Thursday, December 19, 2013

பட்டினத்தாரின் சிந்தனைகள். (2)

பட்டினத்தாரின் சிந்தனைகள். (2)



பட்டினத்தார் இந்த உலகில் வாழ்ந்த போது
அவரை சுற்றியுள்ளவர்களும் புரிந்துகொள்ளவில்லை 
,இந்த உலகமும் அவரைப் புரிந்துகொள்ளவில்லை 

மாறாக விடமுண்ட கண்டனின் அருளைப் பெற்றவர் 
என்பதை அறியாது அவருக்கே விஷம் வைத்து 
கொல்லத்  துணிந்தனர்.அவரை சேர்ந்தோர் 
அவர் குடும்ப சொத்தை அபகரிக்க. 

சிவனே என்று கோயிலின் வாசலில்
 அமர்ந்திருந்த அவரை கள்ளன் என்று குற்றம் சாற்றி 
கழுவிலேற்ற துணிந்தான் ஒரு அரசன்.

இப்படியாக இறைஞானம் பெற்ற சித்தர்களை, 
ஞானிகளை,மகான்களை, யோகிகளை 
இந்த உலகம் அவர்கள் இந்த உடல் 
என்னும் சட்டையை கழற்றிப் போடும் வரை 
அறிந்துகொள்வதில்லை. 

அவர்களை சட்டை செய்வதில்லை.

 மாறாக அவர்களின் தவத்தை கலைப்பதிலும், 
குலைப்பதிலும், அவரை கொடூரமான முறையில் 
துன்புறுத்தவும் செய்கிறார்கள்.

 இது இந்த உலகம் தோன்றிய நாள் 
 முதற்கொண்டு மகான்களுக்கு இந்த மூட ஜனங்கள் 
 செய்யும் முட்டாள்தனம். 

இருந்தும் அவர்கள் நம்மிடம் கொண்டுள்ள 
அபரிமிதமான கருணையால் 
வழி தவறிப்போன மானிட குலத்தை 
காப்பாற்ற   முயற்சி செய்கிறார்கள்

எங்கிருந்தோ பறந்து வரும் வண்டுகள் 
தாமரைப் பூவில் உள்ள தேனை 
உண்டு மகிழ்கின்றன 

ஆனால் பூவில்  அருகில் வசிக்கும் 
தவளைகளோ தாமரை இலையில் 
வந்தமரும் பூச்சிகளைப் பிடித்து 
உண்பதில் கவனமாக இருக்கின்றன  

உலகின் எங்கோ ஒரு மூலையில் 
ஆன்மீக நாட்டம் கொண்டு வரும் ஒருவரால் 
அவர் அடையாளம் காட்டப்பட்டபின். 
அவரை வைத்து வியாபாரம் பண்ணுவதிலும், 
ஆதாயங்களைத் தேடுவதிலும்தான்  
இந்த மனித சமூகம் குறியாக இருக்கிறது.

அதானால்தால் அவர்கள் இந்த உடல் 
என்னும் சட்டையை கழற்றிவிட்டு அருவமாக 
ஒளி நிலையில் இருந்துகொண்டு நிலையில் 
உண்மையான சாதகர்களுக்கு 
உதவ முன்வருகிறார்கள். 
  
ஆனால்  இந்த மனிதர்களோ 
அவர்களிடம் அற்ப பலன்களைத்தான் 
யாசிக்க வருகிறார்கள். 

மாறாக அழியாப் பதம் அளிக்க காத்திருக்கும் 
அவர்களின் நோக்கம் நிறைவேறாமலே போகிறது 

இருந்தும் அவர்கள் இந்த மாநிடர்களிடம் 
உள்ள குறைகளை சாடாமல் விடுவது கிடையாது.

ஆனால் அதில் பொதிந்துள்ள 
உண்மைகளை புரிந்துகொள்ளாமல் 
அவர்களை தூற்ற தொடங்கிவிடுகிறது.
இந்த மூடக் கூட்டம்  

அதனால்தான் பல மகான்கள் 
அதுபோன்ற எண்ணம் கொண்டு வருபவர்களை 
அருகே சேர்ப்பதில்லை. 

சிலர்  கல்லை எடுத்து வீசுவார்கள்,
சிலர் கடுமையாக கடிந்துகொள்வார்கள் 
வரும் சில மனிதர்களின்  மனங்களில் 
உள்ளதீய ,வக்கிர எண்ணங்களை அனைவரின் முன்பும் போட்டு அவமானப் படுத்துவார்கள்

சிலர் சகதியில்,
சாக்கடையில் கிடப்பார்கள் 

இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு 
பொறுமை காத்தவர்களுக்குதான் 
அவர்களின் அருள் கிடைக்கும். 

இனி அடுத்த பாடலின் பொருளை பார்ப்போம். 

இதிலும் நாம் செய்யும் வழிபாட்டில் 
உள்ள குறைகளைச் சாடுகிறார் பட்டினத்தார். 

கண்ணுண்டு காணக், கருத்துண்டு நோக்கக், கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச், செவியுண்டு கேட்கப், பல் பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த, எதிர் நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுது ஐயோ கெடுவீர் இந்த மானுடமே! 2.


இன்னும் வரும்.

6 comments:

  1. விளக்கம் அருமை...

    வழிபாட்டில் உள்ள குறைகளை அருமையாகச் சாடியுள்ளார் பட்டினத்தார்... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //எங்கிருந்தோ பறந்து வரும் வண்டுகள் தாமரைப் பூவில் உள்ள தேனை
    உண்டு மகிழ்கின்றன. ஆனால் பூவில் அருகில் வசிக்கும் தவளைகளோ தாமரை இலையில் வந்தமரும் பூச்சிகளைப் பிடித்து உண்பதில் கவனமாக இருக்கின்றன //

    அடடா..... மிக அருமையான உதாரணம் .... பாராட்டுக்கள் அண்ணா.... பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. திருச்சியிலிருந்தும்,திண்டுக்கல்லிலிருந்து மட்டும்தான் வண்டுகள் வந்துராம ரசத்தை குடித்து மகிழ்கின்றன. மிக்க மகிழ்ச்சி.

      Delete
  3. உண்மை நிலையினை புடம்போட்டு காட்டியிருக்கின்றீர்கள் அய்யா! பட்டினத்தாரின் பாடலின் மெய்ப்பொருளையும் உணர்த்தியிருக்கின்றீர்கள் அய்யா! பகிர்வுக்கு நன்றி அய்யா!

    ReplyDelete
    Replies
    1. உண்மை கசக்கத்தான் செய்யும்
      வாழ்க்கை கசந்தால்தான்
      வசந்தத்தின் இனிமை புரியும்.

      Delete