Monday, December 2, 2013

கண்ணா உன்னை அறியும் மார்க்கம் எது?


கண்ணா உன்னை 
அறியும் மார்க்கம் எது? 

நீல வண்ண மேனியனே
உள்ளன்போடு உன்னை நினைப்போர்
உள்ளத்தில் வாழும் புண்ணியனே

அகத்தில் ஒளியாய் இருக்கின்றாய்
அதை அறியாதிருப்பதால்
புறத்தே ஆதவன் ஒளியாய்
தோன்றுகின்றாய்

காலையில் செங்கதிராய்  கண்முன்னே
நீ உதித்தாலும்  உன்னை துதிக்காது
உறங்குகிறது இந்த மனிதர் கூட்டம்.

இரவிலும் மதியாய் ஒளி வீசுகின்றாய்
மதி இழந்த இந்த மானிடர்கள் கூட்டம்
மாடி வீட்டிற்குள் பதுங்கி ஒதுங்குகிறது.

கண்ணெதிரே நீ வந்தாலும் உன்னை
காண இயலா மாந்தர்கள். கல்லிலும்
இருட்டிலும் தேடுகிறார்.
பன்னெடுங் காலமாக

கோயிலில் சிலையாய்
 நீ நின்றிடினும்
உன்  திருவடிவைக்
 காண ஒளி வேண்டும்

அங்கும் விளக்கின்
ஒளியாய்கண்முன்
தோன்றுகின்றாய்

கற்ப்பூர ஜோதியில்
உன் முகம்
காட்டுகின்றாய்.




உன்னை அறியும் வழியைத்தான்
இந்த உலகத்து மானிடர்கள் உணராது
உழலுகிறார்

உண்மையை அவர்கள் உள்ளத்தில்
நீயல்லவோ உணர்த்தவேண்டும்!


4 comments:

  1. கண்ணா உன்னை அறியும் மார்க்கம் எது?

    அண்ணா சொல்லும் மார்க்கமே தான்.

    ராம ரஸத்தைபருகு ..... போதும்.

    - கண்ணன் - மணிவண்ணன் - கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
    Replies
    1. ராம ரசத்தை பருகினால் மட்டும் போதாது
      அவனை நினைத்து உருகவும் வேண்டும்

      Delete
  2. /// இரவிலும் மதியாய் ஒளி வீசுகின்றாய்.. ///

    அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete