Tuesday, December 3, 2013

நல்லதோர் குருவை நாடினால் நலம் பெறலாம்.

நல்லதோர் குருவை 
நாடினால் நலம் பெறலாம். 





வினையால்
வருவதே உடம்பு

செய்த வினையை பொறுத்து
கூடு மாறும்

கூடு தன்னை
சுற்றியுள்ள கூடுகளோடு
இணைந்துக்கொள்ளுகிறது

உறவுகள் என்ற போர்வையில்
நண்பர்கள் என்ற போர்வையில்
தேனிகளைப்  போல

ஆனால் எல்லா கூடுகளும்
அதைப்போல் இணைவதில்லை.

 பறவைகள் தங்கள் கூடுகளில்
தனித் தனியாகத்தான் வசிக்கின்றன

ஆண்  பறவையும்  பெண்  பறவையும்
கூடி  முட்டையிட்டு  குஞ்சு  பொறித்து
அவைகள்  பறக்க  தொடங்கியதும்
அனைத்தும் பிரிந்துவிடுகின்றன.

தான் வசித்த   கூட்டை
விட்டு பறந்துவிடுகின்றன
சுதந்திரமாக வானில் சுற்றி திரிகின்றன

ஆனால் மனித  இனம் மட்டும்
கூட்டையும் விடுவதில்லை
அவன் உயிர் தாங்கும் கூட்டையும்
விடுவதில்லை கூட்டினால்    வந்த  
உறவுகளையும்  விடுவதில்லை

இந்த  கூட்டை வைத்துகொண்டு  அதனால்
வந்த  பந்தங்களையும்  விடுவதில்லை.

சேர்த்து  வைத்த
பொருட்களையும்  விடுவதில்லை

எல்லாவற்றையும்  இவனே  பற்றிக்கொண்டு
அதனால்  ஏற்படும்  உரசல்களினால்
தோன்றிய ஆசைகள் .
ஆசைக்கு  தடையாய்  வரும்
 அனைத்தின்  மீது  கோபமும்
,அகந்தையினால்  கர்வமும் ,
சேர்த்த  பொருட்களை  தானும்
அனுபவிக்காமலும் ,பிறருக்கு  கொடுக்காமலும்
 முடக்கி  வைக்கும்  கருமிதனமும் ,
அதை  பாதுகாக்க  செய்யும்  முயற்சிகளும் ,
,தன்னை விட  பிறர்  புகழ்  பெற்றாலும் ,
 தன்னை மிஞ்சினாலும்  ,அதைப்  பார்த்து  பொறாமையும்
என  பல  தீ  போன்ற  தீய  குணங்களால்
அலைக்கழிக்கப்பட்டு  மன  நிம்மதியின்றி
 தவிக்கின்றான் .

நிலையற்ற  உடலில்  இருந்துகொண்டு
 நிலையில்லா   பொருட்களின்  கூட்டத்தை
 சேர்த்துக்  கொண்டதால்  நிலை  தடுமாறுகிறான் .

இந்த  மாயையிலிருந்து
விடுபட  வேண்டுமென்றால்
மாயையின்  தலைவனாகிய  
மாலவனைதான்   சரணடையவேண்டும் .

காமத்தை  எரித்த  மாஹதேவனை
 சிந்திக்கவேண்டும் .

 மாயையை  உண்டாக்கியவளும்  ,
அதைப்  போக்க   கூடியவளுமான
மகேஸ்வரியை  போற்றி  பாட  வேண்டும் .

வினைகளை  அழிக்க  வினாயகனையும்
வினையை தீர்க்க வேலவனையும்
வாழ்த்தி பாடவேண்டும்.

சேற்றில் சிக்கியவன் 
தானாக வெளியேற முடியாது.

அவனை வெளியேற்ற 
மற்றொருவர் உதவி தேவை

அந்த உதவியை செய்பவர்தான் குரு






நல்லதோர் குருவை 
நாடினால் நலம் பெறலாம். 




அப்போதுதான்  இந்த  பிறப்பு
இறப்பு சுழலிலிருந்து
விடுதலை கிடைக்கும்.  

10 comments:

  1. //நிலையற்ற உடலில் இருந்துகொண்டு
    நிலையில்லா பொருட்களின் கூட்டத்தை
    சேர்த்துக் கொண்டதால் நிலை தடுமாறுகிறான்//

    அதே அதே ....... கரெக்டூஊஊஊஊ

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அவள் அருளினால்தான் உயிரோடு இருக்கின்றோம்
      அவள் மகிமைகளை பற்றி சிந்திக்கின்றோம்
      என்ன செய்வது?
      நம்முடைய வினைகள் இறைவனைத் தொடர்ந்து தைல தாரைபோல் நம்மை சிந்திக்கவிடாமலும் ,மயக்கத்திலும் , மோகத்திலும் , உறக்கத்திலும் , தர்பெருமையிலும் , உடலை பராமரிப்பதிலும் போய்க்கொண்டிருக்கிறது .
      இருந்தும் இவ்வளவாவது நம்மை நலமாக வைத்திருப்பதே அவள் போட்ட பிச்சை என்பதை உணரவேண்டும்.

      Delete
  2. Replies
    1. // மாயையை உண்டாக்கியவளும், அதைப் போக்க கூடியவளுமான
      மகேஸ்வரியை போற்றி பாட வேண்டும்.//

      போற்றிப்பாடிக்கொண்டு தான் இருக்கிறேனாக்கும். அப்படியும் மஹேஸ்வரி கொஞ்சமும் என்னைக் கண்டு கொள்வதே இல்லையாக்கும். ;(

      Delete
  3. //சேற்றில் சிக்கியவன் தானாக வெளியேற முடியாது.
    அவனை வெளியேற்ற மற்றொருவர் உதவி தேவை//

    சரியாகச் சொன்னீர்கள்.

    //அந்த உதவியை செய்பவர்தான் குரு//

    ஆஹா, அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    >>>>>

    நல்லதோர் குருவை நாடினால் நலம் பெறலாம்.

    ReplyDelete
  4. //நல்லதோர் குருவை நாடினால் நலம் பெறலாம்.//

    நல்ல தலைப்...... பூ ஊஊஊஊஊ

    அனைத்தும் அருமை. பாராட்டுக்கள் அண்ணா. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அவன் இவன்
      மூலமாக சொல்கிறான்

      புரிந்துகொள்ளுபவர்கள்
      புரிந்துகொள்ளட்டும்

      புரியாதவர்கள் தான் என்ற
      அகந்தை கொண்டு
      மனதிலேயே புழுங்கி
      கொண்டிருக்கட்டும் .

      Delete
  5. குருவருளே இறையருளை காட்டிக்கொடுக்கும்..

    நல்லதோர் குருவை
    நாடினால் நலம் பெறலாம்.

    ReplyDelete
    Replies
    1. தாய்தான் தந்தையைக்
      காட்ட முடியும் தந்தை கண்ணெதிரே நின்றாலும்

      அதுபோல்தான் கடவுளும் மனித ரூபத்தில்
      நம் எதிரே நின்றாலும் குருவின்
      அருளின்றி நம்மால் காண இயலாது

      சாத்திரம் கூறும்
      உண்மைகளை அறியமுடியாது .

      Delete
  6. நல்லதோர் குருவை நாடுவோம்

    ReplyDelete