அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-2)
(தொடர்ச்சி)
திருப்பாவை
இந்த மனித சமூகம்
அனைத்திற்கும் சொந்தமானது.
ஆனால் அதை ஒரு பிரிவினர்
தங்களுக்கு மட்டும் உரிய
சொத்துப் போல் நினைக்கிறார்கள்.
மற்றவர்கள் அதை பெரிதாக
மதிப்பதில்லை.
இந்த உலக மக்கள் இன்பமாக வாழ
அனேக கருத்துக்களை அழகாக
சொல்லியிருக்கிறாள் ஆண்டாள்.
விஜயநகர சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக
கட்டிஆண்ட கிருஷ்ணா தேவராயர்.
திருப்பாவையின் சிறப்பை உணர்ந்து
வடமொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
திருப்பதியிலும் அனைத்து வைணவ கோயில்களிலும்
திருப்பாவை பக்தி பரவசத்துடன் ஓதப்படுகிறது.
அனைத்து சடங்குகளிலும்
திருப்பாவை இடம் பெறுகிறது.
ஆனால் கோதையோ
இந்த வையகத்தில் வாழ்வோர்
அனைவரையும் ஒன்றாக கருதுகிறாள்.
அவளது பார்வை உலகளாவியது
அதனால்தான் எந்த பிரிவினரையும்
குறிப்பிடாமல்
வையத்து வாழ்வீர்காள்.
இந்த உலகத்தில் வாழ்கின்றவர்களே !
என்று அன்போடு அழைக்கிறாள்.
நாம் இந்த உலகத்திற்கு
வாழத்தான் வருகின்றோம்
அந்த வாழ்க்கையை
மகிழ்சியாக வாழ வேண்டும்,
மன நிறைவோடு வாழவேண்டும்.
மாண்போடு வாழவேண்டும்.
நாமும் மகிழ்ந்து பிறரையும்
மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும்
வள்ளுவன் கூறியதைப்போல் இருப்பதை
நம்மை சுற்றியுள்ள உயிர்களோடு
பகுத்துண்டு வாழ வேண்டும்.
ஆனால் என்ன நடக்கிறது.?
நம்மை அண்டி வாழும் உயிர்களை
மாமிசபட்சினி போல் இரக்கமின்றி
கொன்று தின்கின்றது ஒரு கூட்டம்.
இன்னும் சிலர் மனிதர்களையே
கொடுமைப்படுத்துவதும்,
சிறுமைப்படுத்துவதும்,சகட்டுமேனிக்கு
காரணமில்லாமல் கொல்லுவதும்
வாடிக்கையாகிவிட்டது இன்றைய உலகில்
இயற்கை வளங்களை
சுரண்டி தின்கிறது ஒரு கூட்டம்.
தீங்கை தரும் செயற்கை பொருட்களை தயாரிக்க
இயற்கை வளங்களை கண்மூடித்தனமாய்
அழிக்கிறது ஒரு கூட்டம்.
இதற்க்கெல்லாம் காரணம்.
இயற்கையை பற்றிய அறியாமைதான் காரணம்
உயிர்கள் மீது அன்பில்லாமைதான் காரணம்
இறைவனைப் பற்றிய சரியான தெளிவான
வழிகாட்டுதல் இல்லாமைதான் காரணம்.
மனிதர்களிடையே ஒழுங்கும் இல்லை
ஒழுக்கமும் இல்லை
எங்கு பார்த்தாலும் புழுக்கம்
இயற்கை வளங்களை அழித்ததினால்
உள்ளத்திலும் புழுக்கம்
மனதில் அமைதி இல்லாமையினால்.
இவையெல்லாம் மாறவேண்டுமென்றால்
திருப்பாவை காட்டும் பாதையை
நாடினால் சரியாகிவிடும்.
அதற்கு அந்த கண்ணபிரான்தான்
அருளவேண்டும்
(இன்னும் வரும்)
//வையத்து வாழ்வீர்காள்.
ReplyDeleteஇந்த உலகத்தில் வாழ்கின்றவர்களே !//
ஆண்டாளின்அருமையான பாசுரம் + அண்ணாவின் விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.