Wednesday, December 11, 2013

கலியுகம் என்றால் என்ன?

கலியுகம் என்றால் என்ன?

கலியுகம் என்றால்
களிக்கும் யுகம்

கலியுகம் என்றால் நாம்
பல   பிறவிகளில்  
சேர்த்துவைத்த பாவங்கள்
கழிக்கும்  யுகம்

முந்தய யுகங்களில் பல்லாயிரம் ஆண்டுகள்
தவம் செய்து இறைஅருளை பெற
பாடுபடும் செயல்களை விடுத்து

எளிதாக இறைவனை
அடையும் மார்க்கத்தை
கடைபிடித்து உய்யும் யுகம்.

கலியுகம் என்றால்
காக்கும் கடவுளாம்
கண்ணனை நினைந்து
அவன் நாமத்தை
சொல்வதினாலேயே
கலியை வெல்லும் வழியை
காட்டுவது கலியுகம்.






ஆனால் அந்தோ!

ஹரியை மறந்து
 மனிதர்கள் எந்நேரமும்
கேளிக்கைகளில்  மூழ்கி அரிதாய் கிடைத்த
மனித  பிறவியை  வீணடிக்கின்றனர்

உண்மையாய் நடக்காமல்
எல்லோர் முன்பும் நடிக்கின்றனர்.

உண்மையாம் கடவுளை நம்பாமல்
பொய்யான செய்திகளையே
நம்பி  மோசம்  போகின்றனர்.

இறைவனை எளிதாய்
அடையும் மார்க்கம்
அவன் நாமம்
எப்போதும் சொல்வதே

அற்ப  லாபங்களுக்காக
அழியும்    மானிடர்   புகழை
 பாடுவதை  விடுத்து
அழியா பதம்  அருளும்  ஆனந்தம்  தரும்
அரங்கனின்  நாமம் சொல்வதே .

மரணம்  மனித உயிர்களை எந்த
வயதிலும் எதிர்பாராது தாக்கும் என்பது
அனுதினமும்  நேரில் கண்டும் மதியிழந்து
அவன் நாமம் சொல்லாமல்
உலக மாயையில்  மூழ்கி பிறர்
தன்னை துதி பாடவேண்டும்
என்று அலைகின்றனர்.

வாயுள்ளவன் 
பிழைத்துக்கொள்வான்

எப்படி?. 

பகவன் நாமத்தை சொல்லி 
எமனிடமிருந்து 
உயிர் பிழைத்துக்கொள்வான். 

மற்றவரெல்லாம்  மீண்டும் 
பிறந்து மடிவார்கள்
மீண்டும் பிறக்க 

6 comments:

  1. விளக்கம் உங்கள் பாணியில் அருமை ஐயா ...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //வாயுள்ளவன் பிழைத்துக்கொள்வான். எப்படி?.

    பகவன் நாமத்தை சொல்லி எமனிடமிருந்து உயிர் பிழைத்துக்கொள்வான். வாயுள்ளவன் பிழைத்துக்கொள்வான்.//

    அருமையோ அருமை. பகவானை அடைய கலியுலகத்தில் மிகச்சுலபமான வழி அவன் நாமங்களைச் சொல்லிச்சொல்லி, மகிழ்வது மட்டுமே. ;) சந்தோஷம் அளிக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தோஷங்களை போக்கி சந்தோஷம்
      அளிக்கத்தான் இவன்
      அல்லும் பகலும்
      பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்
      நலம் தரும் சொல் நாராயணனின்
      புகழ் பாடிக்கொண்டிருக்கிறான்.

      Delete
  3. //கலியுகம் என்றால்
    களிக்கும் யுகம்//
    இதுவரை நான்
    அறியாத
    விளக்கம் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அறியாதவற்றை
      அறியவைக்கும்
      முயற்சியில்தான்
      இந்த அறியாதவன்
      அந்த யாதவனின்
      துணைகொண்டு
      சில ஆண்டுகளாக
      ஈடுபட்டுக்
      கொண்டிருக்கிறான்.

      Delete