Sunday, December 8, 2013

தில்லை அம்பல நடராஜா!

தில்லை அம்பல நடராஜா!



























பேரம்பலத்தில்
நடம் புரியும் ஈசனே

திருச்சிற்றம்பலத்தில்  நடம் புரிய
வந்து நின்று அருட்காட்சி தந்தாய்
உன்னை அறியவொண்ணா
மதி படைத்த எங்களுக்கு

அண்ட  சராசரங்களை
ஆட்டி  வைக்கின்றாய்
ஒவ்வொரு  அணுவினுள்ளும்
இருந்துகொண்டு
அனவரதமும் இயங்குகின்றாய்

இந்த உலக உயிர்களின் 
ஆட்டமும் பாட்டமும் உன்னாலே 
என்று உணர்ந்தனர் சித்தர்கள் 

தங்கள் சித்தத்தை உன்பால் 
வைத்துவிட்டு உயிர்கள்பால் 
அன்பு செய்து வாழ்கின்றனர். 

எல்லாம் தன்னாலே என்று 
அகந்தை  கொண்டலையும் 
 மானிடரோ  தன்மீதும் 
 பிறர்மீதும் வெறுப்பை 
உமிழ்ந்து  பொறுப்பின்றி 
திரிகின்றனர் 

படைத்தவன் 
ஒருவன் இருக்கிறான்
அவன்தான் அனைத்து 
உயிர்களையும் காக்கின்றான் 
என்பதை உணராத 
மூடர்களும் கசடர்களும் பிற 
உயிர்களை துன்புருத்துவதிலேயே  
இன்பம்  கண்டு  உன்  கோபத்துக்கு  
ஆளாகி  வீணே  மடிகின்றனர் . 

அன்பே  உருவாய்  ஆனவனே 
ஆனந்த நிலையில் 
நீ  களிக்கூத்து ஆடினால்    
இவ்வுலகம்  வாழும் , 
உயிர்பெறும் , தழைக்கும் 
இன்பம் தாண்டவமாடும் 

ஊழி  முதல்வனே ! 
நீ சினந்து  ஊழிக்கூத்து  ஆடினால்  
அண்ட சராசரம்  அனைத்தும் . 
அழிந்து  உன்னில் ஒடுங்கும் 
மீண்டும் புதிதாய்  தோன்ற . 

ஆக்குபவனும்
அழிப்பவனும்
நீதான் என்றறிந்தேன்

காப்பவனும் .
கடைக்கண்ணால்  நோக்கி
அழியா  ஆனந்த  பதம்  அளிப்பவனும்
நீதான்  என்றறிந்தேன்

இனி  எக்கணமும்
உன்னை விட்டு  அகலேன் .

எதற்கும் இணையில்லா
உன் நாமம்  என்றும்
துணை கொள்வேன்.

ஓம் நமசிவாய! 


6 comments:

  1. என்றும் துணை கொள்ள வேண்டிய கருத்துக்கள் ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD
      படத்தை கவனிக்கவில்லையா?
      கணினி மூலம் கலைவண்ணம்

      Delete
  2. //ஆக்குபவனும் அழிப்பவனும் காப்பவனும் கடைக்கண்ணால் நோக்கி அழியா ஆனந்த பதம் அளிப்பவனும் நீதான் என்றறிந்தேன்

    இனி எக்கணமும் உன்னை விட்டு அகலேன் .//

    அருமை, அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. என்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவை
    நன்றி ஐயா

    ReplyDelete

  4. Ramesan Visvanathan
    8:58 AM (4 hours ago)

    to me
    Respected Sir,
    Namaskarangal. Thank you for the poem on Lord Sri Nataraja. Request you to add a few lines for Goddess Sri Sivakami as well. It is always in my mind that our prayers should always be for the Ammaiyum Appanum.
    If I am wrong, please bear with me.
    V Ramesan


    Pattabi Raman
    1:28 PM (0 minutes ago)

    to Ramesan
    sure.

    The idol of Lord Sri Nataraja is a rare one. I have installed it in a 1000 year old Iravatheswarar temple in TamilNadu. by computer graphics.After finished my work
    the poem started in my mind. and then published it.

    Sure soon I will draw Lord Nataraja along wih ambaal Sivakaami and write a poem,.
    Thank you for your comments.
    T RPattabiraman

    ReplyDelete