Friday, January 10, 2014

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்(2)

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள்(2)

சத்குரு ஞானந்த கிரி ஸ்வாமிகள் 




சுவாமியின் ஒரு பக்தரின் அனுபவம்

ஸ்வாமிகள் கருணைக் கடல். 
தன்வந்திரி பகவானின் அம்சம். 

அந்த பக்தருக்கு
நாட்பட்ட காசநோய்.
அந்த நோயினால் மிகவும் துன்பப்பட்டார்

அவர் சுவாமிகளைச் சரணடைந்து
இந்த நோயிலிருந்து நீங்கள்தான்
கருணை கூர்ந்து காப்பாற்ற வேண்டும் என்றார்.

ஆனால் சுவாமிகளோ
அவரிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டார்
எப்படி தெரியுமா?

படுத்த படுக்கையாகக் நடக்க முடியாமல்
 கிடந்த அவரை அதிகாலையில் எழுந்து
பச்சைத் தண்ணீரில் குளித்து
அங்கு கோயில் கொண்டிருக்கும்
தெய்வங்களை சுற்றி வரச் சொன்னார்

அவருடன் இருந்த உறவினர்களோ
சுவாமிகளின் இந்த உத்தரவைக் கண்டு
நோயுற்றவரின்  நிலைமை
என்னாகுமோ என்று பயந்தனர்

சில நாட்களில் அவர்களை
சாந்தப்படுதுவதர்க்காக ஸ்வாமிகள்
சென்னையில் உள்ள மருத்துவர்களின்
ஆலோசனைப்படி அவரை வேலூரில்
உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்

அனுப்பும்போது பிரசாதமும் கையில்
மருத்துவ செலவிற்காக 50 ரூபாயும்
கொடுத்து அனுப்பி வைத்தார்.

அந்த பணம் நோய் முற்றிப் போன
அவரின் மருத்துவ செலவிற்கு 
கொஞ்சம் கூட காணாது .

அவர் வேலூர் மருத்துவ மனையில்
போய் சேர்ந்தார்.
மருத்துவ மனையில் எல்லா
பரிசோதனைகளையும் முடித்துவிட்டு
ஒரு ஹோட்டலில் போய் ஒரு
அறையை வாடகைக்கு எடுத்து தங்கினார்.
 தங்கியவர் உறங்கிப்போனார்.

உறக்கத்தில்
என்ன நடந்தது

நாளை பார்ப்போம்.
.

5 comments:

  1. ஆஹா, தொடர் கதைபோல, மஹானின் திருவிளையாடல்கள் தொடர உள்ளதா? மிக்க மகிழ்ச்சி, அண்ணா.

    எழுத்துக்கள் பெரியதாகவும், பதிவு சிறியதாகவும் உள்ளதால் என்னால் ஆசையாக சுலபமாகப் படிக்க முடிகிறது. மகிழ்ச்சி. இது போலவே பதிவு போடுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. யாம் பெற்ற
      இன்பம் பெறுக இவ்வையகம்

      Delete
  2. ஆவலுடன் தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
  3. sir, I wish to talk to you and will be grateful if you can give me your phone no. Mine is 9380288980/9444991213. N.R.Ranganathan. I know the person who was in Parry and co. Regards.

    ReplyDelete
  4. sir, I wish to talk to you and will be grateful if you can give me your phone no. Mine is 9380288980/9444991213. N.R.Ranganathan. I know the person who was in Parry and co. Regards.

    ReplyDelete