Sunday, February 9, 2014

குறை ஒன்று (ம் ) இல்லை மறை மூர்த்தி கண்ணா !(part-4)



குறை ஒன்று (ம் ) இல்லை

மறை மூர்த்தி கண்ணா !(part-4)



ராஜாஜியின் ஆன்மீகப் பணி 



இராமாயணமும் மகாபாரதமும் 

இராமாயணமும்
மகாபாரதமும் இதிகாசங்கள்

என்றும் வாடா மலர்கள்
போல் இருக்கும்
இவையிரண்டும்
வட மொழியில் உள்ளவை.

மொழி தெரியாதவர்களுக்கு
அவரவர் மொழியில்
அந்த காவியங்கள் வந்துவிட்டன .

இருந்தும் பல ஆயிரம் பக்கங்கள் இருக்கும்
அவைகளை படிப்பதற்கோ அவைகளை
புரிந்துகொள்வதர்க்கோ தற்காலத்தில்
நேரமும் இல்லை,பொறுமையும் இல்லை,
 நாட்டமும் இல்லை.
இந்தக் கால மக்களுக்கு.



அதனால் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில்
எளிமையாக ஆங்கில மொழியில்
ஆக்கித்தந்தார்.  மூதறிஞர் ராஜாஜி.




அவற்றை பலமுறை படித்திருக்கிறேன்.
இரண்டு நூல்களிலும் தத்துவங்களை
தெளிவாக விளக்கி எழுதியிருப்பார்.
அப்படியே அனுதினமும் படித்து
உள்ளம் தெளிவு பெறலாம்.


பல புத்தகங்கள்
தகவல்களை தருகின்றன.

ஒரு சில புத்தகங்கள்தான் ஞானத்தை தரும்
கருவூலங்களாக பல்லாயிரம் ஆண்டுகளாக
உள்ளுணர்வைத் தூண்டி  நம்மை உயர்ந்த நிலைக்கு
கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவை.

அவற்றில் பல  மூல வடிவிலே
நமக்கு தெரியாத மொழியில் இருக்கும்
அனைவரும் கற்று உணர இயலாது.
 ஆனால் அதை படித்து உணர்ந்து அனைவருக்கும்
 புரியும்வகையில் எழுதப்பட்ட நூல்கள்
நமக்கு வரப்பிரசாதம் என்றே கொள்ள வேண்டும்.

புத்தகம் என்பது
படித்து தெளிவதர்க்கே

அறியாமையை போக்கிக்  கொள்வதற்கே  அன்றி
அலமாரியில் வைத்து அழகு பார்க்க அல்லவே ?

அதைப் போன்ற புத்தகங்களை அனுதினமும்
சில பக்கங்களையாவது படிக்க வேண்டும்.
அதில் உள்ள கருத்துக்களை சிந்தனை செய்ய வேண்டும்.
அப்போதுதான் புத்தகத்தை வாங்கியதன்
நோக்கம் நிறைவேறும்

அதில் உள்ள நல்ல கருத்துக்களை
உள் வாங்கி கொள்ளவேண்டும்.

புத்தகத்தை பூச்சிகள் தின்றுவிடும்
அவைகளின் வயிறு நிறையும்
அதற்கு அதனால் ஞானம் பிறக்காது.

ஆனால் மனிதர்களாகிய
நாம் அப்படி அல்லவே?

நம்முடைய   உடலை  காலம்
என்னும் கரையான் அரித்து
தின்று கொண்டு இருக்கிறது

பாம்பு தவளையை விழுங்குவதுபோல்
காலன் நம் ஆயுளை
நமக்குத் தெரியாமல்
விழுங்கி கொண்டிருக்கிறான்.

மாயையில் நம்மை மூழ்கடிக்கும்
நூல்களைப் படித்து நேரத்தை வீணாக்காமல்
அதிலிருந்து நம்மை மீட்கும் வழியைக் காட்டும்
நூல்களைப் படித்து தெளிய வேண்டும்



ராமனின் சரிதமும்
கண்ணன் கனிஅமுதும்



அனுதினமும்படிக்க வேண்டியவை .
வாழ்வில் நமக்குநல்ல வழிகளைக் காட்டும்
மனதிற்கும் அமைதியைத் தரும்.                                                                                                                                                      
ராம நாம் ஜெபிப்போம்
கண்ணனின் மொழிகளை
புரிந்துகொள்வோம்.

அர்த்தமுள்ள
வாழ்வை வாழ்வோம்.





3 comments:

  1. கரையான் அரித்து தின்பதற்கு முன், அர்த்தமுள்ள வாழ்வை அறிந்து கொள்ள வேண்டும் எனும் விளக்கங்கள் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. varadarajan srinivas Rangachar
    3:04 PM (2 hours ago)

    to me
    English
    Tamil Translate message
    Turn off for: English
    Respected Sir, This was stopped in mid-way. COuld you kindly continue. You had written superbly and stopping it in the middle is a big "KURAI". Pl continue.

    ReplyDelete
    Replies
    1. Sure sir,
      I will continue. In the meanwhile several new topics have sprung up.
      Thank you for reminding me

      Delete