Friday, December 20, 2013

யாரிடம் சரணாகதி செய்யவேண்டும்?

யாரிடம் சரணாகதி செய்யவேண்டும்?






அவனருளால்
அவன் தாள் வணங்கி என்பார்கள்

அவன் அருள் இல்லாவிடில்
 நம்முடைய தலை
இறைவனின்
திருவடிகளில் வணங்காது

இறைவனுக்கு பதி
என்று பெயர்

பதி  என்றால்
தலைவன்.

தலைவன் என்றால்
 நம்முடைய தலையில்
இருப்பவன்.

நாமே எழுதிக்கொண்டே
தலைஎழுத்தை
மாற்றவல்லவன் அவன்தான்

தலை எழுத்து
மாறவேண்டுமென்றால் "ராம"என்ற
இரண்டெழுத்தைசொல்ல வேண்டும்.

இரண்டெழுத்தை சொல்லிக்கொண்டிருந்தால்தான்
நாம் அறியாமையினாலும் அகந்தையினாலும்
அன்பிலாமையாலும்,காம க்ரோதாதி
குணங்களாலும் நமக்கு நாமே
 உண்டாக்கிகொண்ட தீவினைகள் மாளும்.

அதை விடுத்து யார் யாரையோ    தல
என்றும் தளபதி என்றும் சொல்லிக்கொண்டிருந்தால்
 உடல் தளர்ந்து உயிர் ஒருநாள்  நம்மை விட்டு
சொல்லாமல் கொள்ளாமல் போய்விடும்

அதனால்தான் அந்த இறைவன்
நமக்கு நினைவுபடுத்தும் பொருட்டே
மலைகளின் உச்சியில்
சிலையாய் வந்து நின்று நிலையாய்
அதனுள்ளே வாசம் செய்கின்றான்.

நமக்கு துன்பங்களை கொடுத்து துவளச் செய்து
அவனிடம் வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றான்

அப்போதும் நாம்
அவனை நினைப்பது கிடையாது.

மாயத் திரையை அகற்றி நமக்கு
மரணமில்லா வாழ்வு அளிக்க
அவன் காத்திருப்பதை அறியாது
மாத்திரைகளை விழுங்கிவிட்டு
 மருத்துவர்களின் தரிசனதிர்க்காக
பல மணி நேரம் காத்திருக்கிறோம்.

அடுத்து அவர் எழுதி தரும் பரிசோதனைகளுக்காக
 பல ஆய்வு கூடங்களில் காத்திருந்து
காசை அழுதுவிட்டு வருகிறோம்.

அப்போதும் நம் நோய்கள் தீருவதில்லை.மாறாக புது புது நோய்களாக அவைகள் மீண்டும் மீண்டும் நம்மை பாடாய் படுத்தி கொண்டு வருகின்றன. இந்த உடலில் உயிர் உள்ள வரை

நம்மை கடைதேற்ற காத்திருக்கும்
அந்த வெங்கடாசலபதியின் கோயிலின் சந்தியில்
அவன் நினைவாக காத்திருக்க மனமில்லை.

ஏதாவது குறுக்கு வழி இருக்கிறதா ,
காசை கொடுத்துவிட்டு உடனே அவனை
 பார்த்துவிட்டு உலக காரியங்களை
பார்க்க ஓடோடி வந்துவிடுகிறோம்.

தவறான வழியில், அளவிற்கு மேல்
சேர்த்த காசை அனுபவிக்க முடியாமல்
லட்சக்கணக்கில் மூட்டை கட்டி
அவன் உண்டியலில் போடுகிறார்கள்.

அப்போது கூட காணிக்கையாக அதைப்  போடுவதில்லை.
வருமான வரி துறையினரிடம் மாட்டிக்கொண்டால்
கம்பி எண்ண  வேண்டுமே என்று
பலர் இவ்வாறு செய்கிறார்கள்.

ஆனால் அவன் யாரிடமும்
குறை காணாத கோவிந்தனல்லவா!

அதை முழுவதும் அவர்கள் சார்பாக
தர்மம் செய்துவிடுகிறான்.
அவர்களையும் கடைதேற்றிவிடுகிறான்
அந்த பரம காருண்ய மூர்த்தி.

அவனருள் பெற அவனின்
தாள்களை வணங்க நம் மனதை
அவன் திருவடிகளில் முழுவதுமாக ஒப்படைப்போம்.

அண்ட   சராசரங்களை ஆச்சரியப்படக்கூடிய  வகையில்
நிர்வாகம் செய்யும் அந்த பரப்ப்ரம்மமாகிய ஸ்ரீராமன்
எந்த கணக்கிலும் வராத ஜீவாத்மாவாகிய
நம்மையும் ஒரு பொருட்டாகக் கருதி
காப்பாற்றுவான் என்பது சத்தியம்.

சாரங்கபாணியின் திருவடிகளில்
சராணகதி செய்வோம்
சங்கடமின்றி வாழ்வோம்!

8 comments:

  1. // 'தல' என்றும், 'தளபதி' என்றும் சொல்லிக் கொண்டிருந்தால்... // சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    அருமையான விளக்கங்களுக்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //தலை எழுத்து மாறவேண்டுமென்றால் "ராம"என்ற இரண்டெழுத்தைசொல்ல வேண்டும்.//

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  3. அவனருள் பெற அவனின்
    தாள்களை வணங்கி நம் மனதை
    அவன் திருவடிகளில் முழுவதுமாக ஒப்படைப்போம்.

    ReplyDelete
  4. ஓம்ராம்! ராம் என இறை நாமத்தினை உச்சரித்தால் தீ வினை மாளுமே ! பிறவிப் பெருங்கடலில் நீந்தி இறைவனை அடைய வேண்டுமென்கிற உள்ளுணர்வு வர வேண்டுமே! - இந்த நிலை வரவேண்டுமென்கிற உணர்வினைத் தூண்டும் உன்னத பகிர்வு!

    சிறப்பானதொரு பகிர்விற்கு நன்றி அய்யா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா ரவி
      ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தால் போதும் நம் மனம் சுத்தமாகிவிடும். அதை சுத்தம் செய்ய லைசால், ஹார்பிக், பெனாயில், டெட்டால் எதுவும் தேவையில்லை. நாம் இன்னும் பல பிறவிகள் எடுத்து அனுபவிக்கவேண்டிய வினைகள் அனைத்தும் இந்த பிறவியிலே ஒழிந்துவிடும். அதனால்தான் ராம நாமத்தை ஜபிப்பவர்களுக்கு வாழ்வில் அதிக துன்பங்களை வருவதற்கு காரணம். ஆனால் உலகதோருக்குதான் அவை துன்பமாக தோன்றுமே அன்றி அதை ஜபிப்பவர்களுக்கு ஒன்று தெரியாது செய்துவிடுவான் அந்த கருணாமூர்த்தி

      Delete