அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-1)
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் !
போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச்
செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன்
நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி கதிர் மதியம்
போல் முகத்தான் நாராயணனே
நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ எம்பாவாய்
மழைக்காலம் முடிந்தது
எங்கும் பசுமை .
கண்ணுக்கு இதமூட்டும்காட்சிகளை
உடலுக்கும் மனதிற்கும்
இன்பம் தரும் மாதம் மார்கழி மாதம்
பகலில் வெப்பம் தரும் ஆதவன் ஒளி
இரவிலோ குளிர்ந்த முழு நிலவு
இதமான வீசும் நிலையில்
பிறக்கிறது மார்கழி மாதம்
என்கிறாள் ஆண்டாள் .
இப்படிப்பட்ட இன்பம் தரும்
சூழல் நிறைந்திருக்கும்போது
இன்பமே வடிவான
,நம் இதயத்தில் உறையும் இறைவனைப்
பற்றி நினைக்க வேண்டாமோ என்கிறாள் கோதை
புறத்தே சிலை வடிவாய் காட்சி தரும்
இறைவனை தினமும் வணங்கி
அவன் வடிவை நம் மனத்தே நிலை நிறுத்தும்
தத்துவம்தான் நம் வழிபாட்டு முறையன்றோ!
இருப்பிடம் வைகுண்டம்
என்று ஒரு ஆழ்வார் பாடி வைத்து போனார்
அதை பிடித்துக்கொண்டாள் ஆண்டாள்
அதுபோல் தான் வசிக்கும் இடத்தையே
கண்ணன் அவதரித்த ஆயர்பாடியாக
நினைத்துக்கொண்டாள் கோதை.
சுற்றியுள்ளவர்கள் அனைவரும் ஆயர்குல சிறுமிகளானார்கள்.அவர்களையெல்லாம்
அழைத்து கூறலானாள்
கூர்மையான வேலைத் தாங்கிய
நந்தகோபனின் மைந்தனும்,
ஏற்றம் தரும் விழிகளை உடைய யசோதை
என்பவளின் இளஞ்சிங்கம் போன்ற
நடையை உடைய மகனாகிய கண்ணபிரானை
மழைக்கால மேகம்போல் நிறம் கொண்டவனை,
கதிரவனைப் போல் ஒளி வீசும் முகம் கொண்டவனும்,
அதே நேரத்தில் முழுநிலவின் குளிர்ச்சியான
பார்வை கொண்டவனும் ஆகிய நாராயணனே
நம் அனைவரையும் காத்து நமக்கு
வேண்டியதனைத்தும் தருபவன் என்பதை
இந்த உலகத்தோர்உணர்ந்து கொண்டு
உய்ய வேண்டும் என்று
என்று இந்த பாசுரத்தில்
ஆண்டாள் நமக்கு தெரிவிக்கிறாள்.
இந்த உடல் உதிர்ந்த பிறகு
எப்படியும் மீளா உறக்கத்தில்தான்
கிடக்கப் போகிறோம்.
அதனால் உயிருடன் இருக்கும்போதே
உறக்கத்தை விட்டு எழுந்து
அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி.
நம்மை காக்கும் கண்ணனை
வணங்கவேண்டும். (இன்னும் வரும் )
இந்த பாசுரத்தை கேட்டு இன்புற இணைப்பு
கீழே. அனுப்பிய திரு பாஸ்கரன் சிவராமனுக்கு நன்றி.
https://mail.google.com/mail/?shva=1#sent/142fe0a7d6225e94?projector=1
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் !
போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச்
செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன்
நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி கதிர் மதியம்
போல் முகத்தான் நாராயணனே
நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ எம்பாவாய்
மழைக்காலம் முடிந்தது
எங்கும் பசுமை .
கண்ணுக்கு இதமூட்டும்காட்சிகளை
உடலுக்கும் மனதிற்கும்
இன்பம் தரும் மாதம் மார்கழி மாதம்
பகலில் வெப்பம் தரும் ஆதவன் ஒளி
இரவிலோ குளிர்ந்த முழு நிலவு
இதமான வீசும் நிலையில்
பிறக்கிறது மார்கழி மாதம்
என்கிறாள் ஆண்டாள் .
இப்படிப்பட்ட இன்பம் தரும்
சூழல் நிறைந்திருக்கும்போது
இன்பமே வடிவான
,நம் இதயத்தில் உறையும் இறைவனைப்
பற்றி நினைக்க வேண்டாமோ என்கிறாள் கோதை
புறத்தே சிலை வடிவாய் காட்சி தரும்
இறைவனை தினமும் வணங்கி
அவன் வடிவை நம் மனத்தே நிலை நிறுத்தும்
தத்துவம்தான் நம் வழிபாட்டு முறையன்றோ!
இருப்பிடம் வைகுண்டம்
என்று ஒரு ஆழ்வார் பாடி வைத்து போனார்
அதை பிடித்துக்கொண்டாள் ஆண்டாள்
அதுபோல் தான் வசிக்கும் இடத்தையே
கண்ணன் அவதரித்த ஆயர்பாடியாக
நினைத்துக்கொண்டாள் கோதை.
சுற்றியுள்ளவர்கள் அனைவரும் ஆயர்குல சிறுமிகளானார்கள்.அவர்களையெல்லாம்
அழைத்து கூறலானாள்
கூர்மையான வேலைத் தாங்கிய
நந்தகோபனின் மைந்தனும்,
ஏற்றம் தரும் விழிகளை உடைய யசோதை
என்பவளின் இளஞ்சிங்கம் போன்ற
நடையை உடைய மகனாகிய கண்ணபிரானை
மழைக்கால மேகம்போல் நிறம் கொண்டவனை,
கதிரவனைப் போல் ஒளி வீசும் முகம் கொண்டவனும்,
அதே நேரத்தில் முழுநிலவின் குளிர்ச்சியான
பார்வை கொண்டவனும் ஆகிய நாராயணனே
நம் அனைவரையும் காத்து நமக்கு
வேண்டியதனைத்தும் தருபவன் என்பதை
இந்த உலகத்தோர்உணர்ந்து கொண்டு
உய்ய வேண்டும் என்று
என்று இந்த பாசுரத்தில்
ஆண்டாள் நமக்கு தெரிவிக்கிறாள்.
இந்த உடல் உதிர்ந்த பிறகு
எப்படியும் மீளா உறக்கத்தில்தான்
கிடக்கப் போகிறோம்.
அதனால் உயிருடன் இருக்கும்போதே
உறக்கத்தை விட்டு எழுந்து
அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி.
நம்மை காக்கும் கண்ணனை
வணங்கவேண்டும். (இன்னும் வரும் )
இந்த பாசுரத்தை கேட்டு இன்புற இணைப்பு
கீழே. அனுப்பிய திரு பாஸ்கரன் சிவராமனுக்கு நன்றி.
https://mail.google.com/mail/?shva=1#sent/142fe0a7d6225e94?projector=1
இப்படிப்பட்ட இன்பம் தரும்
ReplyDeleteசூழல் நிறைந்திருக்கும்போது... நன்றாக உறங்குகிறோம் ஐயா... அதுதான் உண்மை...
தங்களின் கருத்துரைக்காக :
தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...
விளக்கம் :
http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html
Proceed My best wishes. DD
Deleteஅழகான படங்கள். அற்புதமான விளக்கங்கள். அருமையான பாசுரம். ஆண்டாளுக்கும் அண்ணாவுக்கும் நமஸ்காரங்கள்.
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி vgk
Delete