Monday, May 6, 2013

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (4)


சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் (4)



சுவாமி சிவானந்தரின் 
சிந்தனைகள் (4)


வை.கோபாலகிருஷ்ணன்May 6, 2013 at 1:31 AM

//விருப்பு வெறுப்பற்று அனைவரும் அந்த இறைவனின் படைப்பென்று கருதி அன்பு செய்யும் பாங்கினை நாம் கைகொண்டால் இவ்வுலக வாழ்வு இனிக்கும்.//

இது கேட்க மிகவும் அருமையாகத்தான் உள்ள்து. இனிக்கும் நாள் விரைவில் வரட்டும். ;) மனித சமுதாயம் அச்சமின்றி வாழட்டும்.

அது என்றும் வராது

.நாம்தான் அந்த நிலைக்கு நம்மை 
தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

எப்படி என்ற கேள்வி எழுகிறது?

நாம் நாவுக்கரசரைபோல் மாறவேண்டும்.
நாம் பிரகலாதனை போல மாறவேண்டும்.
பட்டினத்தாரை போல மாறவேண்டும்.

நாத பிரம்மம் தியாகராஜா சுவாமிகளை போல் 
இறைவனுக்காக அனைத்தையும் துறக்க தயாரா?

இன்னும் எவ்வளவோ  மகான்கள் இறைவனை 
அடைவதற்காக பட்ட தியாகங்களில் 
ஒன்றையாவது நாம் அனுபவிக்க தயாரா?

அவர்களை பற்றி தெரிந்துகொள்ள கூட
 ஆர்வம் காட்டுவதில்லை இவ்வுலக மாந்தர்.

எப்படி இவர்களின் வாழ்க்கை இனிக்கும் ?

சுண்ணாம்பு காளவாயில் இட்டபோதும், 
கல்லை கட்டி கடலில் வீசி எறிந்த போதும்
 நமசிவாயமே துணை என்று 
நம்பிக்கை கொள்ள தயாரா?

யாமார்க்கும் குடியல்லோம், 
நமனை அஞ்சோம் என்று இருக்க தயாரா ?

ஹிரண்யகசிபு பிரகலாதனுக்கு கொடுத்த 
அத்தனை கொடுமைகளையும் கண்டு அஞ்சாம
ல் நாராயணனை நம்பி தன்னை காத்துகொண்ட 
அந்த நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

கழுவிலேற்றியபோதும் என் செயலாவது 
இனி ஒன்றில்லை எல்லாம் இனி அவன் செயல் 
என்று இருக்க தயாரா?

இருந்தால் இந்த உலக வாழ்வு  இனிக்கும். 
ஆனால் யாரும் அதற்க்கு தயாராக இல்லை.

எல்லையில்லா பாவங்களை செய்து கொண்டு
பணம் சேர்த்துக்கொண்டு பட்டுமெத்தையில்,
குளிரூட்டப்பட்ட அறையில் கண்களை மூடிக்கொண்டு
 ஜெபம் செய்வதாக பாவனை செய்து கொண்டு ,
காலஷேபம் கேட்டுவிட்டு, பிரசாதம் சாப்பிட்டுவிட்டு,
 உலக விஷயங்களில் மூழ்கிபோகும் 
இந்த மானிட கூட்டத்திற்கு. வாழ்வு 
சில மணி நேரம் இனிக்கலாம்

மற்ற புண்ணியவான்களுக்கு 
அது கூட இல்லை.

அவ்வளவுதான்.


4 comments:

  1. /// அவர்களை பற்றி தெரிந்துகொள்ள கூட ஆர்வம் காட்டுவதில்லை இவ்வுலக மாந்தர்... ///

    இதற்கு மேல் என்னத்தை சொல்வது...?

    சிந்திக்க வைக்கும் கேள்விகளுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. ஆஹா, என் கருத்தை வைத்தே ஓர் பதிவு தேத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.. ;)

    அருமையான விளக்கங்கள். நல்ல உதாரணங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. இதுக்கு பேர்தான்
    போட்டு வாங்குவது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களை
      பகிர்ந்தமைக்கும் நன்றி

      உங்கள் பரந்த திறந்த
      வெளிப்படையான
      கருத்துக்கள்
      எனக்கு மிகவும் பிடிக்கும்.
      .
      அதே நேரத்தில் ஒன்று
      சொல்லிக்கொள்ள
      விரும்புகிறேன்.

      எனக்கு தேத்தி ஆகவேண்டியது
      ஒன்றும் இல்லை.

      எதிலிருந்து வேணுமானாலும்
      எதையும் தேத்தலாம்

      ஏன் தேத்தமுடியாது ?
      என் இதய தெய்வம் இராமன்
      என்னோடு இருக்கும் போது

      நான் பெற்ற இன்பம் பெருக
      இவ்வையகம் என்ற நோக்கில்தான்
      எழுதுகிறேன்

      எழுச்சி பெறுபவர்கள் பெறட்டும்

      மற்றவர்கள் அவரவர் மனம் போன
      போக்கில் சென்று மகிழ்சியடையட்டும் .

      இவன் பணி அவன்
      ஆணைப்படி நடக்கிறது
      அவன் நிறுத்த சொன்னால்
      நிறுத்திவிடுவேன்.

      Delete