Monday, February 24, 2014

யார் இந்த "நான்"

யார் இந்த "நான்" 




இந்த உடலில் கை உணவை 
எடுத்து வாயில் போடுகிறது. 
அது ஒன்றும் சொல்வதில்லை 

ஆனால் உள்ளிருந்து ஒருவன் 
நான் சாப்பிடுகிறேன் என்கிறான்.
அந்த" நான்" யார்? 

இதேபோல்தான் கண் பார்க்கிறது 
ஆனால் உள்ளிருக்கும் ஒருவன்
 "நான்" பார்க்கிறேன் என்கிறான். 
இப்படி ஒவ்வொரு  செயலுக்கும் 
அவன் "நான்" என்று வாய்தா வக்கீல் போல் 
ஆஜராகிவிடுகிறான். 

இந்த "நான்" யார்? 

அந்த" நானின் " அடுத்த வேஷம். 

எனக்கு தலை வலிக்கிறது ,வலி மண்டையைப் பிளக்கிறது என்று கத்துகிறான்.அதுபோல் உடலில்,மனதில் எந்த வலி ஏற்பட்டாலும் 
அவன் அங்கு ஆஜராகிவிடுகிறான். 

இந்த "நான்" யார்? 

அந்த" நானின் " மற்றொரு வேஷம். 

ஒரு விலையுயர்ந்த பேனாவை வைத்திருக்கிறான். 
அதை யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.
உடனே யார் என்னுடைய பேனாவை எடுத்தது 
என்று உள்ளிருந்து எகிறுகிறான் 

இதுபோல் தனது என்று நினைத்துக்கொண்டிருக்கும் 
எந்த  பொருள் மீதும் மற்றவர் கை வைத்தால் 
அவ்வளவுதான். 

இந்த "நான்" யார்? 

நான் உறங்க செல்லுகிறேன் என்று சொல்கிறான். 
ஆனால் எங்கும் செல்வதில்லை 
உறக்கத்தில் கனவு காண்கின்றான். 
அப்போது அவன் ஒன்றும் சொல்வதில்லை.
ஆனால் கனவிலிருந்து விழித்ததும்  
" நான்" கனவு கண்டேன் என்கிறான். 

இந்த "நான்" யார்? 

உறக்கத்தில் எந்த நினைவும் இல்லை .
ஆனால் உறக்கத்திலிருந்து விழித்ததும் 
"நான்" நன்றாக உறங்கினேன் அல்லது 
சரியாக உறங்கவில்லை என்று சொல்கிறான்.

இந்த "நான்" யார்? 

இப்படி பல அவதாரங்கள் எடுக்கும் 
"நான் "பற்றிதான் பகவான் ரமணர் 
தெளிவாக "நான் யார்" என்னும் உபதேசமாகநமக்கெல்லாம்  அளித்துள்ளார். 

அந்த "நான் " பற்றி நம் இதயத்தின் 
உள்ளே சென்று விசாரிப்போம். 
நிலையான் இன்பம் பெற்று 
வாழ "விசா" பெறுவோம். 


  

4 comments:

  1. நல்ல கேள்விகள் ஐயா...

    நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
    நமக்குள் யார் யாரோ...?

    உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
    துணை யார் வருவாரோ...?

    நான் யார் நான் யார் நீ யார்...?
    நாலும் தெரிந்தவர் யார் யார்...?

    இந்த பாடல் ஞாபகம் வந்தது ஐயா ...

    ReplyDelete
    Replies
    1. நான் " பற்றி நம் இதயத்தின்
      உள்ளே சென்று விசாரிப்போம்.
      நிலையான் இன்பம் பெற்று
      வாழ "விசா" பெறுவோம்.

      Delete
  2. "நான் இருக்கும்வரை உனக்கு முக்தி கிடைக்காது" என்று ஒரு முனிவர் முக்தி கிடைக்க வழி கேட்ட மன்னனிடம் சொன்னாராமே... அது நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. "நானை" விரட்ட வில்லில் உடனே "நாணைப் "பூட்டுங்கள்

      Delete