எண்ணங்கள் என்றும் அழிவதில்லை(தொடர்ச்சி)
எண்ணங்கள்
என்றும் அழிவதில்லை
என்றும் அழிவதில்லை
இந்த கட்டுரை தொடர்பாக திரு ஸ்ரீராம் எழுப்பியுள்ள கருத்துகளுக்கு இவன் சிந்தனையில் தோன்றியவை.
திரைப்படப் பாத்திரங்களுடன் மனிதன் ஒன்றிப்பொவதைச் சொல்லி விளக்கியிருப்பது சிறப்பு. ஆனாலும் கடைசி வரிகள் 'முடியுமா' என்றே நினைக்க வைக்கின்றன! :))))
ஏன் முடியாது ?
இந்த உலகத்தை விட்டுப் போனவர்களுக்காக
பணத்தை வாரி இறைக்கும் இந்தகேடுகெட்ட
கலாசாரம் ஒழிந்தால்தான் இந்த உலகம் உருப்படும்.
அது வீட்டில் இருக்கும் நம் குழந்தைகளாகட்டும்
பொதுமக்கள் நலம் கருதி
உண்மையை வெளிக்கொணர முயலும் பொதுநல
விரும்பிகலாகட்டும். அவர்களுக்கும் இதே கதிதான்.
ஏன் என்ற கேள்வி கேட்காவிட்டால்
இங்கு வாழ்க்கையே இல்லை
என்று ஒரு கவிஞன் எழுதிவைத்தான்,
அதை பாடி வைத்தான் ஒருவன்
,நாமும் அதை கேட்டு வைத்தோம்.
மனம் எனும் வங்கியின்
ரகசியப் பெட்டகத்திலே.பத்திரமாக
ஞானக் கருவூலங்கலான
உபநிஷதங்களும் அதைத்தான்
வலியுறுத்துகின்றன .
எந்த செய்தியையும்
அப்படியே ஏற்றுக்கொள்ளாதே
அதைப் பற்றி சிந்தி
மந்திபோல் போல்மனம் மயங்கி
இருக்காதே .
ஐயங்கள் இருந்தால்
கேள்விகள் கேட்டு தெளிவு பெறு
மூடனைப் போல் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே
அதைத்தான் திருவள்ளுவரும் கற்க கசடற என்கிறார்.
அதன்பிறகு கற்றபின் நிற்க அதற்குத் தக
கற்றதின்படி வாழ்க்கை நடத்த வேண்டும். என்கிறார்.
அவர் பேச்சை யார் கேட்கிறார்கள். ?
இன்றுகற்பது காசு பார்ப்பதற்கு மட்டும்தான் என்ற கொள்கை
கருவறை முதல் கருவறை வரைக்கும் போதிக்கப்படுகிறது.
இன்னும் ஒரு படி மேலே போனால் கல்லறைக்கு போன பிறகும்.
அதன் மீது லட்சக்கணக்கில் செலவு செய்து நினைவகம் கட்டவும்,
சிலை வைக்கவும், ஆண்டுதோறும் பிறந்த, இறந்த, நாள்
விழாக் கொண்டாடவும் காசை வாரி இரைக்கும்
கலாசாரம் பெருகிவிட்டது.
உயிரோடு இருப்பவனுக்கும், உழைப்பவனுக்கும்
வயிறார உண்ண உணவு கிடைப்பதில்லை.
மழையில் குளிரில் ஒதுங்க இடம் இல்லை
பணத்தை வாரி இறைக்கும் இந்தகேடுகெட்ட
கலாசாரம் ஒழிந்தால்தான் இந்த உலகம் உருப்படும்.
ஆனால்கேள்வி கேட்டு உண்மையை
ஐயங்களை அகற்றிக்கொள்ளும்
முக்கிய இந்த செய்தியை பெட்டகத்தில்
வைத்துவிட்டதையே மறந்து விட்டோம்.
கேள்வி கேட்பவன் அடக்கப்படுகிறான்
ஒடுக்கப்படுகிறான், ஒதுக்கப்படுகிறான்.
சில இடங்களில் இந்த உலகத்தை
விட்டே அகற்றப்படுகிரான்.
பொதுமக்கள் நலம் கருதி
உண்மையை வெளிக்கொணர முயலும் பொதுநல
விரும்பிகலாகட்டும். அவர்களுக்கும் இதே கதிதான்.
போகப் போக பெட்டகத்தை திறக்கும்
சாவியையே தொலைத்துவிட்டோம்.
நாமும் மற்றவர்களின் சிந்தனைகளுக்கு நம்மை
பலி கடா ஆக்கிக்கொண்டு
ஒவ்வொரு கணமும் அல்லல் படுகின்றோம்.
நம் நலம் நாடி உள் மனம் கூறும் எதையும்
நாம் செவி மடுப்பது கிடையாது.
எப்போது அதை கேட்க நமது கவனத்தை
உள்ளே திருப்புகிறோமோ அதுவரை இந்த உலகில்
அமைதி என்பது காவல் துறையினரால்
கண்டுபிடிக்கமுடியாமல்கைவிடப்பட
குற்றவாளியாகத்தான் நம்மிடையே
உலா வந்து கொண்டிருக்கும்
படம் : மகாநதி
ReplyDeleteபேய்களை நம்பாதே... பிஞ்சிலே வெம்பாதே... நீ யோசி ஹோய்...
நாளொரு பொய்வாக்கு-சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்...
அச்சங்கள் எனும் பூதம் உனை அண்டாமல் அதை ஓட்டு...
பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு...
அதில் ஏமாந்தால் மனம் தினம் கெடும்...
எதை யார் சொன்ன போதும்-எதிர்க்கேள்வி ஒன்று கேளு...
பெரியோர்கள் சொன்ன பாடம்-அறிவாலே எடை போடு...
ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே...
ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே...
மூட எண்ணத்தை தீவைத்து மூட்டு...
அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு...
உழைக்காமல் வம்பு பேசி அலைவானே அவன் பேய்...
பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம்...
வீராதி வீரன் நீ என்று உலவு...
ஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு...
நீ நேருக்கு நேர் நின்று பாரு...
எதையும் ஏனென்று ஏதென்று கேளு...
சிறப்பான விளக்கத்திற்கு நன்றி ஐயா...
வாழ்த்துக்கள்...
நாமும் மற்றவர்களின் சிந்தனைகளுக்கு நம்மை
Deleteபலி கடா ஆக்கிக்கொண்டு ........
வாழ்த்திற்கு நன்றி DD
ReplyDeleteவிளக்கங்கள் படித்தாலும், கஷ்டம்தான் ஸார்.. பழகிப் பார்க்க வேண்டும்! :)))