Monday, January 6, 2014

மா ஆனந்தமயி

மா ஆனந்தமயி 



பெயரைக் கேட்கையிலே 
உள்ளத்தில் ஆனந்தம் பொங்குதம்மா 
இதயத்தில் அன்பு ஊற்றெடுக்குதம்மா 

உன் தெய்வீக வடிவத்தைக்  கண்ட கண்கள் 
வேறொன்றையும் காண மறுக்கின்றதே 
அது ஏன் ? 



உன் வடிவம்என்  உள்ளமெல்லாம் நிறைந்து 
இன்பத்தை அள்ளித் தருகின்றதே 
அது ஏன் ?

நீ மந்திர ஜால வித்தைகளைக் காட்டியவள் 
அல்லவே?

மனதை மயக்கும் வார்த்தை ஜாலங்களை 
அள்ளி வீசியவள் அல்லவே?

இருந்தும் நீ என் நெஞ்சமெல்லாம் நிறைந்து 
இனிய மணம் வீசுகின்றாய்? 



உன்னை கண்ட மாத்திரத்தில் 
அலை பாயும் மனம் அடங்கி போயிற்றே அது எப்படி?

நான் உன்னைநேரில் கண்டது கிடையாது 
இருந்தும் என்னுடன் நீ எப்போதும் 
இருப்பதுபோல் உணர்கிறேன்.

அப்படி நீ என்ன  சொல்லிவிட்டாய் 
என்னை உன் பால் ஈர்ப்பதற்கு?

ஒன்று சொன்னாய்,
அதை அழுத்தம் திருத்தமாய் சொன்னாய் 
அது என் மனதிலே ஒட்டிக்கொண்டது. 

பல்வேறு அய்யங்களினால் நிறைந்து 
குழம்பி போயிருந்த என் மனம் அமைதியுற்றது 

இனி நான் இல்லை 
இனி நான் அவனின் கருவி. 

நான் கர்வி இல்லை.

அவன் என்னை எப்படியெல்லாம் 
பயன் படுத்துகிறானோ அதற்க்கு முணுமுணுக்காமல் உடன்படுவேன். 

என்னை சுற்றியுள்ளவர்கள்,மற்றும் 
அனைத்தும் அவன் கருவிகளே 
இதில் பேதம் இல்லை .

இனி என்னுடைய சுமைகள் 
எல்லாம் அவன் சுமை. 
எனக்கு ஒன்றுமில்லை. 

என்ன அருமையானது  
எளிமையானது உன் தத்துவம்.
சரணாகதி தத்துவத்தை எளிதாக்கித் தந்து விட்டாயே 

வங்கக் கடல்கடைந்த  
மாதவனும் கேசவனும் நீதான் 

வாசவியும் நீதான். 



ஞானத்தை அருளும்
கண்ணனும்  நீதான் 

மௌனமாய் யோகிகளுக்கு 
ஞானத்தை  உபதேசம் செய்த  சிவமும் நீதான்.

வங்க  மண்ணில்  முளைத்தெழுந்த  ஜோதியே 
அறியாமையில் வாடும் 
எங்களை வாழ்விக்க வந்த சக்தியே

அனைவரும் உன் புகழை 
அறிந்து உய்யட்டும் 
துன்பம் நீங்கி இன்பமாய் 
இறைஅருள் பெற்று வாழட்டும். 




மா ஆனந்தமயீ 
உன். திருவடிகளே சரணம் 

pic-courtesy-google images

3 comments:

  1. அருமையான விளக்கம்.... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆனந்தமான பதிவுக்கு நன்றிகள், அண்ணா.

    ReplyDelete