முதியோர் இல்லங்கள்(தொடர்ச்சி)
சொல்லப்பட்டவை உண்மைகள்... முதலில் தவறு பெற்றோர்களிடம்... பிறகு புலம்புவதும் அவர்கள் தான்...
அதிலிருந்து விடுபட வழி தேடவேண்டும்.
அதற்கு சிலவற்றை
விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும்.
விட்டுக் கொடுக்காவிடில்
உறவுகள் புட்டுக் கொண்டு போய்விடும்.
இயலாமை வந்தால் ஏளனங்கள்,
ஏச்சுக்கள் பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.
என்ன செய்வது?
மூச்சு நிற்கும் வரை முண்டிஅடித்துதான்
வாழ்க்கையை நடத்த வேண்டும்.
எல்லாவற்றிலிருந்தும்
தப்பிக்க வழி உள்ளது
ஏசுகிறார்களா ?
ஈசனே எனக்கு பொறுமையைத் தாரும்.
அவர்களுக்கும் நல்ல புத்தியைத் தாரும்
என்று பிரார்த்தனை செய்யுங்கள்
புராணங்களில் வரும் எத்தனையோ
கதாபாத்திரங்கள் பட்ட துன்பங்களை
நினைவு கூறுங்கள்
அவர்கள் பட்ட துன்பங்களைக் காட்டிலும்
நம்முடைய துன்பங்கள் அவ்வளவு பெரிதல்ல என்பது தெரியவரும். .இரண்டும் இணைந்துவிடும்
அன்பால் ஒருநாள்.
பிரார்த்தனைக்கு
அவ்வளவு சக்தி உண்டு.
ஒரு மனிதன் படும் துன்பங்களுக்கு
காரணம் அவரவர் எண்ணங்களே
அவரவர் செய்த தீவினைகளே
நீங்கள் செய்த தீவினைகளை
காலபோக்கில் மறந்திருக்கலாம்.
ஆனால் இறைவன் மறப்பதில்லை.
அதை வட்டியும் முதலுமாக
திருப்பித் தராமல் விடுவதில்லை.
என்னசெய்வது?
அவன் போட்ட சட்ட திட்டம் அப்படி.
அதை நெறி பிறழாது
அமல்படுதுவான் அவன்.
இருந்தாலும் அவனை நினைத்து உருகினால்.
நம் மீது கருணை காட்டத் தயங்குவதில்லை
என்பதை உணரவேண்டும்.
துன்பம் நேர்கையில் யாழெடுத்து
நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற பாடல்
வரிகளை நினைவில் கொள்ளுங்கள்
இனிய பாடல்களை உரக்கப் பாடுங்கள்.
சில வீட்டில் அதற்கும் 144 இருக்கும்.
அந்நேரங்களில் கண்ணை மூடிக்கொண்டு
அந்த பாட்டை அசை போடுங்கள்
இனிய இசையாய் உங்கள் காதுக்குள் ஒலிக்கும்
அழகிய தமிழ் கவிதைகளை நினையுங்கள் .
மனதில் உள்ள சோகம் ஆதவனைக்
கண்ட இருள்போல் ஓடிவிடும்.
மாபெரும் மனிதர்களின் வாழ்க்கைசரிதத்தை படித்திருந்தால் அவர்கள் எப்படி கடினமான பிரச்சினைகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நினைத்தால் மனதில் நம்பிக்கை வரும்.
பாம்பு போல சீறாதீர்கள்
சீறினால் அடிபட்டு
சாகத்தான் வேண்டும் .
சினத்தை விட்டொழியுங்கள்
உங்களை சுற்றியுள்ளவர் சினந்தாலும்
நீங்கள் தன் நிலையை இழக்காது
அவர்களுக்கு ஐஸ் வையுங்கள்.
புகழ மனம் இல்லையென்றால்
நாக்கை வெளியே நீட்டாதீர்கள்.
அவர்கள் யாரையோ கோபிக்கிறார்கள்
என்று நினைத்துகொள்ளுங்கள்.
நீதாண்டா எனக்கு உதவணும்
உனக்கு எப்போது முடியுதோ அப்போது செய்யடா என்று சொல்லுங்கள். அவர்கள் ஒரு சிறு உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்கள் பெரிய உதவி செய்வதாகவும் நன்றாகப் தன்னை பார்த்துக்கொள்வதாகவும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடுங்கள், சில நேரங்களில் அதுகூட நன்றாக வேலை செய்யும்.
முதுமை என்பது வாழ்வின் அங்கம்.
அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்..
அறிவுள்ளவன் அதை
அழகாக அனுபவிக்கிறான்.
பண்புள்ளவன் பாக்கியசாலி
பண்பற்ற வாழ்க்கை நடத்தியவன்
அதற்கான விலையை
கொடுத்துதான் ஆகவேண்டும்.
யாரையும் நொந்து பயனில்லை
என்பதை உணரவேண்டும்.
இருந்தும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால்
அவர்களுக்கு அவன் நிச்சயம் உதவி செய்வான்,
படங்கள்-நன்றி-கூகிள்
// வறுமை வந்தால் வாடாதே, வசதி வந்தால் ஆடாதே //
ReplyDeleteஅருமையோ அருமை அண்ணா. அக்ஷரலக்ஷம் பெறும் வார்த்தைகள்.
அடேங்கப்பா ! தினமும் எத்தனைப் பதிவுகள் !!!!!
Deleteஇருப்பினும் திகட்டவே இல்லை, அண்ணா.
எழுதித்தள்ளுங்கள் ! பாராட்டுக்கள் அண்ணா, வாழ்த்துகள் அண்ணா.
”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற”
அன்புடன் VGK
நன்றி VGK
Deleteநாடு நன்றாகத்தான் இருக்கிறது
நாட்டு மக்களின் மனதில்தான்
அமைதியும் இல்லை
அன்பும் இல்லை.
படங்களுடன் விளக்கங்கள் அருமை ஐயா... பிரார்த்தனை பற்றி சில குறிப்புகள் எழுதி வைத்துள்ளேன்... இன்னும் முடிக்கவில்லை... விரைவில் பகிர்ந்து கொள்வேன்... நன்றி ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...