அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(11)
கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே!போதராய்;
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய் .
ஆண்டாள் இந்த பாசுரத்திலும்
உறக்கத்தைப் பற்றிதான் பேசுகிறாள்.
ஏற்கெனவே பத்து பாசுரங்களில்
உறக்கத்தை விட்டொழித்து
உலகேழும் உண்டு உமிழ்ந்தவனின் நாமத்தை
சொல்லி நற்கதி பெறுமாறு மீண்டும் அழைக்கிறாள்.
என்னதான் சொன்னாலும் மக்களுக்கு
இறைவன் மீது நாட்டம் கொள்வது இல்லை
ஆட்டம் பாட்டத்தில் இருக்கும்
ஆர்வம் வாட்டம் போக்கும்
இறைவன் மீது உண்டாவதில்லை.
இவ்வுலக போகங்களை அனுபவித்த
மனம் மீண்டும் மீண்டும் அதை அனுபவிக்கத் துடிக்கிறது.
அதற்காக பலவிதங்களில் நடிக்கிறது
இதயத் துடிப்பு நின்றுபோனால்
எல்லாம் முடிந்துபோகும்
இறைவன் மீது பக்தி செய்ய வேண்டுமென்றால்
தூய மனம் வேண்டும்.
கள்ளம் உள்ள உள்ளத்தில்
இறை பக்தி பிறக்காது
நாவில் நல்ல சொற்கள் வரவேண்டும்.
நலம் தரும் சொல்லான நாராயண என்னும் நாமத்தை ஓதிக்கொண்டிருக்கவேண்டும்.
தலைஎழுத்தை மாற்றவல்ல ராம
என்னும் இரண்டெழுத்தை உச்சரிக்கவேண்டும்.
நம்மால் அதை செய்ய முடியாத பட்சத்தில்
பகவானிடம் பரிபூர்ண சரணாகதி செய்ய வேண்டும்
அப்படி செய்தால் அவனே இந்த ஜீவன்
பட்ட துன்பங்கள் போதும் என்று கருணையுடன்
நம்முடைய புத்தியில் புகுந்து நமக்கு நல்ல வழி காட்டுவான் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தெரிவிக்கிறார்.
ஆண்டாள் கண்ணனை முகில்வண்ணன்
என்று அழைத்து அவன் பேரை பாட வாருங்கள் என்றுநம்மையும் அழைக்கிறாள்.
முக்தியை அளிக்கும்
முகுந்தனின் நாமம் சொல்லுவோம்.
அருமையான பாசுரம் + படம். எளிமையான விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி
Delete