Friday, January 10, 2014

வைகுண்ட ஏகாதசி (11.1.2014)

வைகுண்ட ஏகாதசி (11.1.2014)

இன்று 
வைகுண்ட ஏகாதசி நன்னாள் 





மார்கழி மாதம்  முழுவதும் 
உலகியல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு 
உலகையெல்லாம் மூவடியால் அளந்த உத்தமனை,
நம் உள்ளத்தே  உறையும் மாலை 
ஆண்டாளின் கருணையால் பாடிப் பரவசம் 
அடைந்துகொண்டிருக்கும் அதிகாலை வேளையில் 
அவனே பரமபதத்திலிருந்து தன்நிலையை விட்டு 
இறங்கி வந்து  தரிசனம் தருகின்ற 
எளிமையை உணரவேண்டும்

நாமும் எளிமையாக
இருக்க பழகவேண்டும்.

அவன் நம் மீது காட்டும் 
அளவற்ற அன்பைப்போல்
நாமும் சக உயிர்களிடம் 
அன்பு பாராட்டகற்றுக்கொள்ள வேண்டும். 

























ஓவியம். தி.ரா.பட்டாபிராமன் 


வைகுந்தத்தில் பள்ளி கொண்ட 
பரந்தாமன் தான் உறையும் 
வைகுண்டத்தில் வாசல்களைத் 
இன்று மட்டும் 
திறந்து வைத்துள்ளான். 
தன்னை தரிசிக்கும் 
அடியார்களுக்கு அருள. 




அன்று துவார பாலகர்களும் 
யாரையும் மிரட்டுவதில்லை 
துரத்துவதில்லை .

வரும் எல்லோரையும் தேவர்களாகட்டும் 
தவசிகளாகட்டும் பாமர ஜனந்களாகட்டும்  
அவர்களை உள்ளே அனுப்பவேண்டும் என்று 
கண்டிப்பான உத்திரவு 
போட்டுவிட்டான் வைகுந்தவாசன். 



அவன் இரவு முழுதும் காத்துக்கிடந்தான் 
அடியார்களை ஆர்வத்துடன் வரவேற்று 
அருள் செய்ய. 
ஆனால் நேரம் ஆகியதே ஒழிய 
ஒருவரையும் காணோம் 

அப்புறம்தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
அடியார்கள் எப்படி ஸ்தூல சரீரத்துடன் 
வைகுண்டம் வரமுடியும். 
அவன் போட்ட விதிகளை 
அவனே எப்படி மீறமுடியும்?

அதற்காகத்தானே அவன் பூலோகத்தில்
ஆயிரக்கணக்கான கோயில்களைத் திறந்திருக்கிறான் 
அங்கு அர்ச்சாவதாரமாய்  ஸ்ரீதேவி பூதேவியுடன் 
கோயில் கொண்டிருக்கிறான். 

புலன்களுக்கு அடிமையாய்க் கிடக்கும் தன்
அடியவர்களை இந்த நாளிலாவது அந்த புலன்களைக் கொண்டே அவனை தரிசிக்கும் இன்பத்தைப் பெறவேண்டும் என்று நினைத்தவுடன் 



அங்கிருந்து அவன் பரிவாரங்களுடன் காணாமல் போனான். அங்கிருந்த த்வாரபாலகர்களும் அவனோடு சென்றுவிட்டார்கள். 

கிருஷ்ணாவதாரத்தில் பிரம்மன் பகவானின் 
மாயை கண்ணை மறைக்க அங்கிருந்த அனைத்து கோபர்களையும் ஆநினங்களையும் ஒரு குகைக்குள் மறைத்துவிட்டானாம்.
இந்த சிறுவன் எப்படி ஊர் மக்களிடம் 
சமாளிக்கப் போகிறான் பார்க்கலாம் என்று. 


















ஓவியம். தி.ரா.பட்டாபிராமன் 

ஆனால் நம்மையெல்லாம் படைக்கும் 
பிரம்மனையே படைத்தவனுக்கு 
இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாஎன்ன? 

எல்லாமே அவனானான். 
சிறிதுகாலம் கழித்து கோகுலம் சென்ற பிரம்மன் 
அங்கு தான் மறைத்து வைத்த அனைவரையும் கோகுலத்தில் கண்டான். குகைக்கும் மறைத்து வைத்தவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் என்று எண்ணிக்கொண்டே குகைக்குள் சென்று பார்த்தால் 
அவன் மறைத்துவைத்த அனைவரையும் கண்டு அதிசயித்து 
பகவானின் மகிமையை உணர்ந்து 
அவனை மன்னிக்குமாறு வேண்டினான் 
என்பதுபாகவதக்  கதை. 

அதுபோல்தான் இன்று பகவான் 
எங்கெல்லாம் அவன் நாமம் ஒலிககிறதோ 
அங்கெல்லாம் இன்று  அடியார்களுக்கு 
காட்சி தருகின்றான். 

உள்ளம் முழுவதும் உவகையினால்
நிரப்புகின்றான். இதயத்தில் 
இன்ப பரவச மூட்டுகின்றான் .

தேவர்கள் அதிகாலையில் இறைவனை 
தரிசிக்க வைகுண்டம் சென்றால் அவனையும் காணோம் 
அவன் பரிவாரங்களையும் காணோம். 
செல்பவர்களை தடுக்கும் த்வாரபாலகர்களையும் காணோம். 

அப்போது அதிகாலையிலே, 
ஆதவன் வருவதற்குமுன். கோடிக்கணக்கான 
அடியார்கள் பகவானைத் தரிசிக்க பரமபத வாசலில் காத்துக் கிடந்து அரங்கா,என்று திருவரங்கத்திலும், ராகவா என்று திருவள்ளூரிலும், கோவிந்தா என்று திருவேங்கடத்திலும் 



















ஓவியம். தி.ரா.பட்டாபிராமன் 


குருவாயூரப்பா என்று குருவாயூரிலும் மற்றும் அனைத்து கோயில்களிலும் நாராயணா என்ற கோஷம் பூலோகம் முழுவதும் விண்ணை பிளக்கக் கேட்டு தேவர்களும் வைகுண்டவாசனைத் தரிசிக்க 
பூலோகத்தை நோக்கி படையெடுத்து வந்து விட்டனர் 
என்றால் மிகையாகாது 

ஓம் நமோ நாராயணாய 



9 comments:

  1. கண்ணுக்கு விருந்தாக சித்திரங்கள்
    கருத்துக்கு விருந்தாக எளியநடை
    உள்ளம் முழுவதும் உவகையால்
    நிறைந்தது...அனேக நமஸ்காரம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அவனருள்
      இவனிடம் ஒன்றும் இல்லை.
      நன்றி

      Delete
  2. அருமையானதொரு பகிர்வு!
    இறை தரிசனத்துடன், உள்ளம் நிறைய வைத்த பதிவு!


    ஓம் நமோ நாராயணாய நம!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அவனருள்
      இவனிடம் ஒன்றும் இல்லை.
      நன்றி

      Delete
  3. சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ஓம் நமோ நாராயணாய...

    ReplyDelete
  4. தேவர்களும் வைகுண்டவாசனைத் தரிசிக்க
    பூலோகத்தை நோக்கி படையெடுத்து வந்து விட்டனர்

    படங்களும் , கருத்துகளும் கூட விண்ணுலகத்தோரை
    மண்ணுலகம் நோக்கி படையெடுக்க வைத்திடுமோ
    என வியக்கவைக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. காலில் அடிபட்டு
      நடக்கமுடியாமல் கிடக்கும்
      இவனை பரந்தாமன் அழைத்து சென்று
      அவனை தரிசனம் செய்வித்தான். கனவில்.

      கனவில் கண்ட காட்சிகளே
      இன்றைய பதிவாய் மலர்ந்துள்ளது


      நன்றி அம்மணி.

      Delete
    2. இந்தப்பதிவுகள் + படங்கள் மூலமும் சொர்க்க வாசல் கதவின் மூலமும் சொர்க்கத்திற்கே அழைத்துப்போய் விட்டீர்கள். அருமை. நான் என்ன புதிதாகச் சொல்ல இருக்கு ... பகிர்வுக்கு நன்றிகள் என்பதைத்தவிர.

      Delete