Tuesday, December 17, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-2)-தொடர்ச்சி


அருட்பாவை தந்த திருப்பாவை

 (பாசுரம்-2)-தொடர்ச்சி 


வையத்து வாழ்வீர்காள்

என்று இந்த உலகத்தில் வாழும் அனைவரையும்
அன்போடு அழைக்கின்றாள் ஆண்டாள்.
https://mail.google.com/mail/?shva=1#sent/142fe0a7d6225e94?projector=1
(இணைப்பை அனுப்பிய திரு பாஸ்கரன் சிவராமனுக்கு நன்றி )


அவள் நோற்கும் நோன்பிற்கு நம்மையும்
அழைக்கின்றாள். நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! என்கிறாள்.

சித்தர்கள் தெய்வமாக
விளங்குபவள் பாவை.



கொல்லிப் பாவை
கொல்லி மலையில் உறைபவள்.

நாமெல்லாம் தீபம் ஏற்றி வழிபடும்
விளக்கின் பெயரோ பாவை விளக்கு.



புற இருளை ஓட்டுவது
விளக்கின் ஒளி.
அக இருளை ஒட்டுவது
ஓம் என்னும் பிரணவ ஒலி

பாவைக்கு செய்யும் கிரிசைகள்
பரந்தாமனுக்குதான் போய் சேரும்
என்று சொல்லாமல் சொல்லுகிறாள்
 ஆண்டாள் எப்படி?

கீதையில் கண்ணன் அனைத்து உயிர்களுக்குள்ளும்
தெய்வங்களுக்குள்ளும் நான்தான்
ஆன்மாவாய் இருக்கிறேன் என்று
அறுதியிட்டுக் கூறியுள்ளான்.



அதை வலியுறுத்தும்முகத்தான்
பாவைக்கு பூஜைகள் செய்வதாகக் கூறி
பரந்தாமனான கண்ணனை  போற்றி பாடுகிறாள்.

அவன் பாற்கடலுள் நன்றாக பாம்பணையில்
படுத்து உறங்கியவன்.

அவன் இந்த மார்கழி மாதத்தில்
பக்தர்களை காண்பதற்காக
விழித்துக் கொண்டு காத்திருக்கிறான்.

அவனை காண்பதற்கு
அவன் புகழை பாடுவோம்.

பாலையும், நெய்யையும் உண்டால்
மந்த புத்தி ஏற்பட்டு உறங்கப்போய்
அவனை மறந்துவிடுவோம்.
அதனால் அவைகளை தவிர்ப்போம் என்கிறாள்.

அதிகாலையில் ஆதவன் உதிக்கும்
முன் எழுந்து மனம் மற்ற உலக காரியங்களில்
பிரவேசிக்கும் முன் தெளிந்த மனதோடு
நீராடி அவனை தரிசிக்க செல்லுவோம்.



பெண்களே அழகு பெட்டகங்கள்.
அவர்கள் கண்ணில் மையிட்டுகொண்டு
கூந்தலில் மலர் சூடிக்கொண்டு
காட்சியளித்தால் பக்தி பிறக்காது.
காம எண்ணங்கள்தான் மனதில் மேலோங்கும்.
காமம் இறை பக்திக்கு எதிரி.
ஆதலால் அதை தவிர்க்கச் சொல்கிறாள்.

பிறருக்கு துன்பம் விளைவிக்கும்
எந்த செயலையும் செய்யாமலும்
தீமை பயக்கும் சொற்களை பேசாமலும்,
இறைவன் மீது வைக்கும்
நம்பிக்கை குறையாமலும்
அவனிடம் அவனருளின்றி
வேறு எதையும் யாசியாமல்
இருக்கும்  எண்ணத்துடனும்
நம் தவறுகளுக்கு பிறர் மீது குற்றம்
சுமத்தும் தன்மையை தவிர்த்தும்.
பரமனை மனதில் எண்ணி எண்ணி
மகிழ்ந்து அவன் திருவடிகளின்
புகழைப் பாடுங்கள்  என்று
தன்னோடு வரும் பாவைகளை
நோக்கி ஆண்டாள் கூறுகிறாள்

இறைவனை வணங்குவதற்கு
அவன் அருளை பெறுவதற்கு
மேற்கண்ட நல்ல குணங்கள்
பாவைகளுக்கு மட்டும்தானா தேவை
நம் போன்ற பாமரர்களுக்கும்
தேவையன்றோ! (இன்னும் வரும் )
pic-courtesy-google images


5 comments:

  1. //பரமனை மனதில் எண்ணி எண்ணி மகிழ்ந்து அவன் திருவடிகளின்
    புகழைப் பாடுங்கள் //

    அனைத்து விளக்கங்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. விரிவான அருமையான விளக்கம்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பாமரர்களுக்கும் தேவை தான் ஐயா...

    சிறப்பான விளக்கத்திற்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete