அபிராமி அந்தாதி (1)
அபிராமி அந்தாதியைப் பற்றி
சிந்திக்கலாம் என்று தோன்றியது.
நமக்கு அந்த அளவிற்கு அறிவு கிடையாது
என்று நன்றாக தெரியும்.
இருந்தாலும் முயற்சி செய்வதில்
தவறேதும் இல்லை.
அவனருளால் அவன் தாள்
வணங்கி என்பார்கள்.
அவளைப் பற்றி சிந்திப்பதும்
அவளருளே என்றுதான் எண்ண வேண்டும்.
அவளே அவளைப் பற்றி
இவனை எழுதச் சொல்கிறாள்
என்று நினைத்துக்கொள்வோம்.
இருந்தாலும் கற்றோர் சபையில்
கல்லா மூடன் ஒருவன்
கம்ப ராமாயணத்தைப் பற்றி விரிவிரையாற்றுக
என்றால் எப்படி அஞ்சுவானோ என்ற நிலையில்தான்
இந்த முயற்சியை தொடங்குகின்றேன்
பிடித்தால் படிக்கவும்
பிடிக்காவிடில் இருக்கவே இருக்கிறது delete button
அபிராமி அந்தாதி என்றவுடன் நம் நினைவிற்கு
வருவது அம்பிகையின் பக்தர் அபிராமி பட்டர்தான்
அந்த அளவிற்கு அம்பிகையுடன் ஒன்றாக
கலந்துவிட்டவர்.
அன்போடு தன் பக்தர்களை ஆபத்திலிருந்து
கை தூக்கி விடுவதால் அம்பிகை என பெயர்
பெற்றாளோ ?
எது எப்படியாயினும் தன்னை முழுமையாக
நம்பிய மார்க்கண்டேயனின் உயிரை காலனின்
பிடியிலிருந்து காப்பாற்றியவனின் பாதியாக உள்ள
அவளோ தன் பக்தனின் வாக்கை மெய்ப்பித்துக் காட்டி
இருவரும் தன்னை அண்டியவர்களைப் காப்பதில்
ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல
என்பதை நிரூபித்துவிட்டதைதான்
இந்த சம்பவங்கள் நமக்கு காட்டுகிறது.
ஆதியும் அந்தமும் இல்லா
அருட்பெரும் ஜோதி அந்த பரமன்
அவளும் அப்படியே
தொடக்கமும் முடிவு இல்லாதவள்
அதனால்தான் அவள் மீது அந்தாதி பாடினார்
போலும் அபிராமி பட்டர்.
சக்தியில்லையேல் சிவம் இல்லை
சிவம் இல்லையேல் சக்தி இல்லை
சிவனோ பொன்னார் மேனியன்
சக்தியோ பசுமையைக் காட்டும்
பச்சைநிறத்தாள்
இரண்டும் ஒன்றுக்கொன்று கொடிபோல்
தழுவிக்கொண்டு இணைந்து
அடியார்க்கெல்லாம் அருள்
செய்யக் காத்திருக்கின்றன.
நாம்தான் நம் மனதில் அந்த கொடி
படரவழி விடாமல் அகந்தை என்னும்
கற்களால் சுவர் எழுப்பி வைத்து
அந்த கோட்டைக்குள் உட்கார்ந்துகொண்டு
வெளியே வரும் வழி அறியாது.
புலம்பிக்கொண்டிருக்கிறோம்.
யார் அந்தக் கோட்டையை தகர்த்து
நம்மை விடுவிப்பார்கள்.?
நம்முடைய அடிமனத்திலிருந்து
அன்னையை நோக்கி
பிரார்த்தனை செய்தால் அகந்தை
என்னும் கோட்டை
தானாகவே உடையும்.
என்ன பிரார்த்தனை செய்வது ?
நமக்குதான் ஒன்றுமே தெரியாதே ?
முதலில் அபிராமியைக் குறித்து ஒரு துதி உள்ளது
அதை பாடி துதித்து அவள் அருளை
பெற முயற்சி செய்வோம்.
பிறகு ஒவ்வொரு பாடலாக அனுபவிப்போம்.
இன்னும் வரும்
http://kadavur.blogspot.in/
ReplyDeleteநண்பர் அப்பாதுரை எழுதிய இந்த வலைப்பக்கத்துக்கு நேரமிருக்கும்போது சென்று பார்க்க வேண்டுகிறேன்.
நிச்சயமாக .காண்பேன்
Deleteநேரமேயில்லை
தினசரிக் கடமைகளையே
ஆற்ற முடியவில்லை
அகலக்கால் வைத்துவிட்டேனோ
என்று தோன்றுகிறது.
உடல்நிலை ஒத்துழைக்க மறுக்கிறது.
20 நாட்களுக்கு மேலாக படுக்கையில்
முடங்கி கிடக்கிறான் இவன்.
என்று கால் சரியாகி
நடக்கப் போகிறானோ தெரியவில்லை.
நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை.
என்று தோன்றுகிறது. சில சமயம்.
சில நல்ல உள்ளங்கள் ஊக்கம்
தரும்போது தொடரலாம் என்று தோன்றுகிறது.
ஒன்றைப் பற்றி எழுதும்போது
அதைப் பற்றி தெரிந்துகொள்ளும்
வாய்ப்பு ஏற்படுகிறது.
அதற்காகவாவது
முயற்சி செய்வோம்.
ஒன்று முடிந்தவுடன்
மற்றொன்று தொடங்கிவிடுகிறது
எல்லாம் அவன்
செயல் போலும்.
delete button வேண்டாம்...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்...
பாடலை அனுபவிக்க காத்திருக்கிறேன்... நன்றி...
நன்றி.DD
DeleteDear Pattabi Sir
ReplyDeleteIt is very apt to start Abirami Andhathi now
especially as Thai Amavasai is fast approaching.
Really great.
Here in Singapore,
we chant full Abirami andhathi
on every amavasai day in the nearby
Sri Siva-Krishna Temple.
Whatever little knowledge I
have about this great work of Abirami Battar,
I used to share with my group.
I also teach whatever slokas I know to a
group of young housewives.
Now your write up will be of great help
as I can share this with them.
Thanks once again.
Regards.
Uma Gururajan
Thanks Uma Gururaajan
DeleteA good effort
keep it up
Instead of praising mortals for petty gains
whose mind is full of likes and dislikes
the singing of Abiraami anthaathi daily
will destroy our bad karmas in our soul
and problems of this society.
Ambigai sees the bakthi only
and not other traits.
The true devotion to GOD with
a pure heart filled with love towards others
will do wonders.
Faith in the divine alone
will burn filth in our minds.
to make us pure.
Thanks for
your feedback.
keep mailing this fool
your experiences with divine
whenever you finds time
so that he can also benefit by it
TR Pattabiraman