Saturday, January 11, 2014

இவ்வுலக வாழ்வின் நோக்கமென்ன?

இவ்வுலக 
வாழ்வின் நோக்கமென்ன?

பொதுவாகப் பார்த்தால்  
பிறந்தவுடன் உறங்குவது ,விழிப்பது,
 பசியைப் போக்க இரை தேடுவது உண்பது.
மீண்டும் உறங்குவது. பசி தீர்ந்தவுடன்
மனம் போன போக்கில் போவது.
பருவ வயது வந்தவுடன் உறவு கொள்வது.
இதைதான் இந்த உலகில் மனிதன் உட்பட
அனைத்து ஜந்துக்களும் செய்து கொண்டிருக்கின்றன.



ஆனால் மனிதனுக்கு மற்ற உயிர்களுக்கு
இல்லாத மேம்பட்ட  அறிவை
இறைவன் அளித்திருக்கிறான்.

அப்படி இருந்துமதை உணராமல்
,பயன்படுத்தாமல் நாம் அனைவரும்
விலங்குகள் போல் காரணமின்றி
சண்டையிட்டும், மற்ற உயிர்களைக் கொன்று தின்றும்
வீணான வெட்டிக் கதைகள் பேசியும்
வாழ்க்கையை நடத்தி அரிதாக கிடைத்த
மானிடப் பிறவியை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்

பகவான் நமக்கு கொடுத்த அறிவை பிறரை
அழிக்கத் தான் பயன்படுத்துகிறோம்.




கடுமையான தவங்கள் பல்லாயிரம்  ஆண்டுகள்
செய்து வரங்கள் பெற்று பிறரை




 துன்புறுத்திய  கோடானுகோடி



அசுரக்கூட்டங்கள் மண்ணோடு மண்ணாகி போன வரலாறுகளைப் படித்தும் கேட்டும் நாம் சிறிதும் திருந்துவதில்லை.



அழிவிலிருந்து நம்மைக் காக்க ஒரு சிறு முயற்சி கூட செய்வதில்லை. என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் அவன் அந்த அறிவை வைத்துக்கொண்டு
 பிறரை படாத பாடு படுத்துகிறோம் என்பதே உண்மை

இன்னும் பலர் எல்லா நூல்களையும் கற்கின்றனர்.
ஆனால் கற்றதை புரிந்துகொண்டு வாழ்க்கையில்  நடைமுறை படுத்தி முன்னேற எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை



அதைத்தான் கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுந் கனவான தவம் என்று அலைபவர்களை கேலி செய்கிறாள் லலிதா பரமேஸ்வரி

கல்லாதவர்களிடமும் பொல்லாதவர்களிடமும் தங்கள் கற்றதைக் கொண்டு வீண் வாதம் செய்துகொண்டு கீல்வாதம் முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு ஆளாகி கற்ற கல்வியை விழலுக்கு இறைத்தநீராக்குகின்றனர்.

அறியாமையினால் கலங்கிய மனம் ஆமையாக அவதரித்து இந்த உலகைத் தாங்கிய அரியின் பாதங்களை சரணடையவேண்டும்
அப்படிச் சரணடைந்தால்தான் அவனருள் கிட்டும்.



சரணடைவதற்கு வேண்டிய முதல் தகுதி
தான் என்ற அகந்தையை விடுதல்.

அனைத்தையும் அவன் நம்முள்ளிருந்து இயக்கிகொண்டிருக்க அதை உணராது சுற்றும் பம்பரம் போல் நம் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

நம்முடைய வினைகளுக்கேற்ப
நம் வாழ்வு சுழலுகிறது.

வினை தீர்ந்தவுடன் வினையை அனுபவிக்கும்
இந்த உடல் விழுந்துவிடும்.
அதை இயங்க வைத்த சக்தியும் நம்மை விட்டு
அகன்று  அண்டத்தில் கலந்துவிடும்.

அதற்குள் இந்த பிண்டத்தில் இருக்கும்
ஜீவனாகிய நாம் நமக்குள் வாசம் செய்யும்




வாசுதேவனின் தாள்களைப் பற்றிக்கொண்டால்
 நம்மை எந்த துன்பமும் பற்றாது
எந்த  நிலையிலும். இன்பமாய் இருக்கலாம்.

படங்கள்-கூகிள்-நன்றி



2 comments:

  1. வாசுதேவனின் தாள்களைப் பற்றிக்கொண்டால்
    நம்மை எந்த துன்பமும் பற்றாது
    எந்த நிலையிலும். இன்பமாய் இருக்கலாம்.

    உன்னதமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete