Saturday, February 1, 2014

அபிராமி அந்தாதி (7)(பாடல்(1)

அபிராமி அந்தாதி (7)

அபிராமி அந்தாதி (7)





பாடல்(1) 1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் 
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை 
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

நம்மால் அபிராமியின் 
வடிவழகைக் காண இயலாது.

ஏனென்றால் தெய்வங்கள் 
கோடி சூரியனின் ஒளியை நிகர்த்த 
பிரகாசம் பொருந்தியவை. 

இந்த உலகில் அனுதினமும் நம் 
முன் வலம்  வரும் சூரியனை.
காலையில் உதிக்கும்போதும்,
மாலையில் மறையும் போதும் மட்டும்தான்
நம் ஊனக்கண்ணால் காண முடியும் 
அந்த நேரத்திற்குப் பிறகோ அல்லது 
முன்போ காண முடியாது. 

பகவத் கீதையிலே கண்ண  பரமாத்மா அர்ஜுனனுக்கு
தன்னுடைய விஸ்ரூப தரிசனத்தைக் காண்பதற்கு 
ஞானக் கண்ணை அளிக்கிறான்.
அப்படிஞானக் கண்ணைப் பெற்றும் 
சில நொடிகளுக்கு மேல் அர்ஜுனனால் அந்த காட்சியைக்  காண இயலவில்லை. உடனே அவன் கண்ணனிடம் வேண்டுகிறான்,
கண்ணா நீ மீண்டும் எனக்கு முன்போலவே
காட்சி கொடுத்துவிடு என்று வேண்டுகிறான்.

நிலைமை அவ்வாறிருக்க நம்முடைய
ஊனக் கண்களினால் உச்சி வேளை சூரியனை 
எவ்வாறு காண இயலும்.?

அபிராமியின் மேனியின் நிறம் மாதுளம்பூ
மொட்டுப்போன்று உள்ளதாக 
தன்னுடைய பக்தரான சுப்ரமணிய அய்யருக்கு 
தியானத்தில் அபிராமி காட்சி அளிக்கின்றாள். 

எப்படி என்றால் காலையில் உதிக்கின்ற 
சூரியன் போல் செந்நிறமாக காட்சியளிக்கின்றாள்.
அப்போது  அவனிடமிருந்து வீசும் செங்கதிர்கள் போல் அம்பிகையின் வடிவத்திலிருந்து
ஒளிக் கற்றைகள் வீசுகின்றன 

தெய்வங்களின் சிரசைச் சுற்றி
ஒளி வட்டம்  இருக்கும். 
அது உச்சி கால சூரியன்போல் எல்லா புறமும்
பரந்து ஒளி வீசுவதுபோல் உள்ளது என்கிறார். 

நமக்கெல்லாம் உடல் மற்றும் மனம் பற்றிய
சிந்தனைகளே மேலோங்கி நிற்கிறது. 

அகந்தையினால் அன்பு வடிவான் 
தெய்வத்தை உணரும் சக்தி இல்லை.

ஆனால்  நம் இதயத்தில் எந்த 
ஒரு அந்நிய சக்தியின் உதவியின்றி 
சுயமாக ஒளி வீசிக்கொண்டிருக்கும் 
ஆன்மாவை உணர்ந்த ஞானிகள் 
அம்பிகையை மாணிக்கம் போல்
உயர்வாக மதித்து போற்றுகிறார்கள். 

ஒளிவடிவான பரம்பொருளைக் காண 
நாமும் ஒளி  மயமாகவேண்டும்.

அதற்க்கு நம்முள்ளே உறையும் 
ஆன்ம ஒளியினை 
உணர்ந்து தெளிதல் வேண்டும்.

அப்போதுதான் ஒளி வடிவாக விளங்கும்
தெய்வங்களையும் நாம் 
தரிசித்து அனுபவிக்கமுடியும்.

அதற்கு நம் உடல்தான் ஆன்மா 
என்ற மயக்கத்திலிருந்து
விடுபவேண்டும். 
  
தாமரைப்பூவில் அமர்ந்து தன்னை
போற்றுவோருக்கெல்லாம் வாழ்வில்
வளத்தை தந்து அருள் செய்யும்
இலக்குமிதேவியால்
போற்றப்படுபவள் அபிராமி

மின்னல் கொடிபோல் ஒளி வீசுபவள்
இனிமையான குரலை உடையவள்

நறுமணம் வீசும் குங்கும நிற
வடிவுடையவளாகக்
அழகுடன்  காட்சி தரும்
அபிராமி அன்னை
என்னை எப்போதும் துன்பக் கடலில்
விழாமல் காக்கும் துணையாவாள்.
என்கிறார் அபிராமி பட்டர்.

பக்தியோடு துதிக்கின்ற நம்மையும்
அவள்தான்  காப்பாற்றுகிறாள்.


1 comment:

  1. அழகான... அருமையான... கருத்துள்ள வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete