சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்(4)
சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்
ஞானிகளின் பெருமையைப் பற்றி ஸ்ரீ அரபிந்தோ பேசும்போது
அவர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையினால்
ஊமைகள் பேசக்கூடும், முடவன் இமய
மலையின் மீது ஏறி இறங்கவும் கூடும்
ஆனால் அவர்களின் தெய்வீக சக்திகளைப் பற்றியும்
அவர்கள் இவ்வுலக ஜீவர்களின் மீது கொண்டுள்ள
அன்பை பற்றி யாராலும் விவரிக்க இயலாது என்கிறார்.
அப்படிப்பட்ட மகா புருஷர்தான் சத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமிகள்.
அவர் எங்கு பிறந்தார் ,எந்த ஆண்டு இப்புவிக்கு வந்தார் என்று யாருக்கும் தெரியாது.
அவரிடம் ஒரு பக்தர் கேட்கிறார்
பக்தர்:சுவாமி எப்போது பிறந்தார்?
சுவாமி: என்ன சுவாமி பிறந்தாரா?...
பக்தர்: இல்லை இல்லை எப்போது இந்த உடலில் அவதாரம் செய்தார். ?
ஸ்வாமிகள்: சுவாமி அவதாரம் செய்தாரா ?.
பக்தார்:.......
ஸ்வாமிகள்: ஸ்வாமிகள் பிறக்கவும் இல்லை அவதாரம் செய்யவும் இல்லை அவர் இவ்வுலகில் ஜீவர்களின் கண்களுக்கு தோன்றினார் அவ்வளவுதான்
பகவான் தன்னுடைய படைப்புகளின் மேல் கொண்டுள்ள அளவிலாக் கருணையினாலே பல மனித வடிவங்களை அவ்வப்போது எடுத்துக்கொண்டு
புலனின்பங்களில் மூழ்கி இறைவனை மறந்து துன்பப்படுபவர்களை கை தூக்கி விடவும். இறைவனை அறிந்துகொள்ள முயற்சிக்கும் உண்மையான சாதகர்களுக்கு வழிகாட்டி அவர்களை கடைதேற்றவும் பல அவதாரங்களை எடுக்கிறான். உண்மையான ஆன்மீக தாகம் உள்ள ஒரு சில சாதகர்கள் மட்டுமே இந்த நல்ல வாய்ப்பை பய்னபடுத்திக்கொள்கின்றனர்
மற்றவர்கள் அற்ப பலன்களை யாசிக்கவே விரும்பி அவர்களிடம் வருகின்றனர்.
அவர்களுக்கு மகான்களின் அருமைகளும் பெருமைகளும் புரிவதில்லை.
ஆதி சங்கரர் சொல்லுகிறார்.இந்த உலகத்தில் கீழ்கண்ட மூன்றும் அடைவது மிக துர்லபம் என்கிறார்.
அவையாவன:
1.மனிதப் பிறவியை அடைவது
2.பிறப்பு இறப்பு எனும் இந்த சுழலிலிருந்து விடுபட்டு இறைவனோடு கலப்பது
3.ஞானிகள், ஜீவன் முக்தர்கள் போன்ற உயர்ந்த தெய்வீக நிலையடைந்த
மகான்களை அடைந்து அவர்கள் திருவடியைப் பற்றிக்கொண்டு ஞானத்தை அடைந்து நல்ல கதி பெறுவது.
இந்த உலகில் பிறப்பெடுத்த அனைவரும் இந்த உலக மோகத்தில் மூழ்கி
இன்ப துன்பங்களை இடைவிடாது அனுபவித்தும் அதிலிருந்து விடுபடும் எண்ணம் ஏற்பாடாமலேயே மீண்டும் மீண்டும் பிறந்து மடிகின்றனர்.
அதிலிருந்து விடுபடவேண்டுமென்றால்
மகான்களின் பார்வை நம் மீது படவேண்டும்.
அதற்கு அவர்களை நாம் தேடி சென்று
அவர்களின் திருவடிகளில் விழுந்து நம்மை கடைதேற்ற வேண்டிக்கொண்டால்போதும்
மற்றவைகளெல்லாம் அவர்களின்
கருணைப்பார்வை அனைத்தையும் பார்த்துக்கொள்ளும்
நம்மை அறியாமலேயே நமக்குள் மாற்றங்கள் நிகழும்.
அடங்கா மனம் அமைதி கொள்ளும்
அவர்களைநினைத்த மாத்திரத்திலே
அப்படிப்பட்ட உத்தம ஞானி சுவாமி ஞானானந்தகிரி ஸ்வாமிகள்.
அவரை வணங்கி, அவரோடு இருந்து, அவரை தரிசித்து அந்த தெய்வத்தின் அன்பை அனுபவித்தவர்கள், கடைத்தேறியவர்கள் ஏராளம்.
பாமரனும் ஒன்றுதான் பாராளும் அரசரும் ஒன்றுதான் அவர் முன்.
(இன்னும் வரும்)
சத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமிகள் பற்றி அறியாத பல தகவல்கள் ஐயா... நன்றி...
ReplyDeleteநன்றி...DD
Delete//பாமரனும் ஒன்றுதான் பாராளும் அரசரும் ஒன்றுதான் அவர் முன்.//
ReplyDeleteஆஹா ! அருமை அண்ணா .... உண்மையும் அண்ணா
//(இன்னும் வரும்) //
வரட்டும், பேசிக்கொள்ளலாம். ;)
ஐயா, தாங்கள் ஸ்வாமிகளை நேராகப் பார்த்ததுண்டா? உங்கள் அநுபவம் என்ன? இதைக் கொஞ்சம் சொல்லமுடியுமா ? நன்றி.
ReplyDeleteN.R.Ranganathan. ( nrpatanjali@yahoo.com 9380288980 )
அந்த அளவிற்கு இவன் புண்ணியம் செய்யவில்லை.
Deleteஅந்த பாக்கியம் இவனுக்கு கிட்டவில்லை.அதனால் என்ன?
அவரைப் பற்றி சிந்திக்கும்போது அவர் இவன் உள்ளமெலாம் நிறைந்து இன்பம் தருகிறார்.
அதுபோல் அவரைப் பற்றி படிப்பவர்களுக்கும் அந்த இன்பம் தானே கிடைக்கும்.
மேலும் சுவாமிகளைப் பற்றி இவன் எழுதுகிறான் என்றால் அவரின் ஆசி இல்லாமல் எழுத முடியாது
இந்த ஜன்மம் கடைத்தேரவேண்டும் என்று மட்டும் எண்ணி மகான்களை பக்தியுடன் சரணடைபவர்களை அவர்கள் என்றும் கைவிட்டதில்லை.
மிகவும் நன்றி ஐயா.
Deleteரங்கனாதன்.
ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
ReplyDeleteஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
ஞானானந்தா ஞானானந்தா
ReplyDeleteஸத்குரு நாதா ஞானானந்தா!!