Thursday, February 20, 2014

ஆனந்தம் எங்கே இருக்கிறது?

ஆனந்தம் எங்கே இருக்கிறது?

ஆனந்தம். ஆனந்தம் ஆனந்தமே

இதைதான் எல்லோரும் நாடுகிறார்கள்.

தேடுகிறார்கள். இல்லாவிடில்
வாடுகிறார்கள்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.
எவ்வளவு அழகாக உள்ளது. 

உள்ளத்தில் அமைதியும் ஆனந்தமும்
இருந்தால் அல்லவோ
அது முகத்தில் பிரதிபலிக்கும்?

ஒரு சிற்பியிடம், நீங்கள் எப்படி இவ்வளவு
அழகான சிற்பங்களை கல்லில் வடிக்கிறீர்கள்
என்று ஒருவன் கேட்டான்.

அதற்க்கு அந்த சிற்பி பதில் சொன்னார்.

அழகான சிலைகளும் வடிவங்களும் 
அந்த கல்லினுள் ஏற்கெனவே இருக்கின்றன. 
அதை மூடியிருந்த தேவையற்ற பகுதிகளை 
 மட்டும்தான்  நான் அகற்றினேன்  என்றார். 

அதுபோல்தான் நம் மனதிலும் இன்பமும், 
மகிழ்ச்சியும் கொட்டிக் கிடக்கிறது.

அதை மறைத்திருக்கும், கவலைகளையும், 
அவநம்பிக்கைகளையும் நீக்கி விடுங்கள். 
இன்பம் தானாகவே வெளிவரும். என்றார். 

இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம்.
இன்பத்தை வெளியே தேடி அலையாமல்
நம்முள்ளே இருக்கும் இன்பத்தை அடைந்து
இன்புறுவோம்.
அனைவர்க்கும் அதை
அள்ளி அள்ளி கொடுப்போம்.





Photo: LOVE  and LEADERSHIP : 
 " DUTY  without love is deplorable. Duty with love is desirable. Love without duty is Divine. DUTY implies force or compulsion while LOVE is spontaneous and expresses itself without external promptings"-  .


5 comments:

  1. ஆனந்தமும் வேண்டாம். அவஸ்தையும் வேண்டாம். ஆனந்தம் வந்தால் கொஞ்ச நேரம்தான் இருக்குமோ என்ற சந்தேகமும், அடுத்து அவஸ்தை வருமோ என்ற பயமும் இருக்கும். அவஸ்தை வந்தால் இது தீரவே தீராதோ என்ற மயக்கம் வரும்! :))))

    ReplyDelete
    Replies
    1. இன்பம் துன்பம் இரண்டையும் கடந்து நிலையாய் நிலைத்து நிற்கும் ஆனந்தம் உங்கள் உள்ளே உள்ளது அதை உணர்ந்துகொண்டால் பயப்படட. தேவையில்லை .அதற்க்கு நீங்கள் உங்கள் கவனத்தை உள்ளே செலுத்த வேண்டும். .

      Delete
  2. உங்கள் கால் முற்றிலும் குணமாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருக்கிறேன்
      மூன்றாவது காலுடன். நன்றி உங்கள் விசாரிப்பிற்கு

      Delete
  3. சிற்பி எவ்வளவு எளிதாக சொல்லி விட்டார்...!

    ReplyDelete