Wednesday, December 18, 2013

கண்ணன்சொன்னதை கருத்தில் கொள்ளுவோம்.

கண்ணன்சொன்னதை 
கருத்தில் கொள்ளுவோம். 




இன்று சாஸ்திரங்கள்
நிர்ணயித்ததை முழுமையாக
யாரும் அனுசரிப்பதில்லை

அதற்க்கு காரணம் பல

இன்றைய வாழ்க்கை முறை

அதைப்பற்றிய
முழுமையான அறிவு இல்லாதது

அதைப் பற்றிய
தெளிவு இல்லாதது

மேலும் அதை அனுசரிப்பதில்
 பல்வேறு காரணங்களைக் கூறி மக்களைக்
குழப்பும் மடாதிபதிகள், பண்டிதர்கள்

அதைத் தவிர சாஸ்திரங்களின்
மொழிபெயர்ப்புகளைப் படித்துவிட்டு
எல்லாம் அறிந்தவர்போல் பேசும்
போலி சாமியார்கள்,குருக்கள்
என இந்து மதம் எடுப்பார்
கைப்பிள்ளையாக சிக்கி தவிக்கிறது.

சிலர் சடங்குகள்தான் முக்கியம்
என்று அதையே கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.

அதை செய்பவனுக்கும்
அதைப் பற்றிய அறிவு கிடையாது
செய்து வைப்பவர்களில்
பல பேருக்கு முழுமையான
அந்த அறிவு கிடையாது.

கிளிப்பிள்ளைகள் போல்
அவர் சொல்லுகிறார்.
இவர் ஏதோ பேருக்கு
முணுமுணுக்கிறார்.

முழுமையான ஈடுபாடு
இருவருக்கும் கிடையாது.

சொல்லுபவருக்கு ஈடுபாடு இருந்தால்
கேட்பவருக்கு நேரம் கிடையாது

இருவருமே நேரத்தின்  கைதிகள்
காசுக்கு அடிமையானவர்கள்

நம்முடைய சனாதன  தர்மத்தில்
அடிப்படை வழிபாடான சந்தியா வந்தனமே
யாரும் முழு ஈடுபாட்டுடன் செய்வது கிடையாது.

 ஏதோ ஒரு சிலர்  ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தால்
இந்த மதம் இன்னும் அழியாமல் இருக்கிறது

அதனால்தான் கலியுகத்தின் துவக்கத்தில்
 பகவான் கண்ணன் இனி இந்த உலகில்
எந்த தர்மமும் முறையாக அனுசரிக்க முடியாது
என்பதை உணர்ந்தே அடிப்படை
கடமைகளை மட்டுமாவது
விடாமல் செய்யுங்கள்

அதையும்  பலனைஎதிர்பாராமல்
செய்துகொண்டு மற்ற தர்மங்களை விட்டுவிட்டு
நானே கதி என்று என்னை சரணடைந்தால்
நான் உன்னை எல்லா பாவங்களிலும்
விடுவித்துக் காப்பாற்றுகிறேன்
என்று சத்திய பிரமாணம் செய்துள்ளான்.

அடிப்படைக் கடமைகள் என்ன
என்பதை அவரவர்களின் ஆசார்யர்கள்
தெளிவாக வரையறுத்துள்ளார்கள்.
அதன்படி செய்தல் நலம்.

அதைக்கூட செய்ய இயலாத அளவிற்கு
 நம் தலை மீது பாவ மூட்டைகள் உள்ளதாலும்
,இந்த உலக மாயையில் சிக்கி உள்ளம்
முழுவதும் சத் காரியங்களில்
ஈடுபடமுடியாத படிக்கு குப்பையாகப் போய்விட்டதாலும்
ராம நாம ஜபமாவது செய்யுங்கள் என்று  பல மகான்கள். அறிவுறுத்தியுள்ளார்கள்

அதையாவது செய்து கிடைத்த இந்த
பிறவியை வீணடிக்காமல்
பார்த்துக் கொள்ளவேண்டும்.

கண்ணன்சொன்னதை
 கருத்தில் கொள்ளுவோம். 

10 comments:

  1. //நம்முடைய சனாதன தர்மத்தில் அடிப்படை வழிபாடான சந்தியா வந்தனமே யாரும் முழு ஈடுபாட்டுடன் செய்வது கிடையாது.//

    கொடுமை. வருந்தத்தக்க விஷயமே. ;(

    //ராம நாம ஜபமாவது செய்யுங்கள்//

    அருமை. பகிர்வுக்கு நன்றிகள். ;)

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது ?
      நம்மை நாமே சுய பரிசோதனைக்கு
      உட்படுத்திக்கொண்டுதான் ஆகவேண்டும்
      வேறு வழியில்லை

      உண்மை கசக்கத்தான் செய்யும்.

      ஏழு வயதிற்குள்
      உபநயனம் செய்விக்க வேண்டும்
      அதை யாரும் செய்வது கிடையாது.

      ஜானவாசத்திர்க்கு முதல்நாள்தான்
      பூணலை மாட்டுகிறார்கள்.
      அதுவும் அவசர அவசரமாக
      ஒரு பெண்ணிடம் மாட்டிக்கொள்ள

      உபனயனத்திர்க்கு
      செலவே கிடையாது

      ஆனால் லட்சக்கணக்கில் செலவு செய்து
      அந்த சடங்கை செய்கிறார்கள்.
      அதற்க்கு சம்பந்தமில்லாதவர்களைஎல்லாம்
      அழைத்து தங்கள் பண திமிரைக் காட்டுகிறார்கள்.

      அதனால்தான் ஒன்றும்
      உருப்படுவது கிடையாது.

      அந்த சடங்கிற்கு 20000 ரூபாய்க்கு
      குறைவில்லாமல்
      வாத்தியார் வாங்குகிறார்.
      ஏதோ ஜபிப்பவர்களுக்கு சில நூறுகளை
      கொடுத்துவிட்டு மற்றதை சுருட்டுகிறார்.

      அவ்வளவு தொகை வாங்கும் வாத்தியார்
      ஒரு மாதம் தினமும் வந்து அந்த
      குழந்தைக்கு சந்தியா வந்தனத்தை
      முறையாக மூன்று வேளையும் கற்பித்தால்
      அந்த காசு ஜீரணமாகும்.

      ஆனால் அது நடக்கப்போவதில்லை

      இளம் வயதிலேயே உபநயனம் செய்து வைத்து
      சந்தி சாவித்ரியை உபதேசம் செய்து தினமும்
      அதை செய்யுமாறு வழக்கப்படுத்திவிட்டால்
      போதும். அது அவன் வாழ்க்கையோடு
      ஒட்டிக்கொண்டு விடும்.

      அதே நேரத்தில் பெரியவர்களும்
      செய்யவேண்டும் அவர்களை
      செய்விக்க வேண்டும் .
      இரண்டும் கிடையாது.

      எல்லாம் வெளி வேஷம்

      பெரியவா போன்றவர்களைப்
      பார்க்கும்போது மட்டும் பவ்யம்.

      மற்ற நேரத்தில் என்ன நடக்கிறது
      என்பது எல்லோரும் அறிந்த விஷயம்.

      நம்மை காக்கும் காயத்ரியை விட்டுவிட்டு
      ஊரில் உள்ள எல்லா தெய்வங்களையும்
      அற்ப பலன்களை யாசித்து விரதம்
      இருந்து அலைவதால்
      ஒன்றும் பயன் இல்லை.

      நம்முடைய ஆத்மா கடைதேறும்
      வழியை யாரும்
      பார்ப்பதில்லை.

      மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள்
      நாம் அவர்களை எப்படி overtake பண்ணலாம்
      என்பதிலேயே ஆயுள் முடிந்து விடுகிறது.

      Delete
  2. "ராம நாமத்தைச் சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்".

    செய்து வைப்பவனுக்கும் நேரம் கிடையாது - பணத்தின் அடிமை. அடுத்த கஸ்டமரிடம் ஓட வேண்டும்.

    செய்பவருக்கும் நேரம் கிடையாது. பயம். செய்யாமல் விட்டால் 'ஏதாவது' ஆகி விடுமோ என்று பயம். எனவே கடமைக்கு, கிடைத்த நேரத்தில் ஒன்றைச் செய்து ஒப்பேற்றி விடுவது.

    கண்ணன் நாரதருக்குக் காட்டிய எண்ணெய் வியாபாரியின் பக்தி போல உள்ளார்ந்த பக்தியுடன் ஒருமுறை பகவான் நாமா சொன்னால் போதும்!

    ReplyDelete
    Replies
    1. "ராம நாமத்தைச் சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்".
      நிச்சயமாக அதைதான் வலியுறுத்தி கொண்டிருக்கிறேன் கடந்த சில ஆண்டுகளாக "இந்த வலைப்பதிவு மூலம். தியாக பிரம்மத்தின் 100 கீர்த்தனங்களின் தமிழாக்கத்தை எழுதி வலையில் இட்டேன். படித்தவர்கள் வெகு சிலரே. என்ன செய்ய?
      எல்லாம் அவன் திருவுள்ளம்.

      Delete
  3. "ரசாயன உரம் போடமல் இயற்கை உரம் போட்டு விளைவித்த காய் கறிகள்.."
    எப்படி நம்புவது??..விலை அதிகம் என்பதால் உண்மை என்று நம்புகிறோம்....
    "ஸ்ரார்த்தம் போன்றவைகளை செய்யாமல் விட்டால் எதாவது நேர்ந்து விடுமோ என்கிற அசசம்..
    என் அனுபவம்...மிகவும் கசப்பானது..."கேவலம் எனக்கே நன்கு தெரிந்த சில விஷயங்களை விட்டு விட்டார் வாதயார்..இந்த முறை...பித்ரு ஸ்தானத்தில் சாபபிட வந்தவர்...வேண்டாம் கூற விரும்பவில்லை...
    காரியம் முடிந்த பிறகு 2 நாள் மன உளைசசல்...என்ன செய்வது???

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஏன் மன உளைச்சல் படவேண்டும்?
      உங்களுக்கு நன்றாக செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருக்கிறது .
      வாத்தியார்சரியாக செய்யவில்லை என்றால் அந்த பாவம் அவரைத்தான் போய் சேரும்.
      வர வர வரிப்பதர்க்கு ஆட்களே கிடைக்கவில்லை என்று வாத்தியார்கள் சொல்கிறார்கள்.
      அதற்க்கு பல மாதங்களுக்கு முன்பே புக் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
      அபார காரியங்களுக்கு வாத்தியாரே கிடைப்பதில்லை. ஏனென்றால் அதை செய்யும் வாத்தியார்கள் அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு சுப காரியங்களுக்கு அழைப்பதில்லை.
      மற்ற மதங்களில் சடங்குகளை செய்ய அதற்கென்றே அதிக அளவில் நபர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். நம்முடைய மதத்தில் அதற்க்கு ஆட்களை அனுப்புவதில் தயக்கம் காட்டுகிறோம். அதனால்தான் இந்த அவல நிலை.
      இதற்க்கு மடாதிபதிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      Delete
  4. /// முழுமையான ஈடுபாடு இருவருக்கும் கிடையாது.... ///

    மேலும் பல உண்மைகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உண்மை கசக்கத்தான் செய்யும்.

      Delete
  5. இராம நாமம் தினமும் உச்சரிக்க வேண்டும் என்கிற சிந்தனையை மனதினில் பதியாதோர் எண்ணிக்கை தான் அதிகம்! விதி வலியது அல்லவா? சொல்லி வந்தால் கடைத்தேறி விடுவானே? விடலாமா இந்த சுய நலவாதிகளை! வறுத்தெடுக்க வேண்டாமா?

    வறட்சி - வறுமை தந்து வளமற்ற வாழ்வு வாழ் என்று விதி நிர்ணயமாகின்றது.

    கற்றதை பிறர் அறியச் செய்ய வேண்டுமென்கிற உணர்வு வரவேண்டும் அய்யா! மாற்றம் மனதினில் உருவாக வேண்டும்....

    ஆதங்கப்படுவதில் பிரயோசனமில்லை என்பதனை வருத்தத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

    சிறப்பானதொரு விழிப்புணர்வைத் தரும் பகிர்விற்கு நன்றி அய்யா!

    ReplyDelete
    Replies
    1. அய்யா நான் ஆதங்கப்படவில்லை.
      ஆதங்கப்பட்டால் ராம நாமத்தின் பெருமைகளை பற்றி 662 பதிவுகள் வெளியிருக்கமாட்டேன். இவன் வேலை வெளியிடுவதோடு சரி.ப்ராப்தமிருந்தால் உணர்ந்துகொள்வார்கள். பிராரப்தம் இருந்தால் நஷ்டம் அவர்களுக்குத்தான். இவன் அந்த ராமனின் கருவி அவ்வளவுதான். நன்றி

      Delete