Sunday, January 26, 2014

அடங்காத மனம் அடங்கும் அனுமனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டால்.

அடங்காத மனம் அடங்கும் அனுமனின் 
திருவடிகளைப்  பற்றிக்கொண்டால்.   



ராமேஸ்வரத்தில் சிவ பூஜை செய்வதற்காக ஸ்ரீராமனுக்காக கொண்டு சென்ற லிங்கம் கீழே வைத்தவுடன் நகர மறுத்ததால் சிவலிங்கத்தை தன வாலில் கட்டி இழுக்கும் அனுமான். -ராமகிரி -ஆந்திரமாநிலம் 


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்
பொதுவான கடமைகள் உண்டு.

அது  என்ன என்று இவன்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை
அது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் கடமையை செய்ய காசு கேட்கும்
பிறவிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மனிதர்களுக்கு என
பல கட்டாயக் கடமைகளை
சாத்திரங்கள் விதித்திருக்கின்றன

அவைகளை அவன் கட்டாயமாக
நிறைவேற்றித் தான் தீரவேண்டும்.

அவ்வாறு அவன் செய்ய
 கடமைப்பட்டிருக்கிறான்

அவைகளை அவன் நிறைவேற்றாவிடில்
துன்பத்திற்கு ஆளாவது தவிர்க்கமுடியாது.

அவைகள் என்ன என்பதை
சாத்திரங்களைப் படித்து தெரிந்துகொள்ளவேண்டும்
 அல்லது அது பற்றி அறிந்த பெரியவர்களிடம்
சென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏன் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றால்
நாம் இந்த உலகத்தில் வாழ பல சக்திகளை
இறைவன் படைத்துள்ளான்.

அவைகள் நம்மிடம் எதையும்
எதிர்பாராமல் நமக்கு
உதவிக்கொண்டிருக்கின்றன.

அதைத் தவிர இந்த உலகில் உள்ள
ஜீவன்களும், தாவரங்களும், உயிரினங்களும் சில தன்னலமற்ற
மனிதர்களும்,சாத்திரங்களின் பொருளுணர்ந்து  மற்ற உயிரினங்கள் வாழ
அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை தவறாமல் செய்துகொண்டிருக்கின்றன.

உதாரணத்திர்க்கு மண்புழு எல்லாவற்றையும்
உரமாக மாற்றி பயிர்கள் செழித்து வளர உதவி செய்கிறது
அது நம்மிடம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. அதை துண்டாக வெட்டிப் பொட்டாலுல் அது தன கடமையை செய்கிறது. . விவசாயி உணவுப் பொருட்களை தனக்காக உற்பத்தி செய்வதில்லை. மற்றவ்ர்களுக்காகவும்தான் உற்பத்தி செய்கின்றான்.
அதில் எவ்வளவு நஷ்டம் வந்தாலும், துன்பம் வந்தாலும்
அவன் அதை செய்து கொண்டிருக்கிறான்.

ஒரு மரம் தன்னிடம் உள்ள அனைத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்துவிடுகிறது. முடிவில் தன்னையே கொடுத்துவிடுகிறது.
மீண்டும் விதையாகி முளைத்து தொடர்ந்து தன் பணியை செய்ய தொடங்குகிறது.

இப்படித்தான் மனிதர்களை தவிர உலகில் மற்ற உயிரினங்கள் அனைத்தும் தியாகம் செய்வதையே தங்கள் வாழ்வின் குறிகோளாகக் கொண்டு வாழ்கின்றன.

ஆனால் நன்றி கெட்ட மனிதன் எதையும் மதிப்பத்ல்லை .பிறருக்கு உதவி செய்யாமல் இருந்தல்லும் பரவாயில்லை. துன்பம் இழைப்பதை தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

அகந்தை கொண்டு தானும் துன்புற்று பிறரையும் துன்பத்தில் ஆழ்த்தி பிறவிதோறும் துன்பத்தில் மூழ்கி மோசம் போய்க்கொண்டிருக்கிறான்.

இந்நிலை மாற வேண்டும்.
சாத்திரங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதன் உண்மைப் பொருளை. உணராது. அதைபழிப்பதும் இழித்துரைப்பதும் சிலருக்கு வாடிக்கை யாகிவிட்டது. அந்த போக்கினால்தான் இன்று அனைத்த் தர்மங்களும் அழிந்துவிட்டன. சுற்று சூழல் மோசமாகிவிட்டது. எந்த வகையில் அவனுக்கு நன்மை பயக்காது.

நல்லதோர் சத்சங்கத்தில்
இணைய வேண்டும்.

இணைய தளத்தில் நல்ல
விஷயங்களை நாடவேண்டும்

நாடிகளை தளர்ந்து போகச் செய்து
நம்மை நாசமாக்கி நரகத்தில் தள்ளும்
விஷயங்களை தேடி ஓடக்கூடாது.

அலையும் மனதை அடக்க வேண்டும்.
அதற்க்கு அரங்கனின் திருவடிகளை பற்றவேண்டும்.

குரங்குபோல் மரத்திற்கு மரம் தாவக்க்கூடாது.
அனுமனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டால்
அடங்காத மனமும் அடங்கும்.
அவன் தெய்வம் ராமனின்
திருவடிகளில் ஒடுங்கும்.

அடங்காத மனம் அடங்கும் அனுமனின் திருவடிகளைப்  பற்றிக்கொண்டால்.  

2 comments:

  1. // இணைய தளத்தில் நல்ல விஷயங்களை நாடவேண்டும் // உட்பட அனைத்தும் அருமையான கருத்துக்கள்... சிறப்பான படத்திற்கு நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. திருப்பதிக்கு செல்லும்போது நாகலாபுரம் அருகே உள்ள ராமகிரிக்கு சென்று அங்கு உள்ள புராதனமான சிவாலயத்திற்கு சென்றுவாலீச்வரரை வணங்குங்கள்
      பைரவருக்கு அங்குள்ள கோயில் சக்தி வாய்ந்ததென கூறுகிறார்கள்.

      அங்குள்ள குளத்தில் நந்தி வாயிலிருந்து நீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது பல நூறு ஆண்டுகளாக. குளத்தை நிறைத்து வழிந்து நீர் நிற்காமல் போய்க்கொண்டே வற்றாமல் இருப்பது அதிசயம்.

      அமைதியான இடம். அருகே சிறு குன்றின் மீது முருகன் கோயிலும் உள்ளது

      Delete