அழகிய சிங்கனே
அருள் செய்திடுவாய்
அழகிய சிங்கனாய்
அழகிய தூணில் அவதரித்தாய்
அகந்தை கொண்ட
அரக்கனை அழித்தொழித்தாய்
அடியவன் பிரகலாதனின்
அபயக் குரலுக்கு அன்று
செவி சாய்த்தாய்
இன்று சிலையாய் இருக்கும் நீ
அகந்தை கொண்டு அலையும்
எங்கள் மனதில் நிலையாய்
நின்று அதை அகற்றி
நலமுடன் வாழ
அருள் செய்திடுவாய்
அருமை... அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...