முதியோர் இல்லங்கள்
முதியோர்களைப் பற்றித்தான் இன்று
ஒரு சில சமூக ஆர்வலர்கள்
அலசிக்கொண்டிருக்கிறார்கள்
தங்களின் குழந்தைகளுக்காக
தங்கள் இளமையையும் சந்தோஷத்தையும்
இழந்த பல முதியவர்கள் சோலைக் கிளிகள்போல
சொகுசாக வாழாமல் சாலைக்கு வந்துவிட்டார்கள்
அவர்களின் கூட்டம்.
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.
வயதான காலத்தில் தொப்புள்கொடி உறவுகள்
மற்றும் இதர உறவுகள் இவர்களால்
இனி பயனில்லை என்று துரத்தப்படும்
கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
பதவியும் காசும்தான் முக்கியம்
ஏற்றிவிட்டஏணி எதற்கு என்கிறது
என்று எட்டி உதைப்பொரும் உண்டு.
காசிருக்கும் ஒரு சில நல்ல உள்ளங்கள்
அவர்கள் சொகுசாக வசதியான விடுதிகளில்
வைத்து பராமரிப்பதும் உண்டு.
பல் குடும்பங்களில் முதியவர்கள்
தற்கால வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப
தங்களை மாற்றிக்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள
மறுப்பதாலும் அவர்களை மற்றவர்கள்
வெறுத்து ஒதுக்கும் நிலை ஏற்படுகிறது
என்ற குற்றச்சாட்டிலும்
உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் புத்திசாலித்தனமான
சில பெற்றோர்கள் எந்த விதமான
பந்தத்திலும் சிக்கிக்கொள்வதில்லை
எல்லாவற்றையும் ஒரு வரையறைக்குள்
வைத்துக்கொண்டு தானும் சுகமான வாழ்ந்து
மற்ற உறவுகளோடும்
சுமுகமான
இன்பமாக வாழ கற்றுக்கொண்டு
மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்டவர்களின்
எண்ணிக்கை மிகக் குறைவே.
இருந்தாலும் வளர்ந்து வரும்
இந்த சமூகப் பிரச்சினையை அரசும்,
சமூக ஆர்வலர்களும்,அவர்கள் மீது இரக்கம் கொண்
ட மத,மற்றும் தனியார் அமைப்புகள்
தங்கள் பணியைசெவ்வனே ஆற்றி வருகின்றன
என்றால் மிகையாகாது.
ஆனால் பொத்தாம் போக்காக
இளைய தலைமுறை மீது மட்டும்
குற்றம் சாட்டும் போக்கு அதிகரித்து வருவது
சரியல்ல என்பதை ஆராய்வதுதான்
இந்த கட்டுரையின் நோக்கம்.
இந்த நிலைமைக்கு காரணம் மகனோ
அல்லது மகளோ மட்டும் காரணமல்ல
தாயும் தந்தையும்தான் ஒருவிதத்தில்
காரணமாகிறார்கள் என்பதை
இருவருமே உணருவதில்லை
பெற்றோர்கள் தன் குழந்தைகள்
மீது பாசத்தைத்தான் பொழிகிறார்களே
தவிர நல்ல பண்புகளான அன்பு, சேவை மனப்பான்மை,
இரக்க உணர்வு, உதவும் பண்பு .விட்டுக் கொடுத்தல்
ஆகியவற்றை கற்றுத் தருவதும் இல்லை
பல குடும்பங்களில் அதன்படி
முன்னுதாரணமாக
அவர்களும் திகழ்வதில்லை .
அவர்கள் அதற்கு மாறாக, சுயநலம்,
எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து நிற்கும் தன்மை,
பொய் சொல்லுதல், பிறரை பார்த்து காபி அடித்தல்,
பொறாமைக்குணம் போன்ற ,தீய பண்புகளைத்தான்
அனுதினமும் கற்றுத்தருகிறார்கள்.
குழந்தைகளின்
உணர்வுகளை மதிப்பதில்லை.
அவர்களின் கேள்விகளுக்கு
பதில் சொல்வதில்லை.
இன்னும் பல குடும்பங்களில்
குழந்தைகளோடு பழகுவதே கிடையாது
அதுவும் அவர்களை மூன்று வயதிலேயே
பள்ளிக்கு துரத்தி விடுகிறார்கள்.
அவர்களை தனியாக
தொலைகாட்சிகளை
பார்க்க விடுகிறார்கள்
தாயோடும் தந்தையோடும் உள்ள அன்பு பிணைப்பு
அப்போதே கருகத் தொடங்கிவிடுகிறது
தற்காலத்தில் கைபேசியும்,
மடிக்கணினியும் அவர்களை பெற்றோர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிட்டது மட்டுமல்லாமல்
அவர்களின் வாழ்க்கையை
இயந்திரமயமாக்கிவிட்டது
வாழ்க்கை என்பது அன்பாலும்
தியாகத்தாலும் உருவாக்கப்படவேண்டும்
அதை விடுத்து மற்ற ஆயிரம் வசதிகளை
ஏற்படுத்தி தருவதால்
ஒன்றும் பயனில்லை
அது ஒரு வறண்ட
பாலைவனமாகதான் இருக்கும்.
அதனால்தான் இருவரும் அமைதியில்லாத
வாழ்க்கையை வாழ நேரிடுகிறது
என்பதே உண்மை.
இந்நிலை மாற வேண்டுமென்றால்
வாழ நினைக்கும் இளைய தலைமுறையும்
வாழ்ந்து முடித்த முதிய தலைமுறையும் அவரவர் நிலைப்பாடுகளை ஒருவருக்கொருவர்
புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து
அன்புடன் நடந்துகொண்டால்
இருவருமே நன்மை பெறுவார்கள்.
அப்போதுதான்
இந்த சமூகத்தில் அமைதி நிலவும்.
படங்கள்-நன்றி-கூகிள்
சொல்லப்பட்டவை உண்மைகள்... முதலில் தவறு பெற்றோர்களிடம்... பிறகு புலம்புவதும் அவர்கள் தான்...
ReplyDeleteபதிவின் பின்பகுதியை பின்னூட்டமாக முன்னமே படித்திருக்கிறேன்! :))))
ReplyDeleteஅருமையான பதிவு.
பின்னூட்டம் அந்த பதிவில் எழுப்பப்பட்ட கருத்துக்காக எழுதினேன். அதையே விரிவாக ஆராய்ந்து படங்களுடன் இந்த பதிவு மற்றவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்ல இந்த பதிவு வெளியிட்டேன். நன்றி ஸ்ரீராம்
Deleteசிந்திக்க வைக்கும் நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDelete//சில பெற்றோர்கள் எந்த விதமான பந்தத்திலும் சிக்கிக்கொள்வதில்லை//
உண்மையிலேயே புத்திசாலிகள். ;)
உங்களைப்போல்
Delete