Tuesday, February 11, 2014

எப்போது விடிவுகாலம் ?

எப்போது விடிவுகாலம் ?


இன்றைய ஆன்மிகம்
எப்படி இருக்கிறது?

இன்றைய ஆன்மிகம்
மக்களை ஆட்டிப் படைக்கும்
தொலைக்காட்சி அலை
வரிசைகள்போல் இருக்கிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்
ஒரே ஒரு தொலைக்காட்சி
அலை வரிசை மட்டும் இருந்தது



மக்கள் அவரவர்களுக்கு பிடித்த
காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டு
நிம்மதியாக இருந்தார்கள்.

இன்றோ ஆயிரக்கணக்கான
அலை வரிசைகள் வந்து விட்டன.
அதில் ஆன்மிகம் தொடர்பாக
சில நூறு அலைவரிசைகள் வந்துவிட்டன.



ஒவ்வொரு அலைவரிசையிலும்
வெவ்வேறு நபர்கள் புத்தகங்களைப் படித்துவிட்டு
அவர்கள் சொல்லும் வழிதான் கடவுளைக் காட்டும்
என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் ஆன்மீக நிகழ்சிகள்.
ஆனால் இடை இடையே
விளம்பர இடைவேளைகள் .
நாம் என்ன நிகழ்ச்சி பார்க்கிறோம்
என்பதை மறக்கும் அளவுக்கு
மக்களை வெறுப்பேற்றுகின்றன.

அதை தவிர காலையிலும்
ஆயிரக்கணக்கான தெய்வங்களின் மீதான்
துதிப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன

ஆனால் மக்களின் மனது
எதிலும் லயிப்பதில்லை.

அவர்களின் விரல்கள்
அலை வரிசைகளை
மாற்றிக்கொண்டே இருக்கின்றன்

மனிதர்களின் மனம்  எதிலும் ஒன்றுவதில்லை
ஈ போல் மலரில் ஒரு நிமிடம் உட்காருகிறது.



அடுத்த நிமிடம் ஈ மலத்தின் மீது உட்காருவதைப் போல
காமக் களியாட்ட நிகழ்ச்சி மீது கவனம் திரும்புகிறது.
அதைப் பார்ப்பதற்குள் செய்திகள், அடுத்து பங்கு சந்தை, அடுத்து பாடல்கள், என விரல்கள் ரிமோட் மீது தனி ஆவர்த்தனம் வாசிக்கத் தொடங்குகிறது.

ஈயை ஸ்ப்ரே அடித்து கொல்வது போல்
யமன் அவன் கையில் வைத்துள்ள
ரிமோட்டைக் கொண்டு நமக்குள்
ஓடிகொண்டிருக்கும்
காட்சிகளை நிறுத்திவிடுகிறான்

லட்சக்கணக்கான பேர் திருப்பதியிலும்



, பழனியிலும், சபரி மலையிலும்



இன்னும் ஏராளமான கோயில்களிலும் ,
சாமியார்களிடமும் கடவுளை
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மாலாலும், அயனாலும் தேடிக் காண முடியாத கடவுளை
என்னுளே  தேடிக் கண்டுகொண்டேன்.  என்று ஒருவர் சொன்னார்.
அனால் அவர் சொல்வதை யார் கேட்கிறார்கள்.?

ஆனால். வெளியில் தேடவேண்டிய வஸ்து கிடையாது
உன்னுள்ளே தேடு என்றார்.ஒருவர்
அதற்கு யாரும் தயாரில்லை



தோன்றி மறையும் வடிவங்களை நாடாதீர்.
என்றும் மறையாது  நிலைத்து நின்று காட்சி தரும்
ஆன்ம ஜோதியை அறிந்து மீண்டும்
பிறவா நிலையை அடைவீர் என்று ஒருவர் சொன்னார்.
அவர் சொல்வதை யாரும்  கேட்கவில்லை.



எல்லோர் சொல்வதையும் கேட்டுக்கொள்கிறார்கள்.
ஆனால் எதையும் கடைபிடிப்பதில்லை.

எந்த தத்துவத்தையும் புரிந்துகொள்ளாமையினால்
எதிலும் பிடிப்பில்லை.

 இடத்தில் கிணறு தோண்டினால் நீர் கிடைக்கும்.
பல இடங்களில் தோண்டினால்
ஒருதோண்டிக்கு கூட நீர் கிடைக்காது என்றார் ஒருவர்.



அரசியலில் கட்சி மாறிகள் போல் ஆன்மீகத்திலும்
அதே நிலை. முடிவு. குழப்பம் இறுதி வரை.

எப்போது மனம் ஒருமைப்படுகிறதோ
அப்போதுதான் விடிவுகாலம்.




4 comments:

  1. நமக்குள்ளே இருப்பதை உணர்ந்தாலே பெரிய விசயம் தானே ஐயா...

    பேரம் பேச எல்லா மலைகளிலும் கூட்டம் கூடுகிறதே...!

    ReplyDelete
    Replies
    1. நாம் தனியாகத்தான் வந்தோம்
      தனியாகத்தான் போகவேண்டும்
      யாரும் நம்முடன் வரமாட்டார்கள்.
      நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களைத் தவிர.
      எண்ணங்களைக் காலி செய்துவிட்டால் மீண்டும் பிறவி இல்லை.

      Delete
  2. மனம் ஒரு குரங்குதானே... அதுதான் அங்குமிங்கும் தாவுகிறது! :)))

    ReplyDelete
    Replies
    1. அந்தக் குரங்குக்கு ராமரசம்
      அவ்வப்போது குடிக்கக் கொடுங்கள்
      அப்புறம் அது TV remote ஐ விட்டுவிட்டு
      தனக்குள் இருக்கும் ராமனை பற்றிக்கொண்டுவிடும்.

      Delete