அன்ன தானத்தின் மகிமை
எந்த பலனையும் எதிர்பாராது
அன்புடன் அன்ன தானம் செய்வதால்
,இறைவனும். சித்தர்களும், ரிஷிகளும்,
ஜீவன் முக்தர்களும் அதை உண்பவர்களோடு
வந்து சேர்ந்துஅமர்ந்துகொண்டு அதை
ஏற்றுக்கொள்ளும்போது நம்முடைய
பாவமெல்லாம் காணாமல் போகும்.
நம்முடைய வாழ்வு செழிக்கும்.
தெய்வ சக்தி உள்ள மகான்களின்
கண்ணுக்கு மட்டும் அவர்கள்
ஒளி வடிவமாகத் தெரிவார்கள்.
மற்றவர்கள் கண்ணுக்கு
தெரியமாட்டார்கள்.
ஒருவர் இதை கேள்விப்பட்டு
அவர் குருவின் ஆணைப்படி விடாமல்
அன்னதானம் செய்துவந்தார்.
அவருக்கு அன்னதானத்தில் பங்கு கொள்ளும்
ஒரு மகானை பார்க்கவேண்டும்
என்று குருவை வேண்டினார்.
குரு சொன்னார் உன்னால்
அவர்களைப் பார்க்க முடியாது.
அவர்கள் ஒளி வடிவமானவர்கள்.
பார்த்தால் உன் பார்வை போய்விடும்
என்று எச்சரித்தார்
பார்வை போனால் பரவாயில்லை.
நான் பார்க்க வேண்டும். என்று
மீண்டும் வேண்டிகொண்டார்.
மீண்டும் ஒருநாள் வருகிறேன்
அப்போது காட்டுகிறேன் என்றார்.
நூற்றுகணக்கான பேர்கள் உணவை
வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்
அவர்கள் சென்ற பிறகு இன்னும்
சிலர்மட்டும் இருக்கும்போது,
குரு சொன்னார்
இரண்டு ரிஷிகள் வந்திருக்கிறார்கள்.
என்று கூறி அவர்களுக்கு நமஸ்காரம் செய் என்றார்
ஆனால் அன்னதானம் செய்பவருக்கு
ஒன்றும் தெரியவில்லை.
அவர் அங்கு எதிரே நின்றவர்களை
நமஸ்காரம் செய்தார்.
குருவின் அருளால் அவர்களைக் கண்டார்.
ஜோதியாக இருந்த அவர்களக் கண்டதும்
இவர் பார்வை பறிபோனது.
அதனால்தான் அவர் அடுத்த தலைமுறையிலும்
இந்த அன்ன தானத்தினை தொடர்ந்து செய்து
வருகிறார்கள் என்று படித்தேன் பல ஆண்டுகளுக்கு முன்.
ஆனால் அது எந்த ஊர், எந்த குடும்பம்
என்ற விவரங்கள் நினைவில் இல்லை.
ஆனால் அதுபோன்ற சம்பவம்
சில ஆண்டுகளுக்கு
முன் இவன் வீட்டில் நடந்தது.
காலை மணி 11 மணி இருக்கும்
ஒரு வயதான பெரியவர்.
வயது 70 க்கு மேல் இருக்கும்
நான் மந்த்ராலயம் போய்க்கொண்டிருக்கிறேன்.
எனக்கு பசிக்கிறது. ஏதாவது தரமுடியுமா.?
என்று கேட்க கொஞ்சம் ரசம் சாதம் தான் இருக்கிறது
என்று மனைவி சொல்ல அதைப் போடு என்றார்.
வீட்டின் பின்புறத்தில் வாழை இலையை பறித்து
அதில் அவருக்கு இருக்கின்ற
உணவைப்பரிமாற நினைத்து
உள்ளே வாருங்கள் என்றேன்.
அவர் போர்டிகொவிலேயே
அமர்ந்து சாப்பிட்டுவிட்டு நீரை அருந்திவிட்டு
அவரும் அதை சாப்பிட்டுவிட்டு திருப்தியாக இருக்கிறது
என்று ஆசீர்வாதம் செய்து விட்டு வெளியே கிளம்பினார்
கையில் சிறிது காசைக் கொடுத்து வெளியில்
எங்காவது சாப்பிடுமாறும் கூறினோம்.
நாங்கள் அவர் செல்வதை பார்த்துக்கொண்டு
நின்று கொண்டிருந்த போதே
அவர் எங்கள் கண்ணிலிருந்து மறைந்துவிட்டார்.
அவருக்கு வயிறார உணவிடமுடியவில்லையே
என்ற சிறு குறை இருந்தது. ஆனால்
அவர் இதுவே எனக்கு அதிகம் .போதும் என்றார்.
இந்த சம்பவத்திலவர் வயிறும் நிறைந்தது.
எங்கள் மனமும் நிறைந்தது.
எந்த பலனையும் எதிர்பாராது
அன்புடன் அன்ன தானம் செய்வதால்
,இறைவனும். சித்தர்களும், ரிஷிகளும்,
ஜீவன் முக்தர்களும் அதை உண்பவர்களோடு
வந்து சேர்ந்துஅமர்ந்துகொண்டு அதை
ஏற்றுக்கொள்ளும்போது நம்முடைய
பாவமெல்லாம் காணாமல் போகும்.
நம்முடைய வாழ்வு செழிக்கும்.
தெய்வ சக்தி உள்ள மகான்களின்
கண்ணுக்கு மட்டும் அவர்கள்
ஒளி வடிவமாகத் தெரிவார்கள்.
மற்றவர்கள் கண்ணுக்கு
தெரியமாட்டார்கள்.
ஒருவர் இதை கேள்விப்பட்டு
அவர் குருவின் ஆணைப்படி விடாமல்
அன்னதானம் செய்துவந்தார்.
அவருக்கு அன்னதானத்தில் பங்கு கொள்ளும்
ஒரு மகானை பார்க்கவேண்டும்
என்று குருவை வேண்டினார்.
குரு சொன்னார் உன்னால்
அவர்களைப் பார்க்க முடியாது.
அவர்கள் ஒளி வடிவமானவர்கள்.
பார்த்தால் உன் பார்வை போய்விடும்
என்று எச்சரித்தார்
பார்வை போனால் பரவாயில்லை.
நான் பார்க்க வேண்டும். என்று
மீண்டும் வேண்டிகொண்டார்.
மீண்டும் ஒருநாள் வருகிறேன்
அப்போது காட்டுகிறேன் என்றார்.
நூற்றுகணக்கான பேர்கள் உணவை
வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்
அவர்கள் சென்ற பிறகு இன்னும்
சிலர்மட்டும் இருக்கும்போது,
குரு சொன்னார்
இரண்டு ரிஷிகள் வந்திருக்கிறார்கள்.
என்று கூறி அவர்களுக்கு நமஸ்காரம் செய் என்றார்
ஆனால் அன்னதானம் செய்பவருக்கு
ஒன்றும் தெரியவில்லை.
அவர் அங்கு எதிரே நின்றவர்களை
நமஸ்காரம் செய்தார்.
குருவின் அருளால் அவர்களைக் கண்டார்.
ஜோதியாக இருந்த அவர்களக் கண்டதும்
இவர் பார்வை பறிபோனது.
அதனால்தான் அவர் அடுத்த தலைமுறையிலும்
இந்த அன்ன தானத்தினை தொடர்ந்து செய்து
வருகிறார்கள் என்று படித்தேன் பல ஆண்டுகளுக்கு முன்.
ஆனால் அது எந்த ஊர், எந்த குடும்பம்
என்ற விவரங்கள் நினைவில் இல்லை.
ஆனால் அதுபோன்ற சம்பவம்
சில ஆண்டுகளுக்கு
முன் இவன் வீட்டில் நடந்தது.
காலை மணி 11 மணி இருக்கும்
ஒரு வயதான பெரியவர்.
வயது 70 க்கு மேல் இருக்கும்
நான் மந்த்ராலயம் போய்க்கொண்டிருக்கிறேன்.
எனக்கு பசிக்கிறது. ஏதாவது தரமுடியுமா.?
என்று கேட்க கொஞ்சம் ரசம் சாதம் தான் இருக்கிறது
என்று மனைவி சொல்ல அதைப் போடு என்றார்.
வீட்டின் பின்புறத்தில் வாழை இலையை பறித்து
அதில் அவருக்கு இருக்கின்ற
உணவைப்பரிமாற நினைத்து
உள்ளே வாருங்கள் என்றேன்.
அவர் போர்டிகொவிலேயே
அமர்ந்து சாப்பிட்டுவிட்டு நீரை அருந்திவிட்டு
அவரும் அதை சாப்பிட்டுவிட்டு திருப்தியாக இருக்கிறது
என்று ஆசீர்வாதம் செய்து விட்டு வெளியே கிளம்பினார்
கையில் சிறிது காசைக் கொடுத்து வெளியில்
எங்காவது சாப்பிடுமாறும் கூறினோம்.
நாங்கள் அவர் செல்வதை பார்த்துக்கொண்டு
நின்று கொண்டிருந்த போதே
அவர் எங்கள் கண்ணிலிருந்து மறைந்துவிட்டார்.
அவருக்கு வயிறார உணவிடமுடியவில்லையே
என்ற சிறு குறை இருந்தது. ஆனால்
அவர் இதுவே எனக்கு அதிகம் .போதும் என்றார்.
இந்த சம்பவத்திலவர் வயிறும் நிறைந்தது.
எங்கள் மனமும் நிறைந்தது.
ஸ்ரீ ராகவேந்திர மஹானை தவிர வேறு யார் வந்திருக்க முடியும்?
ReplyDeleteநீங்கள் இருவரும் கொடுத்து வைத்த புண்ணியவான்கள்..நமஸ்காரம்...
நிச்சயமாக. உங்கள் ஊகம்
Deleteசரியாகத்தான் இருக்கும்.
சிலிர்க்க வைக்கும் அனுபவம். பகிர்வுக்கு நன்றிகள். என்னிடம் ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார்:
ReplyDelete”நீ வைத்தீஸ்வரன் கோயில் போன்ற கோயில்களுக்குச்செல்லும் போது சில்லரைக்காசுகளோ, ரூ 5 ரூ 10 நோட்டுக்களோ அதிகமாக எடுத்துச்செல். அங்கு காவி உடையுடன் ருத்ராக்ஷம் அணிந்து, கையில் திருவோடு வைத்து உள்ள அனைத்துப் பிச்சைக்காரர்களுக்கும் ஒருவர் விடாமல் பணம் கொடு. அதில் நிச்சயம் சாக்ஷாத் பரமசிவனும் ஒருவராக இருப்பார். தர்மம் தலைக்காக்கும்” என்று சொல்லியிருக்கிறார். அது முதல் நானும் அவ்வாறே முடிந்தவரை செய்து வருகிறேன்.