செல்வம் என்றால் எது?
செல்வம் என்றால் பணம் காசு தான்
செல்வம் என்று பொதுவாக எல்லோரும்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு புலவர் கல்வியைத்தான்
செல்வம் என்கிறார்.
ஏனென்றால் அதுதான் அழியாது
எங்கு சென்றாலும் நம்முடன் கூட வரும்.
நம்மைக் காக்கும். பணம் காசு அழிந்துவிடும்,
நம்மை விட்டு பிரிந்துவிடும்
அல்லது நம்மிடமிருந்து
அதை யாராவது அபகரித்து சென்று
நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்.
ஆனால் கற்ற கல்வி நம்மை
எந்நிலையிலும் காப்பாற்றும்
என்று சொல்லுகிறார்.
ஒரு மன்னனுக்கு
அந்த நாட்டில்தான் மதிப்பு.
அவன் வேறொரு நாட்டிற்கு சென்றால்
அவனுக்கு மதிப்பில்லை.
அறிவிருந்தால் எங்கும்
எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்.
அதனால்தான் திருவள்ளுவரும்
ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவிகளிலும்
நமக்கு பயன்படும் என்கிறார்.
அதனால்தான் கற்றிலனாயினும்
கேட்க என்கிறார்.
அதைத் தவிர பல செல்வங்களை
பற்றியும் அவர் திருக்குறளில் கூறியிருக்கிறார்.
அப்படிக் கூறினாலும்
செவிச் செல்வத்தைத்தான்
செல்வத்துள் எல்லாம் தலையாயது என்கிறார்.
அதனால்தான் ஐம்புலன்களில்
ஒன்றான செவியை எல்லோரும்
போற்றிப் புகழ்கின்றனர்.
சிவபெருமானுக்கு எத்தனையோ
சிறப்புகள் இருந்தும். முதலில்
தோடுடைய செவியன் என்றுதான்
ஞானசம்பந்தர் பாடினார்
இறைவனின் புகழைக் கேளாத செவி
வண்செவி என்கிறார்கள் இறைஅடியார்கள்
இறைவனின் நாமங்களை நாங்கள்
உரைக்கக் கேட்டும் உறங்கும் பெண்ணை
நீ ஊமையோ அன்றி செவிடோ என்கிறாள்
ஆண்டாள் ஒரு பாசுரத்தில்
இறைவன் அளித்த செவி
இரைச்சல்களைகேட்க அல்ல.
இனிமையான் இசையுடன் இறைவனின்
நாமங்களை கேட்கத்தான் என்பதை
உணர்ந்துகொள்ளவேண்டும்.
எனவே இறைவன் நமக்களித்த
செவிச் செல்வத்தை ,செல்வம் உட்பட
அனைத்தையும் தந்து நம்மை
வாழவைக்கும் நாராயணா என்னும்
நலம் தரும் சொல்லைக் கேட்டு,
மனதில் சிந்தித்து அவன் தாள்களை வணங்கி
இந்த பிறவியை புனிதமாக்கி கொள்வோமாக
ஓவியம். தி.ரா.பட்டாபிராமன்
செல்வம் என்றால் பணம் காசு தான்
செல்வம் என்று பொதுவாக எல்லோரும்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஓவியம். தி.ரா.பட்டாபிராமன்
ஒரு புலவர் கல்வியைத்தான்
செல்வம் என்கிறார்.
ஓவியம். தி.ரா.பட்டாபிராமன்
ஏனென்றால் அதுதான் அழியாது
எங்கு சென்றாலும் நம்முடன் கூட வரும்.
நம்மைக் காக்கும். பணம் காசு அழிந்துவிடும்,
நம்மை விட்டு பிரிந்துவிடும்
அல்லது நம்மிடமிருந்து
அதை யாராவது அபகரித்து சென்று
நம்மை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்.
ஆனால் கற்ற கல்வி நம்மை
எந்நிலையிலும் காப்பாற்றும்
என்று சொல்லுகிறார்.
ஒரு மன்னனுக்கு
அந்த நாட்டில்தான் மதிப்பு.
அவன் வேறொரு நாட்டிற்கு சென்றால்
அவனுக்கு மதிப்பில்லை.
அறிவிருந்தால் எங்கும்
எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்.
அதனால்தான் திருவள்ளுவரும்
ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவிகளிலும்
நமக்கு பயன்படும் என்கிறார்.
அதனால்தான் கற்றிலனாயினும்
கேட்க என்கிறார்.
அதைத் தவிர பல செல்வங்களை
பற்றியும் அவர் திருக்குறளில் கூறியிருக்கிறார்.
அப்படிக் கூறினாலும்
செவிச் செல்வத்தைத்தான்
செல்வத்துள் எல்லாம் தலையாயது என்கிறார்.
அதனால்தான் ஐம்புலன்களில்
ஒன்றான செவியை எல்லோரும்
போற்றிப் புகழ்கின்றனர்.
சிவபெருமானுக்கு எத்தனையோ
சிறப்புகள் இருந்தும். முதலில்
தோடுடைய செவியன் என்றுதான்
ஞானசம்பந்தர் பாடினார்
இறைவனின் புகழைக் கேளாத செவி
வண்செவி என்கிறார்கள் இறைஅடியார்கள்
இறைவனின் நாமங்களை நாங்கள்
உரைக்கக் கேட்டும் உறங்கும் பெண்ணை
நீ ஊமையோ அன்றி செவிடோ என்கிறாள்
ஆண்டாள் ஒரு பாசுரத்தில்
இறைவன் அளித்த செவி
இரைச்சல்களைகேட்க அல்ல.
இனிமையான் இசையுடன் இறைவனின்
நாமங்களை கேட்கத்தான் என்பதை
உணர்ந்துகொள்ளவேண்டும்.
எனவே இறைவன் நமக்களித்த
செவிச் செல்வத்தை ,செல்வம் உட்பட
அனைத்தையும் தந்து நம்மை
வாழவைக்கும் நாராயணா என்னும்
நலம் தரும் சொல்லைக் கேட்டு,
மனதில் சிந்தித்து அவன் தாள்களை வணங்கி
இந்த பிறவியை புனிதமாக்கி கொள்வோமாக
ஓவியம். தி.ரா.பட்டாபிராமன்
தாங்கள் சொன்னது அத்தனையும் என் செவிகளில் வாங்கிக்கொண்டேன்.
ReplyDeleteவரைந்த + வரையாப் படங்களும் பதிவும் அருமை.
அது போதும் அவன் உங்களைத் தாங்கிக் கொள்வான்
Deleteநலம் தரும் சொல்லை
ReplyDeleteநமோ நாராயணா என்று செவியேற்று செவ்விய வாழ்வு பெறுவோம்..!
ஆம் அவ்வாறே செய்வோம்
Deleteநலமடைவோம்
நன்றி DD
ReplyDelete