சுவாமி சிவானந்தரின்
சிந்தனைகள் (3)
வை.கோபாலகிருஷ்ணன்
has left a new comment on your post "சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்":
//மனித அன்பு
எல்லாம் கபடமானது
இது காமம்
இது சரீர அபிமானமுள்ள
சிற்றின்ப அன்பாகும்
இது சுயநலத்தோடு
கூடிய அன்பாகும்
இது சதா மாறிக்கொண்டே
இருக்கக் கூடியது
இது எல்லாம் பகட்டும்
வெளி வேஷமும் ஆகும் //
கரெக்ட்டூஊஊஊ.
ஆனால் அதில் தான் எல்லோரும் விட்டில் பூச்சிபோல போய் மாட்டிக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு கிக் உள்ளது போலிருக்கு..
நன்றி. வைகோபாலகிருஷ்ணன் அவர்களே.
உங்கள் கருத்துகளுக்கு
கிக்கு சமாசாரங்களை உள்ளே தள்ளினால்
அவைகள் நம்மை மயக்கி கீழே தள்ளி விடும்
கிக்கு சமாசாரங்களை கண்டாலும்
அவைகள் நம்மை மயக்கி நம்மை
மீளா படு குழியில் தள்ளிவிடும்
குழியில் வீழ்ந்தபின் மீள்வது ஏது?
அவர்களுக்கு இந்த உலகை விட்டு
நீங்கிய பிறகு குழி தர்ப்பணம்தான் கிடைக்கும்
விட்டில் பூச்சி மிகவும் நம்மை விட புத்திசாலி.
அது ஒளியை நோக்கி சென்று தன் உயிரை விடுகிறது
ஒளியை நோக்கி செல்வதால்
அதன் ஆத்மா ஒளியில் கலந்துவிடுகிறது.
அதன் உடல் மட்டுமே அழிகிறது.
ஆறறிவு படைத்த ,கிடைப்பதற்கு
அரிதான மனித பிறவியை நாம் பெற்றும்
ஒளியாகிய இறைவனை நாடாமல்
நிழல்களை நாடி சென்று
ஆசா பாசங்களில் மூழ்கி ,
இன்ப துன்பங்களை அனு தினமும் ஏற்று
ஒவ்வொரு கணமும் அல்லபட்டுக்கொண்டு
பிலாக்கணம் பாடிக்கொண்டிருக்கிறோம்.
மனதை மன்மதனை எரித்த
மகேசனை துதியாமல்
மகான்களின் போதனைகளை மதியாமல்
மக்கி மண்ணாகிபோகும் பொருட்கள் மீது
நாட்டம் கொண்டு, மதி மயங்கி
மரணத்தை நோக்கி
பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
மரணத்தை வெல்லும் வழி அறிந்திருந்தும்
அதை நாடாது அற்ப பொருட்களையும்
கண நேரமே இன்பம் தரும் இன்பங்களை
நாடியே வாழ்நாள் முழுவதும்
ஈ போல் அலைந்து திரிகிறோம்
பொருட்களை தேடி
சேர்ப்பதில் மகிழ்கிறோம்
அதை பிறர் பறித்து சென்று விட்டால்
அழுகிறோம்
உற்றவர்கள் மீது மட்டும்
அளவற்ற பாசம் கொள்ளுகிறோம்.
மற்றவர்களை வெறுத்து
ஒதுக்குகிறோம்.
அவர்கள் நம்மை விட்டு பிரிந்தால்
அழுது,அரற்றி புலம்புகிறோம்.
அன்பு செய்ய மறந்துவிட்டோம்.
சுயநலம் கொண்ட பாசத்தை
அன்பென்று தவறாக புரிந்துகொண்டோம்.
விருப்பு வெறுப்பற்று
அனைவரும் அந்த இறைவனின்
படைப்பென்று கருதி அன்பு செய்யும்
பாங்கினை நாம் கைகொண்டால்
இவ்வுலக வாழ்வு இனிக்கும்.
இனிக்க வைக்கும் கருத்துக்கள்... நன்றி ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றிDD
Delete//விருப்பு வெறுப்பற்று அனைவரும் அந்த இறைவனின் படைப்பென்று கருதி அன்பு செய்யும் பாங்கினை நாம் கைகொண்டால் இவ்வுலக வாழ்வு இனிக்கும்.//
ReplyDeleteஇது கேட்க மிகவும் அருமையாகத்தான் உள்ள்து. இனிக்கும் நாள் விரைவில் வரட்டும். ;) மனித சமுதாயம் அச்சமின்றி வாழட்டும்.
நல்லதைச்சொல்லும் நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.