ஹனுமத் ஜெயந்தி (1.1.2014)
அஞ்சனை மைந்தன்
அடியவர்களின் நேயன்
ஆற்றல் மிக்கவன்
ஆறுதல் தருபவன்
நெடியோனின் பக்தன்
கொடியோரை வதைப்பவன்
வாயு குமாரன்
வாதை தீர்ப்பவன்
புலன்களை வென்றவன்
புகழ்ச்சிக்கு அடிமையாகாதவன்
பணிவுடன் இருப்பவன்
துணிவுடன் செயல்படுபவன்
அன்னை சீதையின்
சோகம் போக்கியவன்
தன்னை நாடிவருபவர்
ரோகம் நீக்குபவன்
ராம நாமத்தை
நெஞ்சினில் கொண்டவன்
பஞ்சு போல் காற்றில்
பறந்து கடலைக் கடந்தவன்
வாலியின் தம்பிக்கு
வாழ்வளித்தவன்
வணங்குவோருக்கேல்லாம்
வரங்களை அள்ளித் தருபவன்
ஆதவன்போல் ஒளி வீசுபவன்
முழு நிலவு போல்
குளிர்ந்த பார்வையுடைவன்
வாலையின் சக்தியை தன்
வாலில் கொண்டவன்.
வாழ்த்தி பாடினால்
வளம் கொண்ட
வாழ்வை அருள்பவன்
காண்பார் யாரையும்
கரம் கூப்புவான்
அவர்களின் இதயத்திலே
உறையும்
ஆத்ம ராமனை கண்டு
புத்தியையும் தருவான்
சக்தியையும் தருவான்
துணிவையும் தருவான்
பயமற்ற வாழ்வும் தருவான்
வாக்கு வன்மையையும் தருவான்
அன்போடு அவன் நாமம் சொல்லி
பணிவோடு அனுதினமும்
வழிபடுவோர்க்கே
ஜெய் மாருதி
Art-T.R.Pattabiraman
அஞ்சனை மைந்தன்
அடியவர்களின் நேயன்
ஆற்றல் மிக்கவன்
ஆறுதல் தருபவன்
நெடியோனின் பக்தன்
கொடியோரை வதைப்பவன்
வாயு குமாரன்
வாதை தீர்ப்பவன்
புலன்களை வென்றவன்
புகழ்ச்சிக்கு அடிமையாகாதவன்
பணிவுடன் இருப்பவன்
துணிவுடன் செயல்படுபவன்
அன்னை சீதையின்
சோகம் போக்கியவன்
தன்னை நாடிவருபவர்
ரோகம் நீக்குபவன்
ராம நாமத்தை
நெஞ்சினில் கொண்டவன்
பஞ்சு போல் காற்றில்
பறந்து கடலைக் கடந்தவன்
வாலியின் தம்பிக்கு
வாழ்வளித்தவன்
வணங்குவோருக்கேல்லாம்
வரங்களை அள்ளித் தருபவன்
ஆதவன்போல் ஒளி வீசுபவன்
முழு நிலவு போல்
குளிர்ந்த பார்வையுடைவன்
வாலையின் சக்தியை தன்
வாலில் கொண்டவன்.
வாழ்த்தி பாடினால்
வளம் கொண்ட
வாழ்வை அருள்பவன்
காண்பார் யாரையும்
கரம் கூப்புவான்
அவர்களின் இதயத்திலே
உறையும்
ஆத்ம ராமனை கண்டு
புத்தியையும் தருவான்
சக்தியையும் தருவான்
துணிவையும் தருவான்
பயமற்ற வாழ்வும் தருவான்
வாக்கு வன்மையையும் தருவான்
அன்போடு அவன் நாமம் சொல்லி
பணிவோடு அனுதினமும்
வழிபடுவோர்க்கே
ஜெய் மாருதி
அருமை ஐயா... கைவண்ணம் பிரமாதம்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி DD
Deleteநாமக்கல் சென்று வந்த திருப்தி.
ReplyDelete"சுந்தரன்"சுந்தரமாக இருக்கிறார்.
அருமை! நன்றிகள்.
எல்லாம் அந்த அஞ்சனை மைந்தனின் அருள்
Delete//புத்தியையும் தருவான், சக்தியையும் தருவான் , துணிவையும் தருவான், பயமற்ற வாழ்வும் தருவான், வாக்கு வன்மையையும் தருவான் //
ReplyDeleteஆஹா, ஜெய் மாருதி !
ஹனுமனின் படம் அழகாக கம்பீரமாக விஸ்வரூபமாக வந்துள்ளது. பாராட்டுக்கள் அண்ணா. பகிர்வுக்கு நன்றிகள்.
உங்கள் வலைப்பதிவில் வரும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் மாருதியின் அருள் வாழ்நாள் முழுவதும். பரி பூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன்.
Deleteசுந்தரனின் அருளால், இறை நினைவோடு இராம ராம என்னும் திரு நாமம் உச்சரித்து,....தொடருகின்ற காலம் கழிய மனமுருகி வேண்டுவோம்!... புதிய ஆண்டில் எல்லாமும் பெற்று வாழ்ந்திட, இறைஞ்சுகின்றேன் இறைவனிடம்!
ReplyDelete