அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-6)-தொடர்ச்சி
புள்ளும் சிலம்பினகாண்
புள்ளறையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின்
பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய்
பேய்முலை நஞ்சுண்டு
கள்ள சகடம் கலக்கழிய
காலோச்சி வெள்ளத்தரவில்
துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு
முனிவர்களும் யோகிகளும்
மெல்ல மெல்ல எழுந்து ஹரிஎன்ர
பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ
ரெம்பாவாய்
இயற்கையோடு இயைந்து,
இணைந்து வாழும் வாழ்வே
இன்பம் தரும்.
இயற்கையை சிதைத்து
செயற்கையாக வாழும் வாழ்வு
இனிக்கும் பலாப்பழத்தை படமாக
காகிதத்தில் வரைந்து அதை சுவைப்பதாக
கற்பனை செய்வது போலாகும்.
ஆனால் இன்று துரத்ருஷ்டவசமாக
இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு
வளங்கள் அழிந்ததால் அவைகளில்
வாழ்ந்த வந்த அனேக
உயிரினங்கள் அழிந்துவிட்டன.
ஆனால் மனித இனம் இன்னும்
பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை
ஏனென்றால் கண்ணிருந்தும்
குருடராய் வாழ்கின்றனர்.
ஆண்டாள் திருப்பாவையில்
முதல் பாடலிலிருந்தே இயற்கையை
போற்றுகின்றாள். ரசிக்கின்றாள்.
அது தரும் அளவில்லா இன்பத்தை
அனுபவித்துக்கொண்டே அனைத்திற்கும்
மூல காரணமாகிய இறைவனை கண்ணனை
பணிகின்றாள்.
கண்ணெதிரே காணும் பராசக்தியாம்
இயற்க்கையன்னையையும்
கடலைன்னையையும் ,வெப்பம் தரும் விமலனான
ஆதவனையும் குளிர் நிலவையும் போற்றிப் பாடுகின்றாள்.
அதிகாலை மூன்று மணியிலிருந்தே
வித விதமான பறவைகள்ஒலி எழுப்பத் தொடங்கும்.
அதைக் கேட்பதே ஒரு இன்பம்.
ஆதவன் உதயமாகும்போது அவைகள்
க்ரீச்சிட்டுக் கொண்டே பறந்து செல்வதை
காணுவது ரெட்டிப்பு இன்பம்.
ஆனால் ஆதவன் உதயமாகி
வெகு நேரம் கழித்து எழும் தற்கால மக்களுக்கு
இந்த இன்பத்தினை உணர இயலாது.
அவள் வாழ்ந்த காலத்தில் மக்களை
அதிகாலையில் இனிய குரலில் பாடி எழுப்பியது
அந்த பறவை இனங்களே
அதனால்தான் புள்ளும் சிலம்பினகாண்
,பறவைகள் கூவத் தொடங்கிவிட்டன
ஆதவன் வருகையை முன்னிட்டு என்கிறாள்.
இன்னும் உறங்கலாமோ என்கிறாள் தோழிகளிடம்.
அது சரி புள் மட்டும்தானா சப்தங்களை எழுப்புகிறது?
என்ற கேள்வி எழலாம்
பசு மாடு அம்மா என்று கத்துகிறது.
கண்ணனாகிய பரமாத்மா அனைத்து ஜீவன்களிலும்
ஆத்மாவாக இருந்து அவைகளை இயக்குகின்றான்.
அப்படி இருக்க ஏன் பறவைகள் சப்தமிட்டுதான்
மனிதர்கள் எழ வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது
அதற்கு ஒரு காரணம் இருக்கும்.
அது என்ன?
(இன்னும் வரும்)
அற்பதமானதொரு பகிர்வு! படைத்தவனி அருமையினை உணர்த்தி வருகின்றீர்கள் அய்யா!
ReplyDeleteஏதோ இவனுக்குள்ள சிற்றறிவினைக் கொண்டு
Deleteஇவன் உணர்ந்தததை வெளிப்படுத்துகிறேன் அவ்வளவுதான் .உங்களின் ஊக்கம் இவனின் பாக்கியம்
ஆஹா, திரும்பிப்பார்த்தால் ஒரு பாசுரம் + ஒரு நீண்ட விளக்கம். அருமை. மார்கழி முழுவதுமே தினமும் வேளாவேளைக்கு சாப்பிடுவதுபோல வேளாவேளைக்கு ஒரு பதிவு. ஒரே ஜாலிதான். வேறு ஜோலி எதுவும் பார்க்க முடியாமல் பகவானைப்பற்றியே சிந்திக்க முடிவதில் ஓர் திருப்தி. நடத்துங்கோ. நன்றி நன்றி நன்றி.
ReplyDeleteநன்றி நன்றி நன்றி.VGK
Deleteஅருமை... வாழ்த்துக்கள்....
ReplyDelete