அபிராமி அந்தாதி(3)
ஸ்ரீ அபிராமி ஸ்துதி
அபிராமி அந்தாதியை நாம் படிப்பதற்கு முன்னால் நாம் அபிராமியை போற்றி பாடப்பட்டுள்ள துதியை பாடி வணங்கி அவள் அருளை பெற்றுக்கொண்டு தொடர்ந்து செல்லுவோம்
துதிக்கான இணைப்பு கீழே தந்துள்ளேன்.
http://www.docstoc.com/docs/69701393/Abirami-Pattar-and-Abirami-Sthothram-_click-here_---Goddess
ஆங்கிலத்தில் உள்ள துதியின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளேன்.
படித்து பயனடைய வேண்டுகிறேன்.
ஸ்ரீ லலிதா தேவியே உனக்கு வணக்கம்.
சிங்கத்தை ஆசனமாகக்கொண்டு அதன் மீது
அமர்ந்து லக்ஷ்மீகரமாய்
காட்சி தரும் ஈஸ்வரியே
வழிபடும் பக்தர்களின் விருப்பங்களை
பூர்த்தி செய்யும் அன்னையே அபிராமியே
உன் திருவடிகளை வணங்குகிறேன்
சந்திரன் போல் ஒளியைச்
சிந்தும் காதணியை
அணிந்தவளே
சிங்கத்தை ஆசனமாகக்கொண்டு அதன் மீது
அமர்ந்து லக்ஷ்மீகரமாய்
காட்சி தரும் ஈஸ்வரியே
வழிபடும் பக்தர்களின் விருப்பங்களை
பூர்த்தி செய்யும் அன்னையே அபிராமியே
உன் திருவடிகளை வணங்குகிறேன்
சந்திரன் போல் ஒளியைச்
சிந்தும் காதணியை
அணிந்தவளே
மகேஸ்வரியே வழிபடும் எங்களுக்கு
நீண்ட ஆயுளைத் தருவாயாக
இந்த உலகின் தாயே
அபிராமியே உனக்கு வணக்கம்
நீண்ட ஆயுளைத் தருவாயாக
இந்த உலகின் தாயே
அபிராமியே உனக்கு வணக்கம்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரருடன்
எழிலாக காட்சி தரும் அம்பிகையே
எழிலாக காட்சி தரும் அம்பிகையே
சரணடைந்தவர்களை காப்பவளே
அனுதினமும் நல்ல நோயற்ற
வாழ்வினை அருள்வாயாக
பக்தர்களிடம் பரிவுடைய
அபிராமியே உனக்கு வணக்கம்
அனுதினமும் நல்ல நோயற்ற
வாழ்வினை அருள்வாயாக
பக்தர்களிடம் பரிவுடைய
அபிராமியே உனக்கு வணக்கம்
கல்யாணியே !
வாழ்வில் செல்வச் செழிப்பை அருள்வாயாக
அனைத்து மங்களங்களையும் தருவாயாக
மங்கல நாயகியே இந்த உலகில் அனைவரும்
நலமாக இன்புற்று வாழ உதவும் அன்னையே
அனுதினமும் உன்னை
வணங்குகிறேன் அபிராமியே
நலமாக இன்புற்று வாழ உதவும் அன்னையே
அனுதினமும் உன்னை
வணங்குகிறேன் அபிராமியே
சந்திர மண்டலத்தில் மத்தியில் அமர்ந்து
ஒளி வீசும் தாரகையே
ஒளி வீசும் தாரகையே
வர்ணிக்கவொண்ணா
அழகுடையவளே
ஸ்ரீ சக்கரத்தில் மத்தியில் அமர்ந்து
அண்டங்களை ஆட்சி செய்பவளே
அபிராமியே உனக்கு வணக்கம்
அழகுடையவளே
ஸ்ரீ சக்கரத்தில் மத்தியில் அமர்ந்து
அண்டங்களை ஆட்சி செய்பவளே
அபிராமியே உனக்கு வணக்கம்
தாமரை போன்ற கண்களை உடையவளே
குறையொன்றும் இல்லாத முழுமையே
சந்திரனைப் பழிக்கும்
குளிர்ந்த பார்வை உடையவளே
நிலைத்து நின்று பலன் தரும்
சகல செல்வங்களையும் அருள்வாய்
பக்தர்களின் நிதியே
தாயே அபிராமி உன்னை வணங்குகிறேன்
குளிர்ந்த பார்வை உடையவளே
நிலைத்து நின்று பலன் தரும்
சகல செல்வங்களையும் அருள்வாய்
பக்தர்களின் நிதியே
தாயே அபிராமி உன்னை வணங்குகிறேன்
கணேசனின் அன்னையே
குகனின் சக்தியே
வேத மறைகளின் வடிவமே
என்றும் நிலைத்து நின்று பயன் தரும்
கல்வியைத் தா ,ஞானத்தைத் தா
உன்னை வணங்குகிறேன் அபிராமியே
குகனின் சக்தியே
வேத மறைகளின் வடிவமே
என்றும் நிலைத்து நின்று பயன் தரும்
கல்வியைத் தா ,ஞானத்தைத் தா
உன்னை வணங்குகிறேன் அபிராமியே
உள்ளங்களை அன்பினால்
இணைக்கும் சக்தியே
பெண்ணினத்திடம் அன்பு கொண்டவளே
பத்தினிப் பெண்டிருக்கு
மாங்கல்ய பாக்கியம் தருபவளே
நிலையான நீடித்த இன்பமான
வாழ்வு தரும் அபிராமியே
உன்னை வணங்குகிறேன்
இணைக்கும் சக்தியே
பெண்ணினத்திடம் அன்பு கொண்டவளே
பத்தினிப் பெண்டிருக்கு
மாங்கல்ய பாக்கியம் தருபவளே
நிலையான நீடித்த இன்பமான
வாழ்வு தரும் அபிராமியே
உன்னை வணங்குகிறேன்
மார்கண்டேய முனிவரால் தொழப்பட்டவளே
அபிராமி பட்டரால் போற்றப்பட்டவளே
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே
உன் திருவடிகளை நாங்களும் வணங்குகின்றோம்
எங்களை அருள் கூர்ந்து காத்தருள்வாயாக
அபிராமி பட்டரால் போற்றப்பட்டவளே
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே
உன் திருவடிகளை நாங்களும் வணங்குகின்றோம்
எங்களை அருள் கூர்ந்து காத்தருள்வாயாக
கல்யாணியே !
என் பூஜையை ஏற்று
என் இதயத்தில் நிலையாய்
வந்தமர்ந்து கொள்வாயாக
என் பூஜையை ஏற்று
என் இதயத்தில் நிலையாய்
வந்தமர்ந்து கொள்வாயாக
உன் திருவடிகளில்
மலரிட்டு அர்ச்சிப்பேன்
தீபம் ஏற்றி தொழுவேன்.
என் நெற்றியில்
மங்கல குங்குமம் நிலைத்து நிற்க
அருள் செய்வாய் அபிராமியே
மலரிட்டு அர்ச்சிப்பேன்
தீபம் ஏற்றி தொழுவேன்.
என் நெற்றியில்
மங்கல குங்குமம் நிலைத்து நிற்க
அருள் செய்வாய் அபிராமியே
இந்த துதியை யாரெல்லாம்
உளமார இதயத்தில் பக்தியுடன்
அபிராமியை நினைந்து
அனுதினமும் ஓதுகிறார்களோ
அவர்கள் நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுளும்,
சகல சம்பத்துக்களும்
பெற்று நீடூடி வாழ்வார்கள்
என்பதில் ஐயமில்லை
உளமார இதயத்தில் பக்தியுடன்
அபிராமியை நினைந்து
அனுதினமும் ஓதுகிறார்களோ
அவர்கள் நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுளும்,
சகல சம்பத்துக்களும்
பெற்று நீடூடி வாழ்வார்கள்
என்பதில் ஐயமில்லை
தமிழாக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி...
ReplyDeleteஇணைப்பில் பார்க்கிறேன்...
தமிழாக்கம் மிகவும் அருமை ஐயா... நன்றி...
ReplyDelete. நன்றி..KJ
Delete