Thursday, December 12, 2013

இன்பமாய் வாழும் வழி

இன்பமாய் வாழும் வழி 

நான் என்ற எண்ணத்தை
தொடந்து வருவதுதான்
தான் என்ற எண்ணம்

தான் என்ற எண்ணத்தை
தொடந்து வருவதுதான்
தன்னுடையது
என்ற எண்ணம்

இவை இரண்டும் ஒரு
உயிருக்கு வந்தவுடன் அதற்க்கு
துன்பம் ஆரம்பமாகிவிடுகிறது.

தன்னிடம் ஒன்று இருந்தால் மகிழ்வதும்
அது தன்னை விட்டு நீங்கினால் வருந்துவதும்
அதை யாராவது பறித்துக் கொண்டால்
அவர்களை வெறுப்பதும்.மனம்
அல்லல்படுகிறது.

தன்னிடம் உள்ளதை பிறர் பறித்தால்
அதைக் காக்க போராடுவதும்.
இல்லாததை பிறரிடமிருந்து
சண்டையிட்டு பறிப்பதும்
அன்றாட வாடிக்கையாகிவிடுகிறது.

இதற்கெல்லாம் காரணம் அகந்தை என்னும்
அறியாமைதான்

அகந்தை இல்லாமல் குழந்தை
போன்ற மனம் இருந்தால்




துன்பமே இல்லை.

துன்பம் வந்தாலும்
இன்பம் வந்தாலும்
அது நம்மை எந்த
வகையிலும் நம்மை பாதிக்காது

வானத்தில் எந்தவிதமான
சுவடுகளையும் விடாது போகும்
 பலவிதமான மேகங்களைப் போல.

அந்த நிலை அடைய நம்முடைய
மனம் தயாராக வேண்டும்

எப்படி அந்த நிலையை அடைவது?

அது மிகவும் எளிது

நம்மை படைத்தது இறைவன்
நாம் இந்த உலகில் வாழ அனைத்து
வசதிகளையும் தருவது இறைவன்.

நம் உயிரில் உயிருக்கு உயிராய்
இருப்பவன் இறைவன் .

அவன் தருவதை மகிழ்ச்சியுடன் .
பெற்றுக்கொண்டு திருப்தியுடன்
 நம்முடைய கடமைகளை
ஆற்றி வந்தால் போதும்
எந்த துன்பமும் நம்மை அணுகாது.

அதற்கு இறைவனை
நாம் மறவாமல் இருக்கவேண்டும்.

அவனை மறவாமல் இருக்க
துணை செய்வதுதான் அவன் நாமங்கள்.

அதை இடைவிடாது
சொல்லிக் கொண்டிருந்தால் போதும்
எந்த இடையூறுகளும் நம்மை அண்டாது.

4 comments:

  1. முதலில் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் மிகச்சரி...

    வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. //அகந்தை இல்லாமல் குழந்தை போன்ற மனம் இருந்தால் துன்பமே இல்லை. அவனை மறவாமல் இருக்க துணை செய்வதுதான் அவன் நாமங்கள். அதை இடைவிடாது சொல்லிக் கொண்டிருந்தால் போதும்
    எந்த இடையூறுகளும் நம்மை அண்டாது.//

    OK Noted. மிகவும் அருமை. ;)

    ReplyDelete