Tuesday, December 10, 2013

காக்கும் தெய்வம் கண்ணன்

காக்கும் தெய்வம் கண்ணன் 
என்பதை அறிவீரோ   ?


கோயிலிலே  கல்லாய்  நின்றாலும்
காக்கும் தெய்வம்
கண்ணன் என்பதை அறிவீரோ ?





தூணிலும்   இருப்பவன்
துரும்பிலும்  இருப்பவன்
நம்  கண்  முன்  ஓடும்
சிறிய  எறும்பிலும்  இருப்பவன்

எப்போது பார்த்தாலும்
உலக மாயையில் மதி மயங்கி
அகந்தையில் மூழ்கி
அறியாமையில் உறங்கி கிடக்கும்
நம்முள்ளும் இருப்பவன்
கல்லில்  இருக்கமாட்டானோ ?

மனமது  செம்மையானால்
மந்திரம்  ஜபிக்கவேண்டா
என்றான்  அகத்தியபெருமான் ?

மனம்  செம்மைப்படவே
மகாபாரத போரின்  இடையே
 மகிமை  பொருந்திய
கீதையை தந்தானன்ரோ?

வாழ்க்கை எனும் போராட்டத்தில்
அவன் கூறிய உபதேசங்களை
துணைக்கொண்டால்
ஐம்புலக்  கள்வர்களும்
வானில் சுற்றும் கோள்களும்
நமக்குதுன்பம்
இழைப்பாரோ?

சொல்வீர் அவன் நாமம்
எப்போதும்.இப்போதும்
என்றென்றும்
இன்பமாய் வாழ்ந்திடவே. 

4 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா... உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //தூணிலும் இருப்பவன், துரும்பிலும் இருப்பவன், நம் கண் முன் ஓடும் சிறிய எறும்பிலும் இருப்பவன்//

    அழகாகச் சொன்னீர்கள், அருமை. பாராட்டுக்கள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. அன்று அவன் சொன்னதை
      இன்று இவன் நினைவுபடுத்துகிறான் அவ்வளவுதான்

      Delete