Wednesday, May 29, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (50)

தியாகராஜ சுவாமிகளின்  
சிந்தனைகள் (50) 


 



தாறுமாறாக பேசும் மாந்தர் 
எனக்கிழைக்கும் 
துன்பங்களைக் கண்டு 
நீ வாளாவிருப்பது நியாயமா?
இராமா !

எனக்கு சமானமானவர்களுக்கெதிரில்
நீ என்னை செய்யும் அலட்சியம்
போதாதா?

என் மானசீகப் பூஜையைக் காட்டிலும்
அயலார் கையினால் செய்யும் பூஜையைக்
கண்டு உன் உள்ளம் குளிர்ந்ததா?

தாறுமாறாகப் பேசும் மாந்தர்
எனக்கிழைக்கும் துன்பங்களைக் கண்டும்
நீ வாளாவிருப்பது
நியாயமா?

பரமார்த்தத்தை விரும்பும்
ஞானிகளின் துயரங்களை
நீ போக்கியருளவில்லையா?

(கீர்த்தனை-50)-சரிவாரிலோந சௌக -ராகம்  பிந்நசட்ஜம் (மேள-9)- தாளம்-தேசாதி 

இந்த கீர்த்தனையில் பகவான் பக்தர்களின் 
பக்தியை கடுமையாக சோதிப்பதை விட 
இந்த உலக மாந்தர்கள் பக்தர்களுக்கு  
அளிக்கும் தொல்லைகளும்  
கொடுமைகளும் சொல்லதரமன்று.
ஞானிகளின் வாழ்க்கைசரிதங்களை
படித்தவர்கள் இதை புரிந்துகொண்டிருப்பார்கள்.

ஒரு பக்தன் இறைவனை 
அடையவேண்டுமென்றால் 
இத்தகைய அவமானங்களையும்,
கொடுமைகளையும் இறைவனின் 
பிரசாதமாக ஏற்றுக்கொண்டு 
முணுமுணுக்காமல் மனதில் 
சிறிதும் அகந்தையில்லாமல்  
மிகவும் பொறுமையுடன் 
சகித்துக்கொள்ள
பழகி கொள்ள வேண்டும். 

அதற்கு பரிபூர்ண சரணாகதியும்,
நம்பிக்கையும் தேவை.

அது இல்லாவிடில் அவர்கள்
வெற்றி அடையமுடியாது .

பக்தனுக்கு அவன் உபாசனா
மூர்த்திதான் எல்லாம்

எல்லாவற்றையும் அவனிடமேதான்
முறையிடவேண்டுமேதவிர
மனிதர்களிடம் சென்று
யாசிப்பதோ அவர்களிடம்
துவேஷமோ பாராட்டக்கூடாது.

Pic-courtesy-google images

11 comments:

  1. காட்டியுள்ள படம் மிக அழகாக உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுக்கள். இதை நான் வேறொருவர் பதிவினில் என்றோ பார்த்து மகிழ்ந்த ஞாபகமும் வந்தது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இந்த படம் google images லிருந்து எடுத்தேன்.
      யார் வலைப்பதிவில் படங்களை பதிந்தாலும் அது google imagesல் பதிவாகிவிடும். சிலர் படங்களுக்கு உரிமை பாதுகாப்பு செய்திருப்பார்கள்.

      Delete
  2. இந்தப்படத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட காட்சி பற்றி எனக்கும் வேறொரு பதிவருக்கும் மிகப்பெரிய தர்க்கமே நடந்ததும் நினைவிருக்கிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அவற்றையெல்லாம் மறந்துவிடுங்கள். ஸ்ரீ ராமனை மட்டும் நினைவில் வையுங்கள்

      Delete
  3. கேள்விகளும் விளக்கங்களும் அருமை... நன்றி ஐயா...

    ReplyDelete
  4. //ஒரு பக்தன் இறைவனையோ / அம்பாளையோ அடைய வேண்டுமென்றால் இத்தகைய அவமானங்களையும்,
    கொடுமைகளையும் இறைவனின் / இறைவியின் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு முணுமுணுக்காமல் மனதில் சிறிதும் அகந்தையில்லாமல் மிகவும் பொறுமையுடன் சகித்துக்கொள்ள பழகி கொள்ள வேண்டும். //

    அதே! அதே !! சரியாகச்சொல்லியுள்ளீர்கள்.

    சகிப்புத்தன்மையை நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டுதான் வருகிறேன்.

    //அதற்கு பரிபூர்ண சரணாகதியும், நம்பிக்கையும் தேவை.//

    அச்சா! பஹூத் அச்சா. NOTED.

    இன்னும் நம்பிக்கை உள்ளது.

    TOTAL SURRENDER ஏற்கனவே ஆயாச்சு.

    அழகான பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. baal to ball commentary அற்புதம்.
      இந்த பதிவின் நோக்கத்தை
      தெளிவாக சுட்டி காட்டியமைக்கு
      நன்றி VGK

      Delete
  5. எல்லாவற்றையும் அவனிடமேதான்
    முறையிடவேண்டுமேதவிர
    மனிதர்களிடம் சென்று
    யாசிப்பதோ அவர்களிடம்
    துவேஷமோ பாராட்டக்கூடாது.

    கடவுளே நம் இதயத்தில் இருக்கும்போது
    மனிதர்களிடம் சென்று ஏன் யாசிக்க வேண்டும்ம்??!!
    பக்தனுக்கு அவன் உபாசனா
    மூர்த்திதான் எல்லாம்..!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை
      அனைவரும் யோசிக்க வேண்டும்

      Delete
  6. அன்புள்ள அண்ணா,

    இன்றைய தங்களின் பதிவு வெற்றிகரமான 400வது பதிவாகும்.

    அதற்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete