ராம நாமம்
ஜபிப்பதனால் என்ன பயன்?
ராம நாமம் ஜபிப்பதனால் என்ன பயன்?
என்று இவனைச் சிலர் கேட்கிறார்கள்.
இந்த மூடனைக் கேட்டால்
இவனுக்கு என்ன தெரியும்?
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
எத்தனையோ மகான்கள்
ராம நாமத்தை ஜபித்து நல்ல கதியை
அடைந்ததை கேள்விபட்டிருக்கிறேன்.
அதனால் நானும் அதைச் செய்கிறேன்
என்றுதான் இவன்பதில் சொல்லுவான்
முகுந்தனிடம் பக்தி பண்ணுவதைத் தவிர
வேறு என்ன முக்கியமான
வேலை இருக்க முடியும். ?
பண்டிதர்களிடம்
வாதம் செய்ய இவனால் முடியுமா?
அவர்கள் இவனை
வதம் செய்துவிடுவார்கள்.
இவன் கதையை
முடித்துவிடுவார்கள்.
அவர்கள் பக்கம்
இவன் செல்வதே கிடையாது.
ஆசாரம் தேவைதான்.
ஆனால் எப்போதும் ஆசாரத்தையே
பார்த்துக்கொண்டிருந்தால் ஆன்ம விசாரம்
எப்போதுதான் செய்வது?
ஆயுள் முடிந்து போகும்.
மூச்சுக்காற்று வந்து போய்க்கொண்டே இருக்கிறது.
எந்த வேலையை செய்துகொண்டிருந்தாலும் அல்லது
ஒன்றுமே செய்யாமல் வெறுமனே உட்கார்ந்து கொண்டு
இருந்தாலும் அது நிற்பதில்லை.
அதுபோல்தான் ராம நாமத்தை
சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
இந்த உலகத்தில் விழித்தது முதல் உறங்கும் வரை ஏதாவது வேலைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. எப்போது இவைகளிலிருந்து விடுபட்டு தியானம் செய்வது, ஆன்மீக சாதனைகளை செய்வது?
அது என்றும் நடக்கப் போவதில்லை.
அதனால்தான் சுலபமான வழி ராம நாமத்தை
சொல்லிக்கொண்டே இருப்பதுதான்.
என்று மகான்கள் சொல்கிறார்கள்.
அவர்கள் எத்தனையோ சொல்கிறார்கள்.
அதை எல்லாம் கடைபிடிக்கமுடியவில்லை.
மிக எளிதான வழியைச் சொல்கிறார்கள்
அதையும் நாம் பிடித்துக்கொள்ளவில்லை என்றால் எமன் நம்மை நமக்கு தெரியாமல் பிடித்துகொண்டு போய்விடுவான். அதனால்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெறும் சட்ட திட்டங்களையே
நினைத்துக்கொண்டிருந்தால்
ராம நாமத்தை எப்போதுதான் நினைப்பது?
காலம் யாருக்காகவும்
காத்திருக்கப் போவதில்லை
மண்டையைப் போட்டபின் சுற்றி
இருப்பவர்கள் ராம் நாம் சத்ய ஹாய்
என்று கூச்சல் போடுவதால்
உடலை விட்டு வெளியேறிய
ஜீவனுக்கு ஒரு லாபமும் இல்லை.
உடலில் உயிர் இருக்கும்போதே
ராம நாமத்தை சொல்லவேண்டும்.
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ
நிறுத்தக்கூடாது.
ராமன் காட்சி கொடுத்தால்
கொடுக்கட்டும் இல்லை கொடுக்காமல்
போனால் போகட்டும்
அதைப் பற்றி நமக்கு அக்கறை வேண்டாம்
ஆனால் ராம நாமம் சொல்லிக்கொண்டிருந்தால்
நம் ஜன்மாந்தரங்களில் நம்மீது படிந்த
அத்தனை கறைகளும் காணாமல் போய்விடும்
அது சத்தியம்
.
ஏனென்றால்
ராம நாமம்தான் சத்தியம்
அதுதான் நித்தியம்
அதை சொல்லாதவன்தான்
உண்மையில் பொல்லாதவன்
எல்லாம் இருந்தும் இல்லாதவன்
ராமா ராமா என்று 24 மணி நேரமும்
எச்சிலில் ஊறிக்கொண்டிருக்கும்
நம்முடைய நாக்குதான் சொல்லுகிறது.
அதனால் ராம நாமம் தோஷத்திற்கு
ஆளாகிறதா என்றால் இல்லை.
நம்முடைய எல்லா தோஷங்களையும்
போக்க வல்லது ராம நாமம் ஒன்றே
பல ஆண்டுகளுக்கு முன் .
அதைதான் புரந்தர தாசர்
இவனை சொல்லச் சொன்னார்.
தன்னுடைய "ராம மந்திரவ ஜபிசோ" என்ற
பாடல் மூலம்.
அதை கெட்டியாகப்
பிடித்துக்கொண்டான் இவன்.
பதிவில் எழுதுவது
எல்லாம் அவன் இவன் மனதில்
தோற்றுவிக்கும்கருத்துக்களே
அன்றி இவனுடையது
எதுவும் இல்லை.
ஜபிப்பதனால் என்ன பயன்?
ராம நாமம் ஜபிப்பதனால் என்ன பயன்?
என்று இவனைச் சிலர் கேட்கிறார்கள்.
இந்த மூடனைக் கேட்டால்
இவனுக்கு என்ன தெரியும்?
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
எத்தனையோ மகான்கள்
ராம நாமத்தை ஜபித்து நல்ல கதியை
அடைந்ததை கேள்விபட்டிருக்கிறேன்.
அதனால் நானும் அதைச் செய்கிறேன்
என்றுதான் இவன்பதில் சொல்லுவான்
முகுந்தனிடம் பக்தி பண்ணுவதைத் தவிர
வேறு என்ன முக்கியமான
வேலை இருக்க முடியும். ?
பண்டிதர்களிடம்
வாதம் செய்ய இவனால் முடியுமா?
அவர்கள் இவனை
வதம் செய்துவிடுவார்கள்.
இவன் கதையை
முடித்துவிடுவார்கள்.
அவர்கள் பக்கம்
இவன் செல்வதே கிடையாது.
ஆசாரம் தேவைதான்.
ஆனால் எப்போதும் ஆசாரத்தையே
பார்த்துக்கொண்டிருந்தால் ஆன்ம விசாரம்
எப்போதுதான் செய்வது?
ஆயுள் முடிந்து போகும்.
மூச்சுக்காற்று வந்து போய்க்கொண்டே இருக்கிறது.
எந்த வேலையை செய்துகொண்டிருந்தாலும் அல்லது
ஒன்றுமே செய்யாமல் வெறுமனே உட்கார்ந்து கொண்டு
இருந்தாலும் அது நிற்பதில்லை.
அதுபோல்தான் ராம நாமத்தை
சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
இந்த உலகத்தில் விழித்தது முதல் உறங்கும் வரை ஏதாவது வேலைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. எப்போது இவைகளிலிருந்து விடுபட்டு தியானம் செய்வது, ஆன்மீக சாதனைகளை செய்வது?
அது என்றும் நடக்கப் போவதில்லை.
அதனால்தான் சுலபமான வழி ராம நாமத்தை
சொல்லிக்கொண்டே இருப்பதுதான்.
என்று மகான்கள் சொல்கிறார்கள்.
அவர்கள் எத்தனையோ சொல்கிறார்கள்.
அதை எல்லாம் கடைபிடிக்கமுடியவில்லை.
மிக எளிதான வழியைச் சொல்கிறார்கள்
அதையும் நாம் பிடித்துக்கொள்ளவில்லை என்றால் எமன் நம்மை நமக்கு தெரியாமல் பிடித்துகொண்டு போய்விடுவான். அதனால்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெறும் சட்ட திட்டங்களையே
நினைத்துக்கொண்டிருந்தால்
ராம நாமத்தை எப்போதுதான் நினைப்பது?
காலம் யாருக்காகவும்
காத்திருக்கப் போவதில்லை
மண்டையைப் போட்டபின் சுற்றி
இருப்பவர்கள் ராம் நாம் சத்ய ஹாய்
என்று கூச்சல் போடுவதால்
உடலை விட்டு வெளியேறிய
ஜீவனுக்கு ஒரு லாபமும் இல்லை.
உடலில் உயிர் இருக்கும்போதே
ராம நாமத்தை சொல்லவேண்டும்.
பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ
நிறுத்தக்கூடாது.
ராமன் காட்சி கொடுத்தால்
கொடுக்கட்டும் இல்லை கொடுக்காமல்
போனால் போகட்டும்
அதைப் பற்றி நமக்கு அக்கறை வேண்டாம்
ஆனால் ராம நாமம் சொல்லிக்கொண்டிருந்தால்
நம் ஜன்மாந்தரங்களில் நம்மீது படிந்த
அத்தனை கறைகளும் காணாமல் போய்விடும்
அது சத்தியம்
.
ஏனென்றால்
ராம நாமம்தான் சத்தியம்
அதுதான் நித்தியம்
அதை சொல்லாதவன்தான்
உண்மையில் பொல்லாதவன்
எல்லாம் இருந்தும் இல்லாதவன்
ராமா ராமா என்று 24 மணி நேரமும்
எச்சிலில் ஊறிக்கொண்டிருக்கும்
நம்முடைய நாக்குதான் சொல்லுகிறது.
அதனால் ராம நாமம் தோஷத்திற்கு
ஆளாகிறதா என்றால் இல்லை.
நம்முடைய எல்லா தோஷங்களையும்
போக்க வல்லது ராம நாமம் ஒன்றே
பல ஆண்டுகளுக்கு முன் .
அதைதான் புரந்தர தாசர்
இவனை சொல்லச் சொன்னார்.
தன்னுடைய "ராம மந்திரவ ஜபிசோ" என்ற
பாடல் மூலம்.
அதை கெட்டியாகப்
பிடித்துக்கொண்டான் இவன்.
பதிவில் எழுதுவது
எல்லாம் அவன் இவன் மனதில்
தோற்றுவிக்கும்கருத்துக்களே
அன்றி இவனுடையது
எதுவும் இல்லை.
//நம்முடைய எல்லா தோஷங்களையும் போக்க வல்லது ராம நாமம்
ReplyDeleteஒன்றே//
கரெக்ட் அண்ணா.
//உடலில் உயிர் இருக்கும்போதே ராம நாமத்தை சொல்லவேண்டும்.//
ReplyDeleteமிகச்சரியாக சொன்னீர்கள். ;)
//பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நிறுத்தக்கூடாது.//
ருசியோ ருசியல்லவா ! எப்படிப்பிடிக்காமல் போகும்?
என்ன ருசி என்று அறிந்தால் அல்லவோ அதன் ருசி தெரியும்.
Deleteபல கோடி முறை ஜபித்த ராமதாசர்களே ராம நாமம் என்ன ருசி ,என்று கேட்கும் நிலையுள்ளது.
அந்த ருசி இந்த உலகில் நாம் சுவைக்கும் ருசிகளைவிட வேறுபட்டு நிற்ப்பதால் அது என்ன ருசி என்று அவனையே கேட்கிறார்கள். அவர்கள்.
24 மணி நேரத்தில் பாதிக்கு மேல் உறங்கி தொலைக்கிறோம். மீதி நேரம் ஏதாவது ஒரு கிறக்கத்தில் தொலைக்கிறோம். நிலைமை இவ்வாறிருக்க மனம் ஒன்றி ராம நாமம் ஜபிக்க ஏது நேரம்.?
//ராமன் காட்சி கொடுத்தால் கொடுக்கட்டும் இல்லை கொடுக்காமல்
ReplyDeleteபோனால் போகட்டும்//
”பத்துகோடி முறை நீ உச்சரித்தால் சாக்ஷாத் அந்தப்பிரபு ஸ்ரீ ராமன் உனக்குப் பிரத்யக்ஷமாகக் காட்சியளிப்பான், இது ஸத்தியம்” என்று தான் சாகும் நேரத்தில் ஸ்ரீ தியாகப்பிரம்மத்திடம் சொல்கிறார், ஸ்ரீ ராம பிரும்மம் என்ற அவரின் தகப்பனார்.
இது அடியேன் ஓர் பிரவசனத்தில் கேட்ட செய்தி.
இது போன்ற சத் விஷயங்களை ப்ரவசனங்களில் மட்டும்தான் கேட்கமுடியும்
Deleteசினிமா வசனங்களில் கேட்க முடியுமா?
முடியாது.
சினிமா வசனங்களை நூற்றுக்கு நூறு மனப்பாடம் செய்யும் மனிதர்கள் ப்ரவசனத்தில்சொல்லப்படும் நல்ல விஷயங்களை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுகிறார்கள்.
அதுதான் நம்முடைய
துக்கத்திர்க்கெல்லாம்காரணம் .
அது சரி பிரவசனம் எப்போது கேட்டீர்?
இதுவரை
எத்தனை கோடி ராம ஜபம் செய்துள்ளீர்?
//அது சரி பிரவசனம் எப்போது கேட்டீர்?//
Deleteதிரு. ஹரிஜி அவர்கள் ]திருமதி விஸாஹா ஹரி அவர்களின் கணவர்] சொல்ல பலமுறை கேஸட் மூலம் போட்டுக்கேட்டுள்ளேன்
//இதுவரை எத்தனை கோடி ராம ஜபம் செய்துள்ளீர்?//
தினமும் சுமார் 100 முறை. துல்லியமாகக் கணக்கேதும் கிடையாது.
ராம நாமம் - கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்... அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteராம நாமம் - கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
Deleteஇந்த உலகத்தில் விழித்தது முதல் உறங்கும் வரை ஏதாவது வேலைகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. எப்போது இவைகளிலிருந்து விடுபட்டு தியானம் செய்வது, ஆன்மீக சாதனைகளை செய்வது?/
ReplyDeleteஅலைகள் ஓய்ந்த பின் நீராடமுடியுமா..
மூச்சுக்காற்று இருக்கும்போதே ராமநாமம் சொல்லி உய்வோம்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம்..
அப்படியே அம்மணி
Deleteநரியைப் பரியாக்கியவனும்
ReplyDeleteராம நாமத்தைதான்
காதில் ஒதுகிறானாம்
காசியில் மரிப்பவர்களுக்கு
அரங்கனின் ஆயிரம் நாமத்தின் சக்தி
மூன்றே ராம நாமாக்களில்
அடங்கிவிடும் என்று
பார்வதிக்கு உபதேசம் செய்தானாம்.
ராம நாமமு ஜன்ம ரட்ஷக மந்திரம்
என்று பாடுகிறார் ராம தாசர்
அந்த மந்திரம் இந்த மந்திரம் என்று
வீணாய் குழம்பி திரியாதே
ராம மந்திரத்தை ஜபிப்பாய்
என்கிறார் புரந்தரதாசர்
இன்னும் எத்தனையோ மகான்கள்
ராம மந்திரத்தை உச்சரித்து
அவனோடு கலந்துவிட்டனர்.
என்பதை நினைவில் கொண்டுதான்
அவனையே அல்லும் பகலும்
நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
மற்றவர்களையும் சில ஆண்டுகளாக
வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
உலக மோகத்தில் மூழ்கியிருக்கும் மக்கள்
அதை ஜபிப்பதனால் என்ன கிடைக்கும் என்றுதான் கேட்கிறார்கள்?
விழித்ததுமுதல் விழிகள் சோர்வடையும் வரை
வேண்டாதவற்றை விழித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிறரை பழித்தும் இழித்தும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
தன்னுடைய ஜீவன் கடைதேறும் வழியை யாரும் நாடத் தயாரில்லை.
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
ReplyDeleteHare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
மூச்சுக்காற்று இருக்கும்போதே ராமநாமம் சொல்லி உய்வோம்
Deleteகாற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம்