண்டும்
மீண்டும் வருகின்றன.
அவைகளோடு தினம் தினம்
சண்டை போடுகிறோம்.இல்லை
கொஞ்சி மகிழ்கிறோம்
பதிலுக்கு அந்த பாத்திரமும்
சண்டை போடுகிறது.
ஆனால் அந்த பாத்திரம் நம்முடன்
உண்மையில் சண்டை போடுவது கிடையாது
.நாம்தான் அந்த பாத்திரத்துடன்
சண்டை போடுவதாக
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
நம்முடன் அந்த பாத்திரம் சண்டை போட்டுவிட்டு
அது அதன் வேலையை பார்க்க போய்விடுகிறது.
இதே காட்சிகளைத்தான் நாம் பல பிறவிகளாக
பார்த்துக்கொண்டு /செய்து கொண்டு வருகிறோம்.
திரைப்படம் பார்க்கின்ற ஒருவன்
திரையில் ஓடும் படத்தில் வரும்
கதாபாத்திரங்களுடன் சண்டை போடுவானா?
சுய நினைவு உள்ளவன்
அவ்வாறு செய்யமாட்டான்.
ஆனாலும் பல பேர் படத்தில்
வரும் காட்சிகளை கண்டு மகிழ்ச்சியினால் குதிக்கிறார்கள், விசிலடிக்கிறார்கள். சில அழுகிறார்கள்.
சில பாத்திரங்களின் மேல்
கோபம் கொள்கிறார்கள்.
எப்படி இந்த செய்கை நகைப்புக்குரியதோ,
அறியாமையின்பாற் பட்டதோ
அதுபோல்தான் நாம் ஒவ்வொரு நாளும்
உறக்கத்திற்கு செல்லும் முன்பு காணும் நெடிய கனவுகளும்
நன்றாக உறங்குவதற்கு முன்பு காணும் சிறிய கனவுகளும்.
ஆழ்ந்த உறக்கத்தில் எதுவுமே இல்லை.
விழித்தால் அனைத்தும் மீண்டும் வந்து விடுகின்றன
நம்மை முட்டாளாக்குவதற்க்கு.
இந்த மயக்கத்திலிருந்து
எப்போது விடுபடப்போகிறோம்?
திரைப்படத்தை திரையில்
காண ஒளி வேண்டும்
அது இல்லையேல் திரைப்படம்
திரையில் விழாது.
அதுபோல் மனதின் பின்னால் இருந்து
அது காட்டும் காட்சிகளை காணச் செய்யும்
ஆன்ம ஒளி ஒன்று நம் இதயத்தில் உள்ளது .
அதை எப்போது அறிந்து கொள்ளப் போகிறோம்?
இதற்க்கெல்லாம் மூல காரணமாக விளங்கும்
மனதை என்று அழிக்கப் போகிறோம்?
அதுவரைக்கும் பிறப்பும் மரணமும்
நம் மனதில் வந்து வந்து போய்க்கொண்டிருக்கும்.
மனதை அழித்து விட்டால்
எண்ணங்கள் அழிந்துவிடும்.
நம்மை வாட்டும் கடந்த கால
பதிவுகளும் ஒழிந்துவிடும்.
நிகழ் காலத்தில் இன்பமாக
மரணபயமின்றி
மகிழ்ச்சியாக வாழலாம்.
திரைப்படப் பாத்திரங்களுடன் மனிதன் ஒன்றிப்பொவதைச் சொல்லி விளக்கியிருப்பது சிறப்பு. ஆனாலும் கடைசி வரிகள் 'முடியுமா' என்றே நினைக்க வைக்கின்றன! :))))
ReplyDeleteஎன்ன தான் சிறப்பாக நடித்திருந்தாலும், "இவன் என்றால் பிடிக்காது" என்று படம் செல்வதற்கு முன்பே மனம் தீர்மானித்து விடுகிறது... இன்று நிழலைப் பார்த்து சீரழிந்து போகிறவர்கள் பல பேர் என்பதும் உண்மை...
ReplyDeleteஉங்களின் கருத்துரைக்காக :
ReplyDeleteLink : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Students-Ability-Part-14-and-LEADER.html