Sunday, January 19, 2014

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்(5)

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்(5)

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள் 





ஸ்வாமிகள் மகாராஷ்ட்ரத்தில்
விட்டலன் மீது பக்தி கொண்டு
வாழ்ந்த மகான்களின் சரிதங்களை
தபோவனத்தில் உள்ளவர்களுக்கு
விவரிப்பதில் பெரு மகிழ்வு கொள்வாராம்.



அதிலும் நாமதேவர்,ஞானதேவர், சொக்கா
ஏக்நாத் .துகாராம், மற்றும் கோரா போன்ற
பக்த சிகாமணிகளை பற்றி பேசும்போது
அவரும் பக்தி பாவத்தில் ஆழ்ந்துவிடுவது
காண்போரையும் பரவசப்படுத்தும்.



அதுவும் குயவராகிய கோரா
விட்டலனின் நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கி
அப்போது அங்கே வந்த தன் குழந்தையையும் கவனியாது காலால்  மண்ணோடு சேர்த்து மிதித்து
அது இறந்து போனது கூட அறியாது
பக்தியில் மெய் மறந்து போனதும்
பிறகு பகவானின் அருளால் குழந்தை உயிருடன்
மீண்டதும் பகவானின் மீது மனம் ஒன்றி
பக்தி செய்யவேண்டும் என்பதைக் காட்டுகிறது
என்றும் அவரின் பக்தி போற்றுதலுக்குரியது என்பாராம்.

அதுபோல சொக்கா என்ற விட்டலனின்  பக்தர்
மற்ற சிலருடன்  சுவர் இடிந்து விழுந்து இறந்தபோது
அவரின் எலும்புகளை பண்டரிபுரத்திர்க்கு கொண்டு
செல்ல அவரின் பக்தர்கள் முயன்றனர்.

ஆனால் அவரின்  எலும்புகள் எது என்பதை
கண்டுபிடிக்க இயலாமையால் நாமதேவரிடம்
ஆலோசனை கேட்டபோது எந்த எலும்புகளிடம்
விட்டல விட்டல என்ற ஒலி  கேட்கிறதோ
அதுதான் சொக்காவின் எலும்புகள் என்றாராம்.

அதை மட்டும் எடுத்து வாருங்கள் என்றாராம்.

 என்னே அவரின் பக்தி.! உடலில் உள்ள
ஒவ்வொரு அணுக்களிலும் விட்டலனின்  நாமம் பதிவாகியிருக்கிறது  என்றால் எந்த அளவிற்கு
அவர் நாம ஜபம் செய்திருக்கிறார்
என்பதை உணரமுடிகிறது.



மன ஒருமைப்பாடு இல்லாமல்
நாமெல்லாம் செய்யும் நாம ஜபம்
எந்த வகையிலும்
சேர்த்தி இல்லை.

அதனால்தான் நமக்கு
ஆன்மீகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.
 என்பதை உணரவேண்டும்.

ஞானானந்தகிரி சுவாமிகளின்
கருணையினால் நமக்கும்
அதுபோன்ற  பக்தி வரவேண்டும்
என்று பிரார்த்திப்போம்.

4 comments:

  1. //உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் விட்டலனின் நாமம் பதிவாகியிருக்கிறது என்றால் எந்த அளவிற்கு அவர் நாம ஜபம் செய்திருக்கிறார்//

    பிரபோ! பாண்டு ரங்கா !! பண்டரிநாதா !!! விட்டலா !!!!

    நீ தான் என்னையும் ரக்ஷிக்கணும்.

    நல்ல பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  2. பிரபோ! பாண்டு ரங்கா !! பண்டரிநாதா !!! விட்டலா !!!!

    நீ தான் என்னையும் ரக்ஷிக்கணும்.

    ReplyDelete
  3. /// எலும்புகளிடம் "விட்டல விட்டல" என்ற ஒலி கேட்கிறதோ... /// இதுவல்லவோ ஆழ்ந்த உண்மையான பக்தி... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அதுபோன்ற பக்தி வரவேண்டும்

      Delete