புத்தாண்டு 2014 வருக வருக
இந்த புத்தாண்டு முதல் அனு தினமும்
ஏழுமலையானை நினையுங்கள்
ஏழுமலையானை நினைக்க நினைக்க
வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும்
(வலை நண்பர்களுக்காக திருவேங்கடவனின் படத்தை விசேஷமாய் வரைந்தேன் )
அனைவருக்கும் அவன் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான வாழ்வும், வாழ்வில் முன்னேற்றங்களும், அவன் திருவடிகளில் மாறாத பக்தியும் அருள பிரார்த்திக்கிறேன் )
புத்தாண்டே வருக
புதிய சிந்தனைகளைத் தருக
இரவு முழுதும் கூத்தடித்து
இறைவனை மறந்து
கும்மாளம் போடும்
மேலை நாட்டு
கலாச்சாரம் தவிர்த்திடுவோம்
காலமெல்லாம் நம்மை
கண்ணிமை போல் காக்கும் கற்பகக் களிறை
நினைவில் வைத்து வணங்கி
புத்தாண்டை தொடங்குவோம்
நம்மை வாட்டிவரும்
வினையெல்லாம்
மீண்டும் வாராமல் செய்யும்
வேலனை துதிப்போம்
ஆண்டின் தொடக்கத்தை
நம்மை எல்லாம் ஆட வைத்து
அருள் செய்யும் ஆடல்வல்லானின்
புகழை அதிகாலையில் பாடி
மன நிறைவுடன் புத்தாண்டை
வரவேற்போம்
வாழ்வைதந்து வளம் தந்து வல்லபம் கூட்டும்
முக்கண்ணி நம் முன்னே இருந்து எப்போதும் நம்மை எல்லாம் நம்மையெல்லாம் காக்கட்டும்
மார்கழி மாதத்தை
புனித மாதமாய் அறிவித்த
மாலவனின் புகழைப் பாடி
மகிழ்ச்சியோடு வரவேற்போம்
ஆண்டின் கூட்டு தொகையோ 7
நல்லிசையின் சுரங்களோ 7
ஆதார சக்திகளாய்
விளங்கும் சப்த மாதாக்களோ 7
இறைவனின் ஆணைப்படி
இவ்வுலகை ஆளும் ரிஷிகளோ 7
உயிர்கள் வினைப்படி பிறந்து
இன்ப துன்பங்களை
அனுபவிக்கும் பிறவிகளோ 7
கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் சப்தாகமோ 7
வைகுண்ட வாசன்
வாசம் செய்யும் மலைகளோ 7
ஏழுமலை இருக்க நமக்கு
எதற்கு மனக்கவலை ?
திருப்பதி வாசன்
திருவோடு விளங்கும் ஈசன்
அடியவர்களின் நேசன்
புத்தாண்டு நாளின் தொடக்கத்திலிருந்தே
அவன்நாமம் சொல்லுவோம்.
அவன் புகழைப் பாடுவோம்.
ஆண்டு முழுவதும் அல்லல் இல்லா வாழ்வை
பெற்று ஆனந்தமாய் வாழ்வோம்.
இந்த புத்தாண்டு முதல் அனு தினமும்
ஏழுமலையானை நினையுங்கள்
ஏழுமலையானை நினைக்க நினைக்க
வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும்
(வலை நண்பர்களுக்காக திருவேங்கடவனின் படத்தை விசேஷமாய் வரைந்தேன் )
அனைவருக்கும் அவன் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான வாழ்வும், வாழ்வில் முன்னேற்றங்களும், அவன் திருவடிகளில் மாறாத பக்தியும் அருள பிரார்த்திக்கிறேன் )
புத்தாண்டே வருக
புதிய சிந்தனைகளைத் தருக
இரவு முழுதும் கூத்தடித்து
இறைவனை மறந்து
கும்மாளம் போடும்
மேலை நாட்டு
கலாச்சாரம் தவிர்த்திடுவோம்
காலமெல்லாம் நம்மை
கண்ணிமை போல் காக்கும் கற்பகக் களிறை
நினைவில் வைத்து வணங்கி
புத்தாண்டை தொடங்குவோம்
நம்மை வாட்டிவரும்
வினையெல்லாம்
மீண்டும் வாராமல் செய்யும்
வேலனை துதிப்போம்
ஆண்டின் தொடக்கத்தை
நம்மை எல்லாம் ஆட வைத்து
அருள் செய்யும் ஆடல்வல்லானின்
புகழை அதிகாலையில் பாடி
மன நிறைவுடன் புத்தாண்டை
வரவேற்போம்
வாழ்வைதந்து வளம் தந்து வல்லபம் கூட்டும்
முக்கண்ணி நம் முன்னே இருந்து எப்போதும் நம்மை எல்லாம் நம்மையெல்லாம் காக்கட்டும்
மார்கழி மாதத்தை
புனித மாதமாய் அறிவித்த
மாலவனின் புகழைப் பாடி
மகிழ்ச்சியோடு வரவேற்போம்
ஆண்டின் கூட்டு தொகையோ 7
நல்லிசையின் சுரங்களோ 7
ஆதார சக்திகளாய்
விளங்கும் சப்த மாதாக்களோ 7
இறைவனின் ஆணைப்படி
இவ்வுலகை ஆளும் ரிஷிகளோ 7
உயிர்கள் வினைப்படி பிறந்து
இன்ப துன்பங்களை
அனுபவிக்கும் பிறவிகளோ 7
கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் சப்தாகமோ 7
வைகுண்ட வாசன்
வாசம் செய்யும் மலைகளோ 7
ஏழுமலை இருக்க நமக்கு
எதற்கு மனக்கவலை ?
திருப்பதி வாசன்
திருவோடு விளங்கும் ஈசன்
அடியவர்களின் நேசன்
புத்தாண்டு நாளின் தொடக்கத்திலிருந்தே
அவன்நாமம் சொல்லுவோம்.
அவன் புகழைப் பாடுவோம்.
ஆண்டு முழுவதும் அல்லல் இல்லா வாழ்வை
பெற்று ஆனந்தமாய் வாழ்வோம்.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுத்தாண்டிற்க்காக பிரத்தியேகமாக வரையப்பட்ட திருவேங்கடவனின் படம் நன்றாக இல்லையா ?
Deleteஉங்களின் மேலான கருத்துக்களை அறிய விழைகிறேன்.
நன்றி புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு
நீங்களே வரைந்திருக்கும் திருவேங்கடவன் படம் அற்புதம்.
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கு நன்றி Sriram
Deleteஏழுமலையான் பிரமாதம்...special effects...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
வணங்கி மகிழ்கிறேன்...
நமஸ்காரம்...
Nanri VK
Deleteஏழுமலையானை நினைக்க நினைக்க
ReplyDeleteவாழ்வில் ஏற்றம்தான் எப்போதும்
ஏற்றமிகு கைவண்ணம் அருமை..பாராட்டுக்கள்..
மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..!
வாழ்த்துக்கு நன்றி
Deleteஏழுமலையானை எண்ணித் துதிப்போர்க்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும்! கைவண்ணம் அருமை ஐயா!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி
Deleteஏழுமலையான் படமும், மற்ற படங்களும், அழகான நம்பிக்கையளிக்கும் செய்திகளும் என எல்லாமே அருமை.
ReplyDeleteஏழுமலையானை நினைக்க நினைக்க
வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும்
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள். புத்தாண்டு நமஸ்காரங்கள்.
எல்லோருக்கும் 31ஆம் தேதிஅதிகாலையிலேயே
Deleteபுத்தாண்டு வாழ்த்து சொன்னேன்
பகவானோ எனக்கு வேறுவிதமாக
புத்தாண்டு வாழ்த்து சொன்னான் 31 ஆம் தேதி. காலை .
31.12.2013 அன்று காலை சமையலறையில் நானும் என் மனைவியும் சமையலை கவனித்துக்கொண்டிருக்கும்போது குக்கர் வெடித்து சிதறியது.உடனே இருவரும் பதறி வெளியே ஓடினோம்.
அவளை இறைவன் காப்பாற்றிவிட்டான்.
பகவானின் அருளால்
அதிசயமாக இருவரும் உயிர் பிழைத்தோம்.
ஆனால் விதி இவனைமட்டும்
விடாது துரத்தி பறந்து வந்த
குக்கரின் மூடி என்னுடைய
இடது காலின் (குதிகாலின் மேல் உள்ள)
நரம்பை வெட்டிவிட்டது.
அறுவை சிகிச்சை செய்து
நேற்றுதான் வீட்டிற்கு வந்தேன்
15நாட்கள் பெட் ரெஸ்டில் அசையாமல்
கிடக்கவேண்டும். .என்று மருத்துவர் சொல்லிவிட்டார்
இந்த உலகில் துன்பப் படுவதற்கே
பிறவி எடுத்தவன் அல்லவா இவன்.
வலியும் எரிச்சலும் சில காலம்
இவனுடன் தங்கி விட்டுதானே செல்லும்.
கால் சரியாகி என்று நடேப்பேனோ தெரியவில்லை?
அவனுக்குத்தான் தெரியும்.
யாரிடமும் சொல்லவேண்டாமென்று நினைத்தேன்
சுவற்றிடமாவது சொல்லி அழு என்பார்கள்.
இருந்தாலும் தம்பியிடம் சொல்லத் தோன்றியது.
மன பாரத்தை .அவ்வளவுதான்.
நான் மீண்டும் கால் சரியாகி நடக்க வேண்டும் என்று பகவானிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
கேட்கக் கஷ்டமாக இருக்கிறது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று சொல்வார்களே, அது போல ஏதோ பெரிய கஷ்டத்திலிருந்து இறைவன் உங்களைக் காத்திருக்கிறான் என்று எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கட்டாயம் நடப்பீர்கள். இறைவனிடம் எங்கள் பிரார்த்தனைகளும். ஓய்வு எடுங்கள்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் உங்களைப் போன்ற அன்புள்ளங்களின் ஆறுதல் வார்த்தைகள் இவன் விரைவில் குணமடைந்து மீண்டும் சகஜ நிலைமைக்கு வர நிச்சயம் உதவும்.
Delete