Tuesday, December 10, 2013

ஸ்ரீ வெங்கடேசர்-ஸ்ரீ பத்மாவதி தாயார்

ஸ்ரீ வெங்கடேசர்-ஸ்ரீ பத்மாவதி தாயார் 





வேழங்களும் வேங்கைகளும்
திரியும் கானகம் வேங்கடம்

வேதங்கள் தன் தலைவனாம்
வேங்கடவனை தலைமுடிமேல்
தாங்கும் திருவேங்கடம்

மண்ணில்  வசிப்போர்  படியேறி  வந்து
பரந்தாமனை பணிந்து மகிழ்வார்

வானவரோ  விண்ணிலிருந்தே
மலையுச்சியின் கோயில் கொண்டிருக்கும்
கோவிந்தனை போற்றி பணிவார்.

அரங்கனை பிரியா அலர்மேல் மங்கை
மலை அடிவாரத்தில் அண்ணலைக்
காண வரும் அடியவர்களுக்கு துன்பம் தராமல்
அருட்காட்சி தர கொலு வீற்றிருக்கின்றாள்

என்னே அவள் கருணை!
திரு என்னும்  செல்வமும்  சுகமாய்
வாழ  அருளும்  முகத்தான்
திருசுகநூர்  என்ற  பெயர்  கொண்ட
தலத்தில்  வீற்றிருக்கும்
அன்னை அவள்.

ஏழு மலைகளின் உச்சியில்
வீற்றிருப்பதால் எம்பெருமான்
ஏழுமலை என்றே அழைக்கப்படுகின்றான்

திருவாகிய இலக்குமியோடு உறைவதினால்
திருப்பதி என்றே வணங்கப்படுகின்றான்

வெப்பம் சூழ்ந்த கடமாகிய நம்
உடலில் இதயாகாசத்தில் வசிப்பதால்
வேங்கடவன் என்ற திருநாமம்
கொண்டழைக்கப்படுகின்றான்  .

இருவரும்  தனித்தனியாக கோயில்
கொண்டாலும்  ஒருவருக்குள்
ஒருவர் உறைந்திருந்தாலும்
இருவரையும்
ஒருசேர தரிசனம் செய்ய
ஓர் வாய்ப்பை வலையன்பர்களுக்காக
உண்டாகியுள்ளேன்.

தரிசித்து இன்புறுங்கள்.



6 comments:

  1. தெய்வீக சித்திரம் வரைந்த கைகளை
    என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன்.
    நன்றிகள்

    ReplyDelete
  2. ஆஹா, அருமையான பகிர்வு. தரிஸித்து இன்புற்றேன். படமும் ஜோராக வந்துள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா.

    ReplyDelete
  3. ஆகா... அருமை...

    படம் மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
    Replies
    1. படத்தில் காட்சி தருபவரை அனுதினமும் வணங்குங்கள்
      உங்கள் வாழ்வு சிறக்கும்

      Delete