Sunday, December 15, 2013

அருட்பாவை ஆண்டாளின் திருப்பாவை

அருட்பாவை 
ஆண்டாளின் திருப்பாவை 

16.12.2013

இன்று மார்கழி
மாதம் பிறக்கிறது.



ஆடிப் பூரத்தில் அவதரித்தவள்
கோதை என்னும் நாமம் கொண்டவள்

தன் உள்ளம் எனும் கோயிலில்
கோவிந்தனையே தெய்வமாய் தன்னுள் கொண்டவள்

அந்த திருமாலையே மாலையாக அணிந்தவள்
மாலையே மனதில் எந்நேரமும் நினைத்ததால்
அவனோடு அயிக்கியமானவள்

அண்ட சராசரங்களை ஆளும் அந்த ஆண்டவனையே
தன்  அன்பினால் ஆட்கொண்டு
ஆண்டாள் என்னும் பெயர் பெற்றவள்.

அந்த தெய்வீக அனுபவத்தை நமக்கு பாமாலையாக
ஆக்கி தந்தவள் நாமெல்லாம் படித்து உய்யும்படியாக.

மார்கழி மாதத்திற்கு
சிறப்பு என்னவென்றால்
அனைத்துமாயிருக்கும் அந்த அரங்கன்
அவனியில் அவன் கண்ணனாய் இந்த பூமியில்
அவதரித்தபோது வெளியிட்ட ரகசியங்களில்
ஒன்றுதான் அது
அவன் மாதங்களில் மார்கழி மாதமாய்
இருக்கிறேன் என்று.

அதை அர்ஜுனனிடம்
வெளியிட்டான்.

அவனோ அதை பாரத போர் முடிந்தவுடன்
மறந்துபோய்விட்டான். .
அந்த உண்மை
அவனோடு போய்விட்டது.

மார்கழி என்றால் மாரிக்காலம்
முடிவடையும் காலம் என்று பொருள்

மழை பெய்து  நீர் நிலையெல்லாம் நிரம்பி
நதிகளிலெல்லாம் நீர் இரு கரையும்
தொட்டுக்கொண்டு ஓடும் காலம்.

எங்கும் பசுமையும் குளுமையும்
சூழ்ந்து பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம்.

உலகில் மக்கள் வீட்டிற்குள்ளேயே  முடங்கி
உறங்கி கிடக்கும் காலம்.

பயிர்களெல்லாம் கதிர் பிடித்து
அடுத்த மாதம் அறுவடைக்கு
தயாராக இருக்கும் காலம்.

ஆண்டு முழுவதும் ஓயாமல் உழைத்து
சற்று ஓய்வெடுக்கும் காலம்.

இந்த கால கட்டத்தில் கிடைத்த ஓய்வை
இறைவனை நினைத்து பக்தி செய்து
மக்கள் உய்ய வேண்டும் என்று
பூமாதா திருஉள்ளம் கொண்டாள்

பிறந்திறந்து வீணாய் போகும்
பிறவியை புண்ணியம் தேடும் வழியை
 மக்களுக்கு காட்ட தானே தோன்றினாள்
தான்தோன்றியாக கோதையாக

மக்களின் வாதைகளை
போக்கும் வழியைக்
காட்ட கருணையுடன்.
வில்லை ஏந்தியவன் வெற்றியைத் தருபவன்
கோயில் கொண்ட ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்தாள்.

தனுர் (வில்)மாதம் என்று வடமொழியில்
இம்மாதம் அழைக்கப்படும். இம்மாதத்தில் வில்லை ஏந்திய ஸ்ரீராமச்சன்ற மூர்த்தியை உபாசனை செய்து அவன் அருளை எளிதாகப் பெறலாம்.

பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடி
பரிசினைப் பெற்ற பெரியாழ்வாரின் புத்திரியாக

நம்மையெல்லாம்
காக்கும் தெய்வம் எது என்றும்
கடைதேற்றும் தெய்வம் எதுஎன்றும்
விழி இருந்தும்
அவனை அடையும் வழிஎது என்று
அறியாது தடுமாறும் மனித குலத்திற்கு
விடிவெள்ளி போல்
தோன்றி அறியாமை இருளை
அகற்றும் வழியைக் காட்டினாள் .

முக்தியை அடையும் மார்க்கம்
முனிவர்களுக்கு மட்டும் உரியது அன்று
அனைத்து உயிர்களுக்கும் உரியது என்பதை
முப்பது பாசுரங்களின் வாயிலாக
முழங்கினாள்

முழங்கியது  மட்டுமல்லாமல்
பக்தி செய்து கண்ணுடன்
கலக்கவும் செய்யலாம் என்பதை
தானே நிரூபித்துக் காட்டினாள்

இனி ஒவ்வொரு பாசுரமாக பாடுவோம்.
 பக்தியில் திளைப்போம். .
(இன்னும் வரும்)

10 comments:

  1. ஆண்டாள் பற்றியும், மார்கழி பற்றியும் மிக அருமையான பதிவு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. //அவனை அடையும் வழிஎது என்று அறியாது தடுமாறும் மனித குலத்திற்கு விடிவெள்ளி போல் தோன்றி அறியாமை இருளை அகற்றும் வழியைக் காட்டினாள் .

    முக்தியை அடையும் மார்க்கம் முனிவர்களுக்கு மட்டும் உரியது அன்று
    அனைத்து உயிர்களுக்கும் உரியது என்பதை முப்பது பாசுரங்களின் வாயிலாக முழங்கினாள் //

    அழகோ அழகாகச் சொல்லி விட்டீர்கள். ;)))))

    ReplyDelete
  3. //ஆடிப் பூரத்தில் அவதரித்தவள், கோதை என்னும் நாமம் கொண்டவள்.

    தன் உள்ளம் எனும் கோயிலில் கோவிந்தனையே தெய்வமாய் தன்னுள் கொண்டவள்.

    அந்த திருமாலையே மாலையாக அணிந்தவள், மாலையே மனதில் எந்நேரமும் நினைத்ததால் அவனோடு ஐக்கியமானவள்.//

    ஆண்டாளின் பக்தி மிகவும் ஆச்சர்யமானது. பிரேம பக்திக்கு எடுத்துக்காட்டானவள். பரமனை அடைய அவள் தேர்ந்தெடுத்த வழியே தலைசிறந்த வழி, மார்கழி பிறப்பதே சந்தோஷமாக உள்ளது. ;)

    ReplyDelete
    Replies
    1. மார்கழி மாதத்திற்கு
      ஈடு இணை எதுவும் கிடையாது

      அதனால்தான் அதற்க்கு
      பீடுடுடைய மாதம் என்று பெயர் .
      ஆனால் மூடர்கள் அதற்க்கு
      பீடை மாசம் என்று நாமகரணம்
      சூட்டிவிட்டார்கள்.

      அந்த மாதத்தில் எந்த
      நல்ல காரியங்களையும் செய்யக்கூடாது
      என்றும் கதை கட்டி விட்டார்கள்.

      மாதவனே அந்த மாதத்தை தனக்காக
      தேர்ந்தெடுத்து விட்டதால்
      அது ஏற்றம் பெற்றுவிட்டது .

      அதை பூமியில் உள்ள அனைவருக்கும்
      உணர்தும்விதமாகதான் பூமிதேவி
      கோதையாக அவதரித்தாள் .

      அந்த மாதத்தின் பெருமையை
      அனைவருக்கும் உணர்த்தியது மட்டுமல்லாமல்
      மாதவனை அடையும் எளிதான
      இனிதான மார்க்கத்தை காட்டி தந்தாள்.

      வேதம் படிக்க இயலாதவருக்கும்
      சாத்திரம் கற்க இயலாதவர்க்கும்
      அதில் உள்ள கருத்துக்களை
      எளிய தமிழில் பாமரனுக்கும்
      விளங்கும்வகையில் பாசுரங்கள்
      பாடி அருளினாள்.
      பாசுரங்களைப் பக்தியுடன்
      பாடுவோம். பரவசமடைவோம்
      பரமபத நாதனின் புகழைப்பாடி

      நன்றி VGK நீண்டதொரு
      பின்னூட்டமிட்டு அசத்தியதர்க்கு. .

      Delete
  4. //மழை பெய்து நீர் நிலையெல்லாம் நிரம்பி
    நதிகளிலெல்லாம் நீர் இரு கரையும்
    தொட்டுக்கொண்டு ஓடும் காலம்.//

    இது மாதிரி இப்போதெல்லாம் எங்கே பார்க்க முடிகிறது? ம்..ஹூம்!

    ReplyDelete
    Replies
    1. அதுபோன்ற ஆறுகள் உலகின்
      பல பகுதிகளில் இன்றும் உள்ளன.

      ஆனால் நம் புண்ணிய பூமியில்
      அவைகளை அரக்க மனம் கொண்டவர்கள்
      இல்லாமல் செய்து விட்டார்கள்.

      ஆறுகளை தெய்வமாக போற்றி
      வணங்கிய நாடு அன்று .
      அதனால் அது சுத்தமாக இருந்தது.

      இன்று போலி ஆன்மிகம் பேசும் மக்கள்
      பெருகிவிட்டமையால் ஆறுகளை
      கழிவுகளை விட்டு சாக்கடைஆக்கிவிட்டனர்.

      ஆழி மழைக் கண்ணன்
      ஆண்டுதோறும் மழையாய் வெள்ளமெனப்
      பொழிந்து சுத்தம் செய்தும்
      மீண்டும் அதே நிலைக்கு
      கொண்டுவந்துவிடுகின்றனர்
      மூட மக்கள் .
      என்ன செய்ய?
      அந்த பரந்தாமன்தான்
      அவர்களுக்கு புத்தி புகட்டவேண்டும்

      Delete


  5. //அதனால்தான் அதற்க்கு
    பீடுடுடைய மாதம் என்று பெயர் .
    ஆனால் மூடர்கள் அதற்க்கு
    பீடை மாசம் என்று நாமகரணம்
    சூட்டிவிட்டார்கள்.//

    என்ன ஒரு மாற்றம்! இப்படியா மருவும்?

    ReplyDelete
    Replies
    1. இன்று பலரும் அரைகுறையாக கல்வி கற்றுவிட்டு மனம்போன போக்கில் பிதற்றி திரிவதால் வந்த வினை இது.

      Delete
  6. சிறப்பான ஆரம்பம்... பக்தியில் திளைக்க காத்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. அதற்காகத்தானே அந்த ஆண்டாள் திருப்பாவை பற்றி எழத வைத்துள்ளாள். பக்திதான் சக்தி தரும்
      பக்திதான் முக்தியையும் தரும். நன்றி DD

      Delete