அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(20)
பாடல்-20
முப்பது மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பமுடையாய்
திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா
துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்
திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும்
தந்துன் மனலனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
விளக்கம்
மனதார வேண்டினால் போதும்
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முன்னதாகச் சென்று வினை தீர்க்கும் கலியுக தெய்வமே
கண்ணனே துயில் எழுவாயாக
பக்தர்களை காக்கும் திறன் மிக்கவனே
உன் அடியார்களைப் பகைத்தவ்ர்களுக்கு
பயம் என்ற சுரத்தைக் கொடுப்பவன்
பரிசுத்தமானவனே நீ துயில் எழுவாயாக
குவிந்த செப்ப செப்பமார்புகளை உடையவளும் செக்கச் சிவந்த உதடுகளைக் கொண்டவளும் மின்னல் போன்ற இடையைக் கொண்டவளும் ஆகிய நப்பினை பிராட்டியே நீயும் எழுந்து வா.
எங்கள் நோன்பிற்கு விசிறியும் கண்ணாடியும் தேவைபடுகிறது
அத்துடன் உன் மணாளனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பிவை
இந்தக் கணத்திலேயே கண்ணனின் அருள் மழையில் எங்களை நனையச் செய்

பகவான் கண்ணன் மூன்று உலகங்களுக்கும் அதிபதி
மூவுலகம் என்றால் தேவர்கள் வாழும் விண்ணுலகம்
மனிதர்கள் ,விலங்குகள் என பிற உயிர்கள் வாழும் இந்த பூவுலகம்
அசுரர்கள் போன்றோர் வாழும் பாதாள உலகம்
விண்ணுலகத்திர்க்கும் பாதாள உலகிற்கும்
இடையில் உள்ள இப்புவியில்தான் கண்ணன் அவதரித்தான்.
அதனால்தான் இடைப்பட்ட உலகத்தில்
வசிக்கும் நாம் இடையர்கள்.
மனிதகுலம்தான் இடைக்குலம்
என்று பொருள் கொள்ள வேண்டும்.
இங்கும் நாம் வாழும் வாழ்க்கையைப் பொருத்துதான்
ஒளி உலகில் வாழும் தேவர்களாகவோ அறியாமையில் வாழும் அசுரர்களாகவோ
விலங்குகளாகவோ அல்லது
அனைத்தையும்கடந்த நிலையில்
தெய்வங்களாகவோ அல்லது
பரப்ப்ரம்மத்துடன் அயிக்கிய்மாகும்
நிலையையோ அடையலாம்.
ஆண்டாள் ஏன் நப்பின்னையின்
உடலழகை வர்ணிக்கவேண்டும்?
என்று சிந்தனை செய்து பார்த்தல் வேண்டும்.
நாம் இந்த வர்ணனைகளைப் படிக்கும்போது
நம் மனதில் ஆபாசமான காம சிந்தனைகளை எழாமல் நம்மை காத்துக்கொள்ளவேண்டும்
என்பதற்காகத்தான் சில பாசுரங்களில்
இது போன்ற வர்ணனைகளை சேர்த்துள்ளாள்.
அதன் உட்பொருளைக் நாம் உணர்ந்துகொண்டு
கண்ணின் திருவடிகளைப் பற்றி மட்டும்
நாம் கவனத்தில் சிந்தித்து
அவன் அருளைப் பெற்று உய்ய வேண்டும்.
காம க்ரோதாதி எண்ணங்கள் நீக்கி
பக்தியை மட்டும் நாம் பிரதானமாகக் கொண்டு
பகவானின் தாள்களைப் பற்றினால்தான்
நாம் நம் பாவங்கள் நீங்கி
பிறவிக் கடலிலிருந்து மீள முடியும்.
என்பதே இந்த பாசுரத்தின் உட்கருத்தாகும்
படங்கள்-நன்றி-கூகிள்

மனதார வேண்ட வேண்டும்... உட்பொருள் விளக்கம் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுதலில் காட்டியுள்ள படம் முதல் தரமானது. வழக்கம்போல எல்லாமே ஜோர் ஜோர். பாராட்டுக்கள்.
ReplyDeleteதான் உடல் அல்ல ஆன்மாதான் என்ற எண்ணம் வரும் வரை காமத் தீயை அணைக்க முடியாது
Deleteபகவானின் தாள்களைப் பற்றினால்தான்
ReplyDeleteநாம் நம் பாவங்கள் நீங்கி
பிறவிக் கடலிலிருந்து மீள முடியும்.//அருமை ஐயா! நன்றி!