திருமலை வாழும் ஈசனே
மலை முகட்டில் முளைத்தெழும்
ஆதவன்போல் ஒளி வீசும்
ஸ்ரீனிவாசனே
நிலையாய் நெடுங்காலம் நின்று
அருள் செய்கின்றாய் நின்னை
நாடி வருவோர்க்கு
உன்னைக் காண வருவோர்
களைப்பு தீர படிப்படியாய் அன்னம் வடித்து
தாயன்போடு பசி தீர்க்கின்றாய்
படிப்படியாய் ஏறி வரும் பக்தர்களின்
வாழ்வில் படிப்படியாய் முன்னேற்றம்
தந்து மகிழ்விக்கின்றாய்.
முடி காணிக்கை அளிப்பவர்களின்
மனதில் மண்டிக் கிடக்கும்
அகந்தையை அடியோடு
அழிக்கின்றாய்.
செல்வத்தை சேர்த்துவிட்டு
செய்வதறியாது திகைக்கும்
மனிதர்களை உன்னிடம் அழைக்கின்றாய்
அவர்களின் தாபத்தை போக்குகின்றாய்
அவர்களிடம் பெற்ற செல்வதை
அடியவர்களுக்கே திரும்ப அளிக்கின்றாய்
அளித்தவர்களின் பாவ சுமையை
குறைக்கின்றாய். புண்ணியமாய்
மாற்றுகின்றாய்.
உன் திருவடியில் கோயில் கொண்ட
அலர்மேல் மங்கையோ அடியவர்களின்
வறுமையை அழித்தொழிக்கின்றாள்
ஆனந்த வாழ்வு அருளுகின்றாள்
என் மனம் உலகளந்த உத்தமனாம்
உன் புகழே எப்போதும் சிந்திக்கட்டும்
ஏழேழு பிறவிகளிலும் உன் நினைவு
என்னை விட்டு அகலாதிருக்கட்டும்
என்றும் உன் வலமார்பில் உறையும்
இலக்குமி தாயார் போலே.
திருமலை வாழும் ஈசனே
திருமகள் இதயத்தில்
உறையும் நேசனே
பரிவோடு காக்கும் கேசவனே
அடியவர்களை அல்லல் வராது
காக்கும் அரங்கனே
அன்போடு உன்னை பணிகின்றேன்
அழியாத பதம் பெறவே.
மலை முகட்டில் முளைத்தெழும்
ஆதவன்போல் ஒளி வீசும்
ஸ்ரீனிவாசனே
நிலையாய் நெடுங்காலம் நின்று
அருள் செய்கின்றாய் நின்னை
நாடி வருவோர்க்கு
உன்னைக் காண வருவோர்
களைப்பு தீர படிப்படியாய் அன்னம் வடித்து
தாயன்போடு பசி தீர்க்கின்றாய்
படிப்படியாய் ஏறி வரும் பக்தர்களின்
வாழ்வில் படிப்படியாய் முன்னேற்றம்
தந்து மகிழ்விக்கின்றாய்.
முடி காணிக்கை அளிப்பவர்களின்
மனதில் மண்டிக் கிடக்கும்
அகந்தையை அடியோடு
அழிக்கின்றாய்.
செல்வத்தை சேர்த்துவிட்டு
செய்வதறியாது திகைக்கும்
மனிதர்களை உன்னிடம் அழைக்கின்றாய்
அவர்களின் தாபத்தை போக்குகின்றாய்
அவர்களிடம் பெற்ற செல்வதை
அடியவர்களுக்கே திரும்ப அளிக்கின்றாய்
அளித்தவர்களின் பாவ சுமையை
குறைக்கின்றாய். புண்ணியமாய்
மாற்றுகின்றாய்.
உன் திருவடியில் கோயில் கொண்ட
அலர்மேல் மங்கையோ அடியவர்களின்
வறுமையை அழித்தொழிக்கின்றாள்
ஆனந்த வாழ்வு அருளுகின்றாள்
என் மனம் உலகளந்த உத்தமனாம்
உன் புகழே எப்போதும் சிந்திக்கட்டும்
ஏழேழு பிறவிகளிலும் உன் நினைவு
என்னை விட்டு அகலாதிருக்கட்டும்
என்றும் உன் வலமார்பில் உறையும்
இலக்குமி தாயார் போலே.
திருமலை வாழும் ஈசனே
திருமகள் இதயத்தில்
உறையும் நேசனே
பரிவோடு காக்கும் கேசவனே
அடியவர்களை அல்லல் வராது
காக்கும் அரங்கனே
அன்போடு உன்னை பணிகின்றேன்
அழியாத பதம் பெறவே.
/// ஏழேழு பிறவிகளிலும் உன் நினைவு
ReplyDeleteஎன்னை விட்டு அகலாதிருக்கட்டும்
என்றும் உன் வலமார்பில் உறையும்
இலக்குமி தாயார் போலே... ///
மிகவும் சிறப்பான வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...
நன்றி DD
Delete//திருமலை வாழும் ஈசனே திருமகள் இதயத்தில் உறையும் நேசனே
ReplyDeleteபரிவோடு காக்கும் கேசவனே அடியவர்களை அல்லல் வராது காக்கும் அரங்கனே அன்போடு உன்னை பணிகின்றேன் அழியாத பதம் பெறவே. //
அருமை அண்ணா.
>>>>>
படத்தில் ஸ்வாமி முகத்தை விட, அவரின் வக்ஷஸ்தலத்தில் உள்ள அம்பாள் முகம் கூடுதல் பொலிவுடன் உள்ளது, அண்ணா. மற்றபடி அனைத்தும் மிக அழகாக வந்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteவருகின்ற ஆங்கில புத்தாண்டிற்க்காக
ReplyDeleteஏழுமலையானின் படம் ஒன்று தயாராகி வருகிறது.
வலையுலக நண்பர்களுக்காக
இதுவரை வரைந்த படங்களிலேயே மிகவும் சக்தியூட்டப்பட்ட படமாக திகழும்.
படத்தை அச்சிட்டு
அனைவருக்கும் கொடுக்கலாம்
வீட்டில் வைத்து பூஜிப்பவர்களுக்கு
தினமும் நெய் தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு ஏழுமலையானை நினைப்பவர்களுக்கு வாழ்வில்
ஏற்றம் தான் இனி
இது சத்தியம்.
வரும் ஆண்டு 2014
அதன் கூட்டுத்தொகை 7
தீயவர்கள் திருந்துவார்கள் .
நல்லவர்கள் உயர்வடைவார்கள்
எல்லா பாராட்டும் அவனுக்கே .
அன்போடு உன்னை பணிகின்றேன்
ReplyDeleteஅழியாத பதம் பெறவே.
வேங்கடம் வாழும் ஈசன் பற்றி அருமையான படமும் ,
சிறப்பான வரிகளும் ..பாராட்டுக்கள்..!
நன்றி
Delete