தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(37)
சங்கரனை,சிவபெருமானை
பன்முறை நமஸ்கரிக்கின்றேன்.
கீர்த்தனை-நாத -தநு மநிசம் -சங்காரம்(98)-ராகம் -சித்தரஞ்சனி-(மேள-19(2)-தாளம்-ஆதி
நாதத்தையே சரீரமாகவுடைய
சங்கரனை மனதினாலும் சிரசினாலும்
சதா நமஸ்கரிக்கின்றேன்
ஆனந்தத்தை அளிப்பதும் ,
வேதங்களுள் சிறந்ததுமான
சாம வேதத்தின் சாரமாகிய சங்கரனை
,பன்முறை வணங்குகிறேன்.
சத்யோஜாதம்,அகோரம்,தத்புருஷம்,ஈசானம்,
வாமதேவம்,ஆகிய ஐந்து முகங்களிலிருந்து பிறந்த
,ச,ரி,க,ம,ப,த,நி, என்ற ஏழு சிறந்த
ஸ்வரங்களின் சாஸ்திரத்தை உகப்பவனும்,
காலனை வென்றவனும்,
தூய உள்ளம் படைத்த தியாகராஜனை
பாலிப்பவனுமாகிய சிவபெருமானை
பன்முறை நமஸ்கரிக்கின்றேன்.
இராம பக்தராகிய ஸ்வாமிகள்
சிவபெருமானை போற்றி துதிக்கும்
பாங்கினை பாருங்கள்.
இராம பக்தர்கள் சிவ விஷ்ணு
பேதம் பார்க்ககூடாது
அப்படி பார்ப்பவர்கள்
உண்மையான இராம பக்தர்கள் அல்ல
என்று பல கீர்த்தனைகளில்
ஸ்வாமிகள் வலியுறுத்தியுள்ளார்
அருமையான சிந்தனைகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி. வை.கோபாலகிருஷ்ணன்.sir
Delete