Wednesday, January 29, 2014

குறை ஒன்று (ம் ) இல்லை மறை மூர்த்தி கண்ணா !



குறை ஒன்று (ம் ) இல்லை 
மறை மூர்த்தி கண்ணா !

இந்த பாடலை
பாடாதவர்கள் இல்லை
கேளாதவர்கள். இல்லை

இதை பாடுபவர்கள் அனைவரும்
இறைவனை நோக்கி மனதில் குறை ஒன்று இல்லை 
ஏராளமாக இருகின்றன என்று வெளியில் சொல்லாமல் 
குறை இன்றும் இல்லை என்று பாடுவதுதான் உண்மை.

நீங்கள் அவர்கள் பாடுவதைப் பார்த்தாலே குரலில் வந்து போகும்  ஏற்ற இறக்கங்கள் அதை காட்டிக் கொடுத்துவிடும்.



அது சரி இந்த பாடலை முதலில் பாடி
இசைஉலக ரசிகர்களுக்கு  அறிமுகம் செய்து வைத்தவர் யார் என்று அனைவர்க்கும் தெரியும். சொல்லவேண்டியதில்லை.



இந்த பாடலை இயற்றியவர்
மூதறிஞர் ராஜாஜி என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்ற
உண்மை பல பேருக்கு தெரியாது.

அவர் எந்த சூழ்நிலையில் இந்த பாடலை இயற்றினார்
என்பதை அறிந்துகொண்டால். நன்றாக இருக்கும்

வாழ்வில் எவ்வளவோ இன்பங்கள் இருந்தும் அதன் ஊடே வந்து தன் சுவடுகளை ஆழமாகப் பதித்து விட்டு போகும் ஏதாவது ஒரு சில துன்பங்களின் நினைவில் சிக்கி தவிக்கும் மனிதர்களுக்கு
இந்த பாடல் உண்மையிலேயே ஒரு ஆறுதல் நிச்சயம் தரும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் நாள்
அவருடைய நினைவு நாள் வருகிறது.

ஞானக் கருத்துகளை தன்னகத்தே
கொண்ட பாடல் இயற்றபட்டதர்க்கு மூல காரணம்
மூதறிஞரின் வாழ்வில் சந்தித்த சோதனைகளும்
வேதனைகளும் ஏற்படுத்திய முதிர்ச்சியின்
விளைவாகத்தான் இந்த பாடல் தோன்றியதாக
கோபால் காந்தி தெரிவிக்கிறார்.

இன்னும் வரும் 

2 comments:

  1. என்றும் மனதை தாலாட்டும் இனிமையான பாடல் ஐயா...

    கோபால் காந்தி அவர்கள் சொன்னது உண்மை தான் என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
  2. 'ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா' என்று வலியுறுத்திச் சொல்லும்போது கண்களில் கண்ணீரே மல்கும். குறைகள் இருக்கிறது. இல்லாமல் இல்லை. அதைக் கண்ணன் அறிவான். அதை அவன் தீர்ப்பான் என்ற நம்பிக்கையில் 'ஒன்றும் குறையில்லை' என்ற வரியில் கண்ணனின் மீது பாரத்தைப் போடுகிறோம் என்று தோன்றும்.

    ReplyDelete