Tuesday, January 21, 2014

அபிராமி அந்தாதி (2)

அபிராமி அந்தாதி (2)


அபிராமி அந்தாதி  
ஏன் பிறந்தது?

உலக சிந்தனையே அற்று 
அம்பிகையையே தியானித்துக் 
கொண்டிருக்கும் ஒரு பக்தன் முன்னால்  அம்பிகை 
ஒளி  வடிவமாக காட்சி அளிப்பாள் என்பதை  நமக்கு 
உணர்த்துகிறார் அபிராமி பட்டர்.


அதை உணராத மற்றவர்கள் 
அவர் அகந்தை கொண்டு 
வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு
பாசாங்கு செய்வதாக  எண்ணுகிறார்கள். 

அதனால்தான் அவர் மீது பொறாமை கொண்டு 
அவரை அங்கிருந்து அவரை துரத்த வாய்ப்பை 
தேடிக்கொண்டிருந்தார்கள் 

அப்போது கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த 
மன்னனை கண்டு அனைவரும் 
மரியாதை செய்கிறார்கள் 

மன்னன் பட்டர் மீது 
மரியாதை வைத்திருந்தான். 

அபிராமி பட்டர் அம்பிகையின் மீது
தியானத்தில்மூழ்கி 
அவளின் தரிசனத்தில் ஒளி  வெள்ளத்தில் 
லயித்துக்கொண்டிருந்தார்.

அதனால் அரசன் வந்ததை 
அவர் அறியவில்லை .

இருந்தும் அரசனுக்கு உரிய மரியாதையை அவர் தரவில்லை 
மற்றவர்கள் தூபம் போடவே அரசன் அவரிடம் சென்று  
அவர் சுய நினைவில் உள்ளாரா என்பதை அறிய  
அவரிடம் இன்று என்ன திதி என்று  கேட்க 
அம்பிகையின்  ஒளியைதியானத்தில் 
கண்டுகொண்டிருந்தமையால் 
அமாவாசையான  அன்று  பவுர்ணமி திதி 
என்று கூறிவிட்டார்.

அரசன் கோபம் கொண்டு சென்று விட்டான்.
அன்று இரவுபவுர்ணமி நிலவு வராவிடில் 
அவர் தலை கொய்யப்படும் என்று 
ஆணையிட்டுவிட்டான்.

தியானம் கலைந்து  எழுந்த அபிராமி பட்டர் 
நடந்த விவரங்களை அறிந்து எல்லாம் 
அம்பிகையின் செயல் என்று உணர்ந்து தன்னைஇந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டி 
அவளையே துதிக்க தொடங்கினார். 

அபிராமியும் அமாவாசையன்று 
பவுர்ணமி நிலவை பக்தனுக்காக 



வரவழைத்தாள் அரசனும் தன் தவறை உணர்ந்தான் 
அவரைப் போற்றி வணங்கினான். 


அந்த பாடல்கள் அவருக்காக அல்ல 
நம் போன்றவர்கள் அம்பிகையைத் துதித்து 
எல்லா நலன்களையும் அடைவதற்காகவும், 
துன்பம்நீங்கி இன்பமான வாழ்க்கை அடைவதற்காகவும் 
இயற்றப்பட்டவை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

அபிராமி பட்டரின் வாக்கை மெய்ப்பித்து 
அவர் உயிரைக் காத்ததுபோல் 
அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து 
நாமெல்லோரும் நன்மை பெறவேண்டும். 


அபிராமி அந்தாதியை அனுதினமும் 
பாராயணம் செய்தால் கிடைக்கும் நன்மைகளை
 பட்டியலிடுகிறார்  பட்டர்.(பாடல் 69)

நல்லதோர் வாழ்க்கை அமைய தேவையான செல்வம்,நல்ல  கல்வி,தெய்வங்களைப்போல் 
நல்லதோர் அழகான வடிவம், சோர்வில்லாத மனம், 
அன்பு நிறைந்து தீய குணங்களில்லாத சுற்றமும்,
ஆகியவை அன்புடன் இந்த அந்தாதியை 
பாராயணம் செய்பவர்களுக்கு 
அபிராமியின் கடைக்கண்களே 
அனைத்தையும் தரும் என்பது சத்தியம்.   

இன்னும் வரும் 




4 comments:


  1. Ranganathan
    6:09 AM (43 minutes ago)

    to me
    Very nice one Sir.
    Along with please post the particular Padal Aldo in Tamil.
    With regards,
    tgranganathan

    Jaya Sri Ramana!



    ReplyDelete
  2. Dear Ranganathan.
    Pl. visit the following link
    in which you can enjoy the audio and vedio

    http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0026_01.html


    TR Pattabiraman

    ReplyDelete
  3. அந்த பாடல்கள் எல்லோருக்குமே தான் ஐயா... விளக்கத்திற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete