அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(28)
பாடல்-28
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும்இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா
உந்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையலோ ரெம்பாவாய்.

விளக்கம்
பகவான் கண்ணன் தான் படைத்த
உயிர்கள் மீது அளவற்ற கருணை உடையவன்.
வினைகளின்பயனாய் இவ்வுலகில் வந்துதித்த
உயிர்களை அப்படியே துன்பப்படட்டும் என்ற .விட்டுவிடும் எண்ணம் அவனுக்கு சிறிதளவு கூடக் கிடையாது.
வேதங்களைக் கற்றவர்கள் அதன்
முடிவான இலக்கான பகவானின் பரம பதத்தை அடைவதை விட்டு சடங்குகளிலும் அதன் பொருள் குறித்து வாதம் செய்வதிலும் வாழ்நாளை ஓட்டுகின்றனர்.
ஞானத்தை அடைய வாய்ப்பும்
வசதியும் இல்லாத கோடிக்கணக்கான ஜீவன்கள் இந்த உலகில் இருக்கின்றன.
அவர்களை கடைத்தேற்றும் பொருட்டு
அவனே அவதாரம் எடுக்கின்றான்.
பல சமயங்களில் அவனை உணர்ந்த
அடியார்களை அனுப்புகின்றான்.
சில நேரங்களில் அப்படிப்பட்டஜீவன்களின்
அறியாமையைப் போக்கி
அவர்களையும் தன்னுடைய திருவடி நிழலில்
சேர்த்துக்கொள்ள அவர்களில் ஒருவராய்
அவதரித்த சம்பவம்தான் ஆயர்பாடியில் கண்ணனாய் அவதரித்து
கோபர்களையும் கோபியர்களையும்
அன்பால்தன்னிடம் ஈர்த்து அவர்களுக்கு
தெய்வீக இன்பத்தை தந்து அவர்களை மகிழ்வித்தான்.
ஆயர்குல சிறுவர்களுடன் தினமும்
கானகத்திற்கு சென்று பசுக்கூட்டங்களை மேய்த்து அவர்களோடு சேர்ந்துகொண்டு அவர்கள் கொண்டு வந்த உணவை அவர்களோடு சேர்ந்து கண்ணன் உண்டான் .என்னே அவன் எளிமை!
ராமாவதாரத்தில் சபரி தந்த எச்சில் படுத்தப்பட்ட கனிகளை உண்டான்
அவள் தூய அன்பினை ஏற்றுக்கொண்டு எளிதாக அடையமுடியாத பரமபதத்தை அளித்தான்
கண்ணன் ஆயர்பாடியிலிருந்து
மதுரா சென்றவுடன்தான் அவனுடைய பெருமைகளை
அவர்கள் உணரத் தலைப்பட்டனர்.
தெய்வமே நம்மோடு பழகியதை அறியாது
தங்களில் ஒருவராகக் கருதி மரியாதையின்றி
பெயரிட்டு அழைத்தும் சரிசமானமாக பழகியதை நினைத்து பயந்து கண்ணா
நாங்கள் அறிவில்லாதவர்கள்.
பசுக்களை மேய்க்கும் முழுநேர வேலையை செய்து வந்ததால் கல்விகற்க வாய்ப்பில்லாது அறிவில்லாதவர்களாக இருந்ததினால்
உன் பெருமைகளை அறியாமல் நடந்துகொண்டோம்.
அதை பொருட்படுத்தாது எங்களை தவறாக நினைத்து சினம் கொள்ளாதே என்று அன்போடு இறைஞ்சுகிறார்கள்.
அன்பினால்தான்உன்னோடு
அவ்வாறு பழகினோம் அதை கருத்தில் கொண்டு எங்களை காப்பாற்றுவாயாக என்று வேண்டுகிறார்கள்.
கண்ணின் சந்நிதானத்தில் கல்விக்கோ
கர்வதிற்கோ இடம் இல்லை.
தூய பயன் கருதா அன்பு ஒன்றே
செல்லுபடியாகும் என்பதை அனைவரும்
உணர்ந்துகொள்ளவேண்டும். இந்த பாசுரத்தில்
ஆண்டாள் நமக்கெல்லாம் உணர்த்துகிறாள். .

தூய பயன் கருதா அன்பு தான் வேண்டும்... அருமையான விளக்கம் ஐயா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி...DD
ReplyDelete//கண்ணின் சந்நிதானத்தில் கல்விக்கோ கர்வதிற்கோ இடம் இல்லை. தூய பயன் கருதா அன்பு ஒன்றே செல்லுபடியாகும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.//
ReplyDeleteஅச்சா ! பஹூத் அச்சா !! அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.