Saturday, December 7, 2013

வீணா கான சரஸ்வதி.

வீணா கான சரஸ்வதி. 

கலைவாணி தாயே
உன்  கடைக்கண்
பார்வை பட்டால் போதும்
பட்ட மரமும் துளிர்க்கும்





கல்லாசனத்தில் அமர்ந்து அருள் செய்யும்
உன்னை கருத்தோடு வழிபட்டால்
கல்லா மூடனும்
கவிதை மழை பொழிவான்.

கற்றதினால் செருக்குற்றவன்
செல்லாக் காசாகிப் போவான்

நின் நாமம் சொன்னால்  போதும்
நில்லாதொடும் மனமும்
நிமலனிடம் ஒடுங்கிவிடும்.
ஞானம் அருளிடும் ஞாநவாணியே

வெள்ளைத்  தாமரையில்
வீற்றிருப்பாய் கள்ளமில்லா
வெள்ளை மனம்
கொள்ள வேண்டும் என்பதை
உணர்த்தும் முகமாய்.

சென்றவிடமெல்லாம் சிறப்பைத்
தரும் காலத்தால் அழியாக்
கல்விச் செல்வம் அருள்பவளே

ஒளியில்லா இடத்தில்
வாக்கே ஒளியாகும் என்கிறது
உபநிடதங்கள் போற்றும்
வாக்கிற்கு துணையாய் வரும்
வாணியே

செல்லும் இடமெல்லாம்
துணை நிற்ப்பாய்
வெல்லும் வகையை
உணர்த்திடுவாய்
இன்பம் தந்திடுவாய்

வாழ்வில் ஏற்றம் தந்திடுவாய்
மனதில் ஏக்கம் போக்கிடுவாய்

வீணையை மீட்டி கானம்
இசைப்பாய் இந்த
வையகத்து உயிர்களெல்லாம்
வளமாய் இசைந்து இன்பமாய் வாழ

வரங்களை அள்ளி தருவாய்
உன்னை வணங்கி மகிழ்வோருக்கு

உந்தன் வடிவம்
வரைந்து உனக்கு
சமர்பித்தேன்
உன் அருள் வேண்டி 

8 comments:

  1. //வாழ்வில் ஏற்றம் தந்திடுவாய்
    மனதில் ஏக்கம் போக்கிடுவாய்
    //எண்ணிய எண்ணியாங்கு எய்த எந்நாளும் அவளருள் துணைநிற்கட்டும்! படம் அருமை! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நல்ல எண்ணங்கள் நாட்டினிலே நிலவட்டும்
      அனைவர்க்கும் நன்மைகள் விளையட்டும்
      நன்றி வருகைக்கும்
      பாராட்டிற்கும் கருத்துகளை பகிர்ந்தமைக்கும்.

      Delete
  2. அருமை... எல்லா வளமும் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அதுதான் இவன் பிரார்த்தனை

      Delete
  3. Sri Saraswathy Arul mattum pothum...Thank you very much.

    ReplyDelete
    Replies
    1. அவள் அருள் இருந்தால் மனதில்
      கவ்விக் கிடக்கும் இருள் போகும்
      இருள் நீங்கினால் வாழ்வே
      பிரகாசமாகும். நன்று. VK

      Delete
  4. கலைவாணி அருளால் அவளின் படம் அருமையாக எழுதப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.

    //வாழ்வில் ஏற்றம் தந்திடுவாய், மனதில் ஏக்கம் போக்கிடுவாய்//

    அதே அதே !

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. பாராட்டுக்கு வாழ்த்துக்கு நன்றிகள்.VGK

    ReplyDelete